என் மலர்
விளையாட்டு
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது.
கொழும்பு:
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து இரு அணிகளுக்கும் 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர்.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இலங்கை அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக ஆடி 76 ரன்னில் ஆட்டமிழந்தார். பானுகா ராஜபக்ச 65 ரன்னில் அவுட்டானார். இலங்கை அணிக்கு எக்ஸ்ட்ராஸ் மட்டுமே 30 ரன்கள் கிடைத்தது.
இறுதியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், சகாரியா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கவுதம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு அளிக்கப்பட்டது. தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணிக்கு எதிராக 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த கோவை அணியின் கங்கா ஸ்ரீதர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவர் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிதிஷ் ராஜகோபால் 45 ரன்கள் எடுத்தார். கோவை தரப்பில் தன்வார், விக்னேஷ், செல்வ குமரன் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. 18.1 ஓவரில் அந்த அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 175 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கங்கா ஸ்ரீதர் 74 ரன்களும் சாய் சுதர்சன் 57 ரன்களும் எடுத்தனர்.
52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த கங்கா ஸ்ரீதர் ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார்.
சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளவர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் வகையில் அகதிகள் ஒலிம்பிக் அணி என்ற அணியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கியது.
டோக்கியோ:
32-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து சென்றனர். போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் நாட்டின் தேசியக்கொடி முதலில் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் மற்ற நாடுகளின் வீரர், வீராங்கனைகள், அணிவகுத்து அரங்கினுள் நுழைந்தனர்.
இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்கும் அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்களும் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.

அகதிகள் ஒலிம்பிக் அணி 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் முதல்முறையாக பங்கேற்றது. போர் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளவர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் வகையில் அகதிகள் ஒலிம்பிக் அணி என்ற அணியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கியது.
இதன்மூலம், சொந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தங்கியுள்ள அகதிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த அணி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது. அகதிகள் ஒலிம்பிக் அணியில் 29 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியார்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், ரூபி திருச்சி வாரியார்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அமித் சாத்விக், முகுந்த் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
திருச்சி அணி வீரர்கள்: ஆதித்ய கணேஷ் (விக்கெட் கீப்பர்), முகுந்த், சுமந்த் ஜெயின், அமித் சாத்விக், அந்தோணி தாஸ், நிதிஷ் ராஜகோபால், மதிவாணன், சுனில் சாம், ரகில் ஷா (கேப்டன்), ஆகாஷ் சம்ரா, சரவண் குமார்.
கோவை அணி வீரர்கள்: கங்கா ஸ்ரீதர் ராஜு, கவின் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அஷ்வின் வேங்கடராமன், ஷாருக் கான் (கேப்டன்), முகிலேஷ், அபிஷேக் தன்வார், செல்வ குமரன், அஜித் ராம், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், இளங்கோவன் சீனிவாசன்.

விழாவின் முக்கிய அம்சமாக, போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து அரங்கினுள் வந்தனர்.
டோக்கியோ:
குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி வந்தனர்.
ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள், 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஹாக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்போட்டியின் அதிகாரப்பூர்வ துவக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டமாக விழா நடைபெறுகிறது.
ஜப்பான் அரசர் நருஹிட்டோ, பிரதமர் யோஷிஹிடே, ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
விழாவின் முக்கிய அம்சமாக, போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து அரங்கினுள் வந்தனர். முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு சென்றது. அதன்பின்னர் அகரவரிசைப்படி மற்ற நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர்.
ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள், 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஹாக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
ஒலிம்பிக்கில் இந்தியா தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் 18 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
டோக்கியோ:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில், 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டே இந்த போட்டி நடந்திருக்க வேண்டியது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கியது. விழாவின் முக்கிய அம்சமாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து வருகின்றனர்.
இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஒலிம்பிக்கில் இந்தியா தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்கள் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஆக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்கியது. கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டமாக விழா நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கியது. விழாவின் முக்கிய அம்சமாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து வருகின்றனர்.
இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மைதானமே அதிரும். ஆனால் கொரோனா மிரட்டலால் இந்த தடவை ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 68 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் சுமார் 1000 மிக முக்கிய பிரமுகர்கள் விழாவை கண்டுகளிக்கின்றனர்.

ஒலிம்பிக்கில் இந்தியா தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்கள் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஆக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
அதானு தாஸ் ரேங்கிங் பிரிவில் பின் தங்கியதால் தீபிகா குமாரியுடன் கலப்பு அணியில் பிரவீன் ஜாதவ் இணைந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பலப்பரீட்சை நடத்துகிறார்.
வில்வித்தை ரேங்கிங் சுற்றில் இந்திய அணி சார்பில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தரண்தீப் ராய் மற்றும் தீபிகா குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலப்பு அணி பிரிவில் தீபிகா குமார்- அதானு தாஸ் ஜோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. பெண்களுக்கான ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி 720-க்கு 663 புள்ளிகள் பெற்று 9-வது இடம் பிடித்தார்.
ஆண்கள் ரேங்கிங் சுற்றில் பிரவீன் ஜாதவ் 656 புள்ளிகள் பெற்று 31-வது இடத்தையும், அதானு தாஸ் 653 புள்ளிகள் பெற்று 35-வது இடத்தையும், தருண்தீப் ராய் 652 புள்ளிகள் பெற்று 37-வது இடத்தையும் பெற்றனர்.
அதானு தாஸைவிட பிரவீன் ஜாதவ் அதிக புள்ளிகள் பெற்றதால் சிக்கல் கலப்பு அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. தீபிகா குமாரி உடன் இணைந்து அதானு தாஸ் விளையாட வேண்டுமென்றால் ரேங்க் வரிசையில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும். இதனால் பிரவீன் ஜாதவ் உடன் இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்தியாவின் கலப்பு அணி சார்பில் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி கலந்து கொள்கிறது. இந்திய கலப்பு அணி சீன தைஃபேயின் டாங் (வீரர்)- லிங் (வீராங்கனை) ஜோடியை எதிர்கொள்கிறது.ஆண்கள் அணியில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் ஜோடி கஜகஸ்தான் ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.
இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்து புதுமுக வீரர்களுக்கு கடைசி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
3-வது மற்றும் கடைசி போட்டி தற்போது இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, சேத்தன் சகாரியா, கே. கவுதம், ராகுல் சாஹர் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள்.
ஒலிம்பிக் தொடக்க விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், குதிரையேற்றம் போட்டியில் ட்ரெஸ்சாஜ் பிரிவுக்கான குதிரைகள் ஆய்வு இன்று நிறைவடைந்தன.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சாஃப்ட்பால், மகளிர் கால்பந்து மற்றும் வில்வித்தை என போட்டிகளின் ஆரம்ப சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நாளை ( ஜூலை 24-ந்தேதி) குதிரையேற்றம் போட்டியில் நாளை ட்ரெஸ்சாஜ் கிராண்ட் பிரி அணி மற்றும் ஒற்றையர் பிரிவுக்கான முதல் நாள் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து குதிரைகளுக்குமான ஆய்வு இன்று நடைபெற்றது. தற்போது, அனைத்து குதிரைகளும் சரி பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதானு தாஸ் 653 புள்ளிகளும், தருண்தீப் ராய் 652 புள்ளிகளும் பெற்ற நிலையில், பிரவீன் ஜாதவ் 656 புள்ளிகள் பெற்று 31-வது இடத்தை பிடித்தார்.
வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவு ரேங்கிங் போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்தியா சார்பில் அதானு தாஸ், தருண்தீப் ஜாதவ், பிரவீன் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வீரர்களும் தலா 72 அம்புகள் எய்தல் வேண்டும். முதல் 36 அம்புகள் எய்த பின்னர் இடைவெளி விடப்படும். அதன்பின் மீதமுள்ள 36 அம்புகள் எய்தல் வேண்டும்.
பிரவீன் ஜாதவ் முதல் பாதியில் 329 புள்ளிகள் பெற்றார். இதில் 12 முறை 10 புள்ளிகள் பெற்றார். நான்கு முறை மையப்புள்ளியை (Xs) அவரது அம்பு தாக்கியது. 2-வது பாதியில் 327 புள்ளிகள் பெற்று, மொத்தம் 656 புள்ளிகளுடன் 31-வது இடத்தை பிடித்தார். மொத்தமாக 22 முறை 10 புள்ளிகள் பெற்றார். ஐந்து முறை மையப்புள்ளியை (Xs) அவரது அம்பு தாக்கியது.
அதானு தாஸ் முதல் பாதியில் 329 புள்ளிகளும், 2-வது பாதியில் 324 புள்ளிகள் என மொத்தம் 653 புள்ளிகள் பெற்று 35-வது இடத்தை பிடித்தார். 24 முறை 10 புள்ளிகள் பெற்றார். ஏழு முறை மையப்புள்ளியை (Xs) அவரது அம்பு தாக்கியது.
தருண்தீப் ராய் முதல் பாதியில் 323 புள்ளிகளும், 2-வது பாதியில் 329 புள்ளிகள் என மொத்தம் 652 புள்ளிகள் பெற்று 37-வது இடத்தை பிடித்தார். 26 முறை 10 புள்ளிகள் பெற்றார். ஆறு முறை மையப்புள்ளியை (Xs) அவரது அம்பு தாக்கியது.
31-வது இடத்தை பிடித்துள்ள பிரவீன் ஜாதவ், அடுத்த சுற்றில் (1/32) 34-வது இடத்தை பிடித்துள்ள தைவான் (ஆர்.ஓ.சி.) வீரர் கால்சனை எதிர்கொள்கிறார்.
35-வது இடத்தை பிடித்துள்ள அதானு தாஸ், 1/32 சுற்றில் 30-வது இடத்தை பிடித்த சீன தைஃபேயின் யு-செங் டெங்கை எதிர்கொள்கிறார்.
37-வது இடத்தை பிடித்துள்ள தருண்தீப் ராய், 1/32 சுற்றில் 28-வது இடத்தை பிடித்த உக்ரைன் வீரர் ஒலேக்சி ஹன்பின்-ஐ எதிர்கொள்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் தீபிகா குமாரி 9-வது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துடுப்பு படகு போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் கடைசி 3 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகள் ரிபிசாஜ் சுற்றுக்கு செல்கின்றனர்.
டோக்கியோ:
32-வது ஒலிம்பிக் போட்டி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு துவக்கவிழா நடைபெறுகிறது.
இதற்கிடையில், துவக்கவிழா இன்று நடைபெற உள்ள நிலையில் கடந்த 21-ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன. பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி போட்டிகள், தகுதிச்சுற்று போட்டிகள் என பல்வேறு கட்டங்களாக போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், துடுப்பு படகு போட்டியின் முதல்சுற்றுகள் இன்று நடைபெற்றது. ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் ஹீட் 6 பிரிவுகள், பெண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் ஹீட் 6 பிரிவுகள், ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 3 பிரிவுகள், பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 3 பிரிவுகள் ஆண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் ஹீட் 2 பிரிவுகள், பெண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் ஹீட் 2 பிரிவுகளாக இன்று போட்டி நடைபெற்றது.
துடுப்பு படகு போட்டி சிங்கிள் ஸ்கல்ஸ் (ஆண்கள் / பெண்கள்) 6 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 6 வீரர்/வீராங்கனைகள் என மொத்தம் 36 வீரர்/ வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்/ விராங்கனைகள் (மொத்தம் 18 பேர்) காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.
துடுப்பு படகு போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் கடைசி 3 இடங்களை பிடித்த வீரர்/ வீராங்கனைகள் ரிபிசாஜ் சுற்றுக்கு செல்கின்றனர். ரிபிசாஜ் பிரிவில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறலாம்.
