என் மலர்
விளையாட்டு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 4-ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
புதுடெல்லி:
இந்தியா, கவுண்டி செலக்ட் லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் நடந்தது. இதில் வீரர்கள் பற்றாக்குறை காரணமாக கவுண்டி லெவன் அணிக்காக களம் இறங்கிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2-வது நாளில் பேட்டிங் செய்தபோது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து கைவிரலில் தாக்கியது.
இதில் காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது காயம் குணமடைய குறைந்தபட்சம் 5 வாரம் பிடிக்கும் என்பதால் அவர் வரும் 4-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.
இதேபோல் ,இந்த போட்டியில் எதிரணிக்காக ஆடிய இந்திய வலைப்பயிற்சி பவுலர் அவேஷ்கான் பெருவிரலில் காயம் அடைந்தார். காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் இருவரும் நாடு திரும்ப இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஈடில்லா ஈர்ப்பு சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு.மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உலக போர் காரணமாக 3 முறை ரத்தானது.
கடைசியாக 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது.இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கடந்த ஆண்டே இந்த போட்டி நடந்திருக்க வேண்டியது. கொரோனா அரக்கனின் கொடூர தாண்டவத்தால் முதல் முறையாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்க உள்ளது.
இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள்.
ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழா 3 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது.
ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும். கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம் வந்த ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கி விடும்.
விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து செல்வார்கள். இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தொடக்க விழாவில் இந்திய தரப்பில் 6 அதிகாரிகள், 22 வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கையில் சற்று மாற்றம் இருக்கலாம். எப்படியும் தொடக்க விழா உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு மேல் தாண்டிவிடும் என்பதால், மறுநாள் துப்பாக்கி சுடுதல், ஆக்கி போன்ற போட்டிகளில் களம் காணும் இந்தியர்கள் சோர்வடையக்கூடும்.
அதனை கருத்தில் கொண்டு அவர்களை தொடக்க விழாவுக்கு செல்ல வேண்டாம் என்ற இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வழக்கமாக ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மைதானமே அதிரும். ஆனால் கொரோனா மிரட்டலால் இந்த தடவை ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஒலிம்பிக் நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.அதே சமயம் 68 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் ஏறக்குறைய ஆயிரம் மிக முக்கிய பிரமுகர்கள் விழாவை கண்டுகளிக்க உள்ளனர்.
இதில் ஜப்பான் மன்னர் நருஹிட்டோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோரும் அடங்குவர்.
பரவசமடைந்தாலும், இன்னொரு புறம் கொரோனா பரவலை நினைத்து ஜப்பானியர்கள் பீதியிலேயே உள்ளனர். அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு இருந்த போதிலும் டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் புதிதாக 1,832 பேருக்கு தொற்று பரவியது. கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி ஒலிம்பிக் குழுவிலும் கொரோனா ஊடுருவி விட்டது. ஒலிம்பிக் தொடர்புடைய பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சில வீரர்கள் என்று 80-க்கும் மேற்பட்டோர் கொரோனாவில் சிக்கி இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். வீரர், வீராங்கனைகளுக்கு தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிக்காக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ள ஜப்பான் அரசாங்கம் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி பெருமையை நிலைநாட்டுவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது. எனவே அடுத்த 17 நாட்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல, போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டிக்கும் கடும் சவால் நிறைந்ததாகவே அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக அமெரிக்கா 613 பேரை களம் இறக்குகிறது. அவர்களே இந்த தடவையும் பதக்கவேட்டையில் முதல்வனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.இந்திய தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் டோக்கியோவுக்கு படையெடுத்துள்ளனர். அவர்கள் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.
இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஆக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 2 பதக்கம் மட்டுமே கிடைத்தது. இந்த முறை நிச்சயம் அதை விட கூடுதலாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடுத்த 17 நாட்களுக்கு இந்த பூமிபந்தின் ஒட்டுமொத்த கண்களும் டோக்கியோ நோக்கியே திரும்பியிருக்கும்.
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மதுரை அணி தரப்பில் கவுசிக், ராமலிங்கம் ரோகித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சென்னை:
மதுரை அணி தரப்பில் கவுசிக், ராமலிங்கம் ரோகித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கிரண் ஆகாஷ், சிலம்பரசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற மதுரை அணி, திண்டுக்கல் அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி அழைத்தது. அதன்படி பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 96 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மணி பாரதி 26 ரன்கள் சேர்த்தார். ஹரி நிஷாந்த் 19 ரன்களும், விவேக் 11 ரன்களும் அடித்தனர்.
மதுரை அணி தரப்பில் கவுசிக், ராமலிங்கம் ரோகித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கிரண் ஆகாஷ், சிலம்பரசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.
பெண்களுக்கான சாஃப்ட்பால் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், தற்போது வரை ஆறு போட்டிகள் முடிவடைந்துள்ளன.
டோக்கியோ:-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அதிகாரப்பூர்வமாக நாளை தொடங்கும் நிலையில், நேற்று தொடக்க சுற்றாக மகளிர் சாஃப்ட்பால் விளையாட்டு தொடங்கியது. இன்று மூன்று ஓபனிங் ரவுண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதின. இப்போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் அமெரிக்கா 1 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாவதாக, மெக்சிகோ - ஜப்பான் அணிகள் மோதியதில், 8 இன்னிங்ஸ்கலில் ஜப்பான் 3 ரன்களில் வெற்றி பெற்றது. இதில், மெக்சிகோ 2 ரன்கள் எடுத்தது.
மூன்றாவதாக, இத்தாலி - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆஸ்திரேலியா ஒரு ரன் எடுத்து வெற்றி பெற்றது. இத்தாலி ரன் அடிக்கவில்லை.
நேற்றைய ஆட்டத்தில் ஜப்பான், அமெரிக்கா, கனடா அணிகள் வெற்றி பெற்றன.
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி, திண்டுக்கல் அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி அழைத்தது. அதன்படி திண்டுக்கல் அணி விளையாடி வருகிறது. துவக்க வீரர்களாக ஹரி நிஷாந்த், அருண் ஆகியோர் களமிறங்கினர்.
திண்டுக்கல் அணி வீரர்கள்: ராஜாமணி சீனிவாசன் (கேப்டன்), ஹரி நிஷாந்த், அருண், மோகித் ஹரிஹரன், மணி பாரதி (கீப்பர்), விவேக், சஞ்சய், சிலம்பரசன், குர்ஜாப்னீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், சுவாமிநாதன்.
மதுரை அணி வீரர்கள்: சதுர்வேத் (கேப்டன்), அருண் காத்திக் (கீப்பர்), ராஜ்குமார், அனிருத் சீதாராம், ஜெகநாதன் கவுசிக், ஷாஜகான், மிதுன், ராமலிங்கம் ரோகித், ஆர்.சிலம்பரசன், கிரண் ஆகாஷ், ஆயுஷிக் ஸ்ரீனிவாஸ்.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் அரைசதம் அடித்து வெற்றி தேடித்தந்த இந்திய வீரர் தீபக் சாஹர், பயிற்சியாளர் டிராவிட் தனது பேட்டிங் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.
கொழும்பு:
கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான பரபரப்பான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இலங்கை நிர்ணயித்த 276 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 193 ரன்களுடன் பரிதவித்தது. இந்த சிக்கலான சூழலில் கைகோர்த்த தீபக் சாஹரும், புவனேஷ்வர்குமாரும் இலங்கை பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன் சேகரித்ததுடன் 49.1 ஓவர்களில் இலக்கை எட்ட வைத்து ஆச்சரியப்படுத்தினர். தீபக் சாஹர் 69 ரன்களுடனும் (82 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), புவனேஷ்வர்குமார் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இலங்ைகக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக 9-வது முறையாக கைப்பற்றி இருக்கிறது. அத்துடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 93-வது வெற்றியாக இது அமைந்தது. குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் குவித்த அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவும், இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானும் தலா 92 வெற்றி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த 28 வயதான தீபக் சாஹர் கூறுகையில், ‘ஏறக்குறைய இது போன்ற ஒரு இன்னிங்சை விளையாட வேண்டும் என்பது எனது சிறு வயது கனவாகும். தேசத்துக்கு இதைவிட சிறந்த வழியில் வெற்றி தேடித்தர முடியாது. களம் இறங்குவதற்கு முன்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னிடம், எல்லா பந்துகளையும் விளையாடும்படி கூறினார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய ‘ஏ’ அணிக்காக சில ஆட்டங்களில் பேட்டிங் செய்து இருக்கிறேன். என் திறமை மீது அவருக்கு நம்பிக்கை உண்டு. பேட்டிங்கில் 7-வது வரிசையில் நன்றாக ஆடக்கூடிய அளவுக்கு இருப்பேன் (ஆனால் 8-வது வரிசையில் தான் ஆடினார்) என்று என்னிடம் கூறினார். வருகிற ஆட்டங்களில் நான் பேட்டிங் செய்ய அவசியம் வராது என்று நம்புகிறேன்.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரை தொடக்கத்தில் ஒவ்வொரு பந்துகளாக கவனம் செலுத்தி விளையாடினேன். ரன் தேவை 50-க்கு கீழ் வந்ததும், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு ‘ரிஸ்க்’ எடுத்து சில ஷாட்டுகளை ஆடினேன்’ என்றார்.
டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நமது வீரர்களின் சிறந்த வெற்றி இது. கடினமான கட்டத்தில் இருந்து அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பியது வியப்புக்குரிய முயற்சி. ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் (53 ரன்) பேட்டிங் அருமை’ என்று பாராட்டியுள்ளார்.
இந்தியா-இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.
ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான்.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 125 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள். ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான். மொத்தம் 18 விளையாட்டுகளில் பதக்கத்துக்காக மல்லுகட்ட காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், வில்வித்தை, ஆக்கி ஆகிய பந்தயங்களில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் களத்தில் கால்பதிக்கும் 125 இந்தியர்களின் முழு பட்டியல் வருமாறு:-
வில்வித்தை
ஆண்கள் ரீகர்வ் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு: தருண்தீப் ராய், அதானு தாஸ், பிரவின் ஜாதவ்
பெண்களுக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவு:
தீபிகா குமாரி
தடகளம்
நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் ( இருவரும் ஈட்டி எறிதல்)
பாவ்னா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி (பெண்களுக்கான 20 கிலோமீட்டர் நடைபந்தயம்)
கே.டி.இர்பான், சந்தீப் குமார், ராகுல் ரோகிலா (3 பேரும் 20 கிலோமீட்டர் நடைபந்தயம்)
குர்பிரீத் சிங் (50 கிலோமீட்டர் நடைபந்தயம்)
அபினாஷ் சேபிள் (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ்)
ஸ்ரீசங்கர் ( நீளம் தாண்டுதல்)
கமல்பிரீத் கவுர், சீமா பூனியா (பெண்களுக்கான வட்டு எறிதல்)
தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்)
டுட்டீ சந்த் (பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம்)
எம்.பி.ஜாபிர் (400 மீட்டர் தடை ஓட்டம்)
அன்னுராணி ( பெண்களுக்கான ஈட்டி எறிதல்)
அமோல் ஜேக்கப், ஆரோக்ய ராஜீவ், முகமது அனாஸ், நாகநாதன், நோவா நிர்மல் தோம் (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
சர்தாக் பாம்ப்ரி, அலெக்ஸ் அந்தோணி, ரேவதி, சுபா, தனலட்சுமி (கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
பேட்மிண்டன்
பி.வி.சிந்து (பெண்கள் ஒற்றையர்), சாய்பிரனீத் (ஒற்றையர்), சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி (இரட்டையர்)
குத்துச்சண்டை
ஆண்கள் பிரிவு : சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்), ஆஷிஷ்குமார் (75 கிலோ), விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ), அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ)
பெண்கள் பிரிவு
மேரிகோம் (51 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ).
குதிரையேற்றம்
பவாத் மிர்சா
வாள்வீச்சு
பவானிதேவி (பெண்களுக்கான சாப்ரே)
கோல்ப்
அனிர்பன் லஹிரி, அதிதி அசோக், உதயன் மானே
ஜிம்னாஸ்டிக்ஸ்
பிரனதி நாயக் (பெண்களுக்கான ஆர்டிஸ்டிக்)
ஆக்கி
ஆண்கள்: மன்பிரீத் சிங் (கேப்டன்), பி.ஆர்.ஸ்ரீஜேஷ், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர்பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, சுமித், ஷம்ஷிர் சிங், தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், லலித்குமார் உபாத்யாய், மன்தீப்சிங், வருண்குமார், சிம்ரன்ஜித் சிங்.
