என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கா ஸ்ரீதர்
    X
    கங்கா ஸ்ரீதர்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணிக்கு எதிராக 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த கோவை அணியின் கங்கா ஸ்ரீதர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    20 ஓவர் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிதிஷ் ராஜகோபால் 45 ரன்கள் எடுத்தார். கோவை தரப்பில் தன்வார், விக்னேஷ், செல்வ குமரன் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 172 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. 18.1 ஓவரில் அந்த அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 175 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கங்கா ஸ்ரீதர் 74 ரன்களும் சாய் சுதர்சன் 57 ரன்களும் எடுத்தனர்.

    52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த கங்கா ஸ்ரீதர் ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார்.

    Next Story
    ×