துடுப்பு படகு போட்டி முடிவுகள்
ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் மற்றும் நாடுகள் விவரம்:
ஹீட் - 1
கிஜேடில் போர்ச் (நார்வே)
பெண்ட்ரஸ் பீட்டர்வெரி மோல்னர் (ஹங்கேரி)
லூகா வெத்ரின் ப்ரியரா (பிரேசில்)
ஹீட் - 2
ஸ்டிபென்ஸ் டோஸ்கஸ்(கீரிஸ்)
ஜோர்டன் பெரி (நியூசிலாந்து)
அல்வரோ டோரஸ் மசியஸ் (பெரு)
ஹீட் - 3
ஸ்வெரி நெல்சன் (டென்மார்க்)
குனரோ அல்பர்டோ டி மௌரோ (இத்தாலி)
லடிஸ்லாவா ஹயோவல்வ் (கஜகஸ்தான்)
ஹீட் - 4
டிர்வர் ஜோன்ஸ் (கனடா)
மிண்டகஸ் கிஷ்ஹோனிஸ் (லிதுவெனியா)
ஓனட் கஷக்லி (துருக்கி)
ஹீட் - 5
ஹோமீர் மார்டின் (குரோஷியா)
அலெக்சாண்டர் யாசோவ்கின் (ரஷிய ஒலிம்பிக் கமிட்டி)
கிரிஸ் நிவெர்சி (பிலிப்பைன்ஸ்)
ஹீட் - 6
ஒலிவ் சிட்லர் (ஜெர்மனி)
யுடா ரஹவா (ஜப்பான்)
அப்துல்ஹலித் ஹில்பனா (எகிப்து)
பெண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மற்றும் நாடுகள் விவரம்:
ஹீட் - 1
கீரா ஹோட்லர் (அமெரிக்கா)
டட்சியானா லிமோசிவ் (பெலாரஸ்)
நசானின் மலஇவ் (ஈரான்)
ஹீட் - 2
சண்ட்னா புஷ்புயூர் (அயர்லாந்து)
கினியா லிஷுஹா (மெக்சிகோ)
அனீடா யுர்டியூ (கிரீஸ்)
ஹீட் - 3
ஹனா பிரகஸ்டீன் (ரஷிய ஒலிம்பிக் கமிட்டி)
யன் ஜியங் (சீனா)
விரோனிகா டூரோ அரனா (பெரூடா ரிகா)
ஹீட் - 4
விக்டோரியா தோர்ன்லி (கிரேட் பிரிட்டன்)
ஜீனைன் மினின் (சுவிஸ்சர்லாந்து)
லோவிசா கிளாசன் (ஸ்வீடன்)
ஹீட் - 5
மெக்டலினா லோபிங் (ஆஸ்திரியா)
கர்லின் சீமென் (கனடா)
மெய்கி டைக்மென் (நபிபியா)
ஹீட் -6
இமா டுவிங் (நியூசிலாந்து)
அனா சாரா சோபியா ஸ்வாகர் (நெதர்லாந்து)
ஜூவானா அர்சிக் (செர்பியா)
ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் 3 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள்
ஹீட் - 1
பிரான்ஸ்
சீனா
ரஷிய ஒலிம்பிக் கமிட்டி
ஹீட் - 2
போலாந்து
சுவிஸ்சர்லாந்து
நியூசிலாந்து
ஹீட் - 3
நெதர்லாந்து
கிரேட் பிரிட்டன்
ருமேனியா
பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் 3 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள்
ஹீட் - 1
நியூசிலாந்து
அமெரிக்கா
பிரான்ஸ்
ஹீட் - 2
ரூமெனியா
கனடா
இத்தாலி
ஹீட் - 3
நெதர்லாந்து
லுதுவேனியா
ஆஸ்திரேலியா
குவாட்ருபெல் ஸ்கல்ஸ் பிரிவில் 2 ஹீட் சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் தலா 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு சுற்றிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி ஏ-க்கு தகுதி பெறுகின்றன.
ஆண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 2 இடம் பிடித்து இறுதி ஏ-பிரிவுக்கு தகுதி பெற்ற நாடுகள்
ஹீட் - 1
நெதர்லாந்து
ஆஸ்திரேலியா
ஹீட் - 2
போலாந்து
இத்தாலி
பெண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் - ஹீட் சுற்றுகளில் முதல் 2 இடம் பிடித்து இறுதி ஏ-பிரிவுக்கு தகுதி பெற்ற நாடுகள்
ஹீட் - 1
ஜெர்மனி

பெண்களுக்கான ஆர்ச்சரி ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி துல்லியமான இலக்கு புள்ளியை (Xs) 13 முறை சரியாக குறிவைத்து அம்பு எய்தினார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை பிரிவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ரேங்கிங் சுற்று இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை உள்பட 64 பேர் கலந்து கொண்டார்கள். ஒரு சுற்றுக்கு 6 அம்பு என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர்.
இதில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை பிடித்தார். அவர் 30 முறை 10 புள்ளிகள் பெற்றார். மேலும் 13 முறை துல்லியமான (Xs) இலக்கை அம்பு தாக்கியது.
கொரிய வீராங்கனை அன் சன் 680 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இது ஒலிம்பிக் போட்டியின் சாதனையாகும்.
28-ந்தேதி நடைபெறும் நாக்அவுட் சுற்றில் (1/32) தீபிகா குமாரி பூடான் வீராங்கனை கர்மாவை எதிர்கொள்கிறார்.