பெண்கள்: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா பூனியா, தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா, நிஷா, நேஹா கோயல், சுஷிலா சானு, மோனிகா மாலிக், நவ்ஜோத் கவுர், சலிமா, நவ்னீத் கவுர், லால்ரம் சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி, ரீனா கோகர், நமிதா தோப்போ.
ஜூடோ
சுஷிலா தேவி (பெண்கள் 48 கிலோ)
துடுப்பு படகு
அர்ஜூன் லால் ஜாட்- அரவிந்த் சிங் (ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ்)
பாய்மர படகு
நேத்ரா குமணன் (பெண்களுக்கான லேசர் ரேடியல்), விஷ்ணு சரவணன் (லேசர் ஸ்டான்டர்டு), கணபதி- வருண் தக்கர் (ஸ்கிப் 49இஆர்)
துப்பாக்கி சுடுதல்
தனிநபர் பிரிவு (பெண்கள்):
அஞ்சும் மோட்ஜில் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), தேஜஸ்வினி சவாந்த் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), அபூர்வி சண்டிலா (10 மீட்டர் ஏர் ரைபிள்), இளவேனில் (10 மீட்டர் ஏர் ரைபிள்), மானு பாகெர் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்), யஷாஸ்வினி தேஸ்வால் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), ராஹி சர்னோபாத் (25 மீட்டர் பிஸ்டல்)
தனிநபர் பிரிவு (ஆண்கள்):
திவ்யான்ஷ் சிங் பன்வார் (10 மீட்டர் ஏர் ரைபிள்), சஞ்சீவ் ராஜ்புத் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), சவுரப் சவுத்ரி (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), அபிஷேக் வர்மா (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), தீபக்குமார் (10 மீட்டர் ஏர் ரைபிள்), அன்காட் வீர்சிங் பஜ்வா (ஸ்கீட்), மைராஜ் அகமத்கான் (ஸ்கீட்)
கலப்பு அணிகள் பிரிவு:
10 மீட்டர் ஏர் ரைபிள்: திவ்யான்ஷ் சிங் பன்வார், இளவேனில், தீபக் குமார், அஞ்சும் மோட்ஜில்
10 மீட்டர் ஏர் பிஸ்டல்: சவுரப் சவுத்ரி, மானு பாகெர், அபிஷேக் வர்மா, யஷாஸ்வினி தேஸ்வால்.
நீச்சல்
சஜன் பிரகாஷ் (200 மீட்டர் பட்டர்பிளை), ஸ்ரீஹரி நடராஜ் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), மானா பட்டேல் (பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்)
டேபிள் டென்னிஸ்
ஒற்றையர் பிரிவு: சரத்கமல் , சத்யன், மனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி. கலப்பு இரட்டையர்: சரத்கமல்-மனிகா பத்ரா
டென்னிஸ்
சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா (பெண்கள் இரட்டையர்), சுமித் நாகல் (ஒற்றையர்)
பளுதூக்குதல்
மீராபாய் சானு (பெண்களுக்கான 48 கிலோ)
மல்யுத்தம்
ஆண்கள்
ரவி தாஹியா (57 கிலோ பிரீஸ்டைல்), பஜ்ரங் பூனியா (65 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ)
பெண்கள்
வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), சீமா பிஸ்லா (50 கிலோ).
டிஎன்பிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணிக்கு எதிராக நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய திருச்சி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அமித் சாத்விக் 71 ரன்கள் விளாசினார்.
ஆதித்ய கணேஷ் 33 ரன்கள், அந்தோணி தாஸ் 35 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர். இதையடுத்து 152 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய நெல்லை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நெல்லை அணி, மீதமுள்ள விக்கெட் காப்பாற்ற கடுமையாக போராடியது. 6வது விக்கெட் ஜோடியான பாபா இந்திரஜித்-சஞ்சய் யாதவ் நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடினர். இதனால் ஓரளவு நம்பிக்கை பிறந்தது.
