என் மலர்
புதுச்சேரி
புதுவையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவையில் குறைந்திருந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு இரட்டை இலக்கத்துக்கு மாறி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 73 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏனாமினை தவிர மற்ற பிராந்தியங்களிலும் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 59 பேர், வீடுகளில் 219 பேர் என 278 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 9 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 2.68 சதவீதமாகவும், குணமடைவது 98.34 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 1,809 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 681 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 14 லட்சத்து 15 ஆயிரத்து 406 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
தொற்று பரவலானது புதுவை மாநிலத்தில் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பிற மாநிலங்களைப்போல் புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தொற்று பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள வல்லவன், ஏற்கனவே வகித்து வந்த உள்ளாட்சித்துறை, கலால்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, கலால்துறை ஆணையர் பொறுப்பினையும் தொடர்ந்து கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டராக பூர்வா கார்க் பணியாற்றி வந்தார். அவர் சமீபத்தில் சண்டிகருக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய கலெக்டராக வல்லவன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள வல்லவன், ஏற்கனவே வகித்து வந்த உள்ளாட்சித்துறை, கலால்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, கலால்துறை ஆணையர் பொறுப்பினையும் தொடர்ந்து கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவினை அரசின் சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் வல்லவன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

காரைக்கால் வேளாண் கல்லூரியில் 23 மாணவ-மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி விடுதியில் புத்தாண்டு கொண்டாடியதால் தொற்று பரவியது.
கோட்டுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சுரக்குடியில் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் தனித்தனியாக கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விடுதி பெண் ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல், உடல்வலி போன்ற கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில் கல்லூரி விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 13 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி அரசு நலவழித்துறை காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மேற்பார்வையில், மருத்துவக்குழுவினர் வேளாண் அறிவியல் கல்லூரிக்கு சென்று, பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தி வருகின்றனர். இதில் கல்லூரி ஊழியர் ஒருவருக்கு தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேளாண் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள 23 மாணவ-மாணவிகளுக்கு தொற்று பரவி இருப்பது மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வேளாண் கல்லூரியை தற்காலிகமாக மூடுவது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நவீன சமையல் கூடம் திறக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் மதிய உணவு தயாரித்து அளிக்கும் பணியை அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்தது. இதையடுத்து அந்த நிறுவனம் புதுவை லாஸ்பேட்டையில் மைய சமையல் கூடத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.
இதற்கு நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவற்றின் ஆதரவோடு நவீன சமையல்கூடம் அமைக்கப்பட்டது. இந்த நவீன சமையல்கூட திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு அட்சய பாத்திரம் நிறுவன துணைத்தலைவர் சஞ்சலபதி தாசா தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் புதிய சமையல் கூடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் மாணவர்க ளோடு அமர்ந்து உணவருந்தினர்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
புதிய சமையல்கூடத்தில் ஒரு லட்சம் மாணவர் களுக்கு உணவு சமைக்க கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை சுத்தமாக கழுவி எந்திரங்கள் மூலம் சுகதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது.
புதுவை பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரத்து 800 மாணவர் களுக்கு இங்கிருந்து உணவு வழங்கப்படும். இங்கிருந்து உணவை சூடாக பரிமாற 40 இன்ஸ்லேட்டர் வாகனங்கள் ஹைட்ராலிக் வசதிகளுடன் இயக்கப்பட உள்ளது.
இனிப்பு பொங்கல், வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், கொண்டைக்கடலை குருமா, உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவை மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. தொடர்ந்து சாதம், அந்தந்த பருவத்துக்கேற்ப பொரியல், சாம்பார், சுண்டல், தயிர் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
நவீன சமையல் கூடத்தை திறந்து வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:&
அட்சய பாத்திரம் நிறுவனம் மூலமாக 50 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு அளிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். தூய்மையான உணவு சமைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு மிகுந்த ஊட்டச்சத்தினை அளிக்கும். குழந்தைகளுக்கு கொரோனா காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவு தேவை. ஊட்டச்சத்து உணவு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதற்காக ஒத்துழைப்பு அளித்து வரும் முதல்-அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பாராட்டுகிறேன். புதுவை அரசு தற்போது மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கி இருக்கிறது குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு கவர்னர் கூறினார்.
திட்டத்தின் தொடக்க விழா நடந்தாலும், மாணவர்களுக்கு உணவு வழங்கும் பணியை நிர்வாகத்தோடு பேசி அரசு தேதி அறிவிக்கும் என தெரிகிறது.
புதுவை பல்கலைக்கழகத்தை கண்டித்து மாணவர் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
ஜனநாயக மாணவர் இயக்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க செயலாளர் பிரவீன்குமார் வரவேற்றார். பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த எழிலன், இளவரசன், ஜெயபிரகாஷ், சுவாமிநாதன், கல்யாணசுந்தரம், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எதிர்கட்சித்தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், மாணவர் சங்க அகில இந்திய தலைவர் சானு, மார்க்சிஸ்டு சுதா சுந்தர்ராமன், கம்யூனிஸ்டு (எம்.எல்.) பாலசுப் பிரமணியம், ம.தி.மு.க. கபிரியேல், திராவிடர் கழகம் சிவவீரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆதிