என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்கள் அணி
    X
    ஆண்கள் அணி

    வில்வித்தை: இந்திய ஆண்கள் அணி, கலப்பு அணி மோதும் போட்டிகள் குறித்த முழு விவரம்

    அதானு தாஸ் ரேங்கிங் பிரிவில் பின் தங்கியதால் தீபிகா குமாரியுடன் கலப்பு அணியில் பிரவீன் ஜாதவ் இணைந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பலப்பரீட்சை நடத்துகிறார்.
    வில்வித்தை ரேங்கிங் சுற்றில் இந்திய அணி சார்பில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தரண்தீப் ராய் மற்றும் தீபிகா குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கலப்பு அணி பிரிவில் தீபிகா குமார்- அதானு தாஸ் ஜோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. பெண்களுக்கான ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி 720-க்கு  663 புள்ளிகள் பெற்று 9-வது இடம் பிடித்தார்.

    ஆண்கள் ரேங்கிங் சுற்றில் பிரவீன் ஜாதவ் 656 புள்ளிகள் பெற்று 31-வது இடத்தையும், அதானு தாஸ் 653 புள்ளிகள் பெற்று 35-வது இடத்தையும், தருண்தீப் ராய் 652 புள்ளிகள் பெற்று 37-வது இடத்தையும் பெற்றனர்.

    அதானு தாஸைவிட பிரவீன் ஜாதவ் அதிக புள்ளிகள் பெற்றதால் சிக்கல் கலப்பு அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. தீபிகா குமாரி உடன் இணைந்து அதானு தாஸ் விளையாட வேண்டுமென்றால் ரேங்க் வரிசையில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும். இதனால் பிரவீன் ஜாதவ் உடன் இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

    கலப்பு அணிஅதன்படி இந்தியாவின் கலப்பு அணி சார்பில் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி கலந்து கொள்கிறது. இந்திய கலப்பு அணி சீன தைஃபேயின் டாங் (வீரர்)- லிங் (வீராங்கனை) ஜோடியை எதிர்கொள்கிறது.

    ஆண்கள் அணியில் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் ஜோடி கஜகஸ்தான் ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.
    Next Story
    ×