ஆனால், சஞ்சய் யாதவ் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். பாபா இந்திரஜித் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்ற
வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, நெல்லை அணி 13.4 ஓவர்களில் 77 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில்
அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி 2 புள்ளிகளைப் பெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
டிஎன்பிஎஸ் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய திருச்சி அணி 151 ரன்கள் சேர்த்தது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தப்படுகிறது. முதல் இரண்டு ஆட்டங்கள் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டு, பங்கேற்ற அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

15 ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் சரிந்தன. அதன்பின்னர் அமித் சாத்விக்-ஆதித்ய கணேஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அமித் சாத்விக் 71 ரன்களிலும், ஆதித்ய கணேஷ் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஆகாஷ் சம்ரா ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். அதிரடியாக ஆடிய அந்தோணி தாஸ், 35 ரன்கள் (நாட் அவுட்) குவிக்க, திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 152 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய நெல்லை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நெல்லை அணி, மீதமுள்ள விக்கெட் காப்பாற்ற கடுமையாக போராட வேண்டியிருந்தது. 6வது விக்கெட் ஜோடியான பாபா இந்திரஜித்-சஞ்சய் யாதவ் நிதானமாக ஆடினர்.

இந்நிலையில் மூன்றாவது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. திருச்சி அணி பேட்டிங்கை தொடங்கியது. துவக்க வீரர் அமித் சாத்விக் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் முகுந்த் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் நிதிஷ் ராஜகோபால் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணி 15 ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தப்படுகிறது. முதல் இரண்டு ஆட்டங்கள் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டன. பங்கேற்ற அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. திருச்சி அணி பேட்டிங்கை தொடங்கியது. துவக்க வீரர் அமித் சாத்விக் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் முகுந்த் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் நிதிஷ் ராஜகோபால் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
15 ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் சரிந்தன. அதன்பின்னர் அமித் சாத்விக்குடன் கீப்பர் ஆதித்ய கணேஷ் இணைந்தார்.

2032ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்துவது தொடர்பாக இன்று டோக்கியோவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
டோக்கியோ:
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து, இந்தோனேசியா, ஹங்கேரி, ஆஸ்திரேலியா, சீனா, கத்தார், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இவற்றை பரிசீலனை செய்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை தேர்வு செய்தது. இதற்கு ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகக் குழு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், 2032ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்துவது தொடர்பாக இன்று டோக்கியோவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சர்வதேச ஒலிம்பிக் சங்க உறுப்பினர்கள் வாக்கெளித்தனர்.
மொத்தம் 80 வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், 77 வாக்குகள் பதிவாகின. பெரும்பான்மைக்கு 39 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரிஸ்பேனில் போட்டியை நடத்த 72 பேர் ‘ஆம்’ என்று வாக்களித்தனர். 5 பேர் மட்டும் ‘இல்லை’ என்று வாக்களித்தனர். இதையடுத்து, 2032ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பிரிஸ்பேன் நகரம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும், பிரிஸ்பேனில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஆஸ்திரேலியா ஏற்கனவே இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளது. 1956ல் மெல்போர்னிலும், 2000ல் சிட்னியிலும் ஒலிம்பிக் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
இலங்கைக்குப் பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்ற நிலையில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுத் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 275 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் சாரித் அஸலாங்கா அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்காக சாஹல், அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரித்வி ஷா, 13 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற, கேப்டன் ஷிகர் தவான் 29 ரன்களுக்குப் பெவிலியன் திரும்பினார். அதற்கடுத்து வந்த இஷன் கிஷன், 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து வந்த மணிஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சற்று நிதானமாக பேட்டிங் செய்து முறையே 37 மற்றும் 53 ரன்கள் எடுத்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் முகாமிட்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள், இரண்டாவது ஒருநாள் போட்டியை உற்சாகம் ததும்ப பார்த்துள்ளனர். இது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

ஆனால் அவர்களும் விக்கெட்டுகளை இழக்க கடைசியில் தீபக் சஹார் மற்றும் புவ்னேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர். கடைசி ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. தீபக் சஹார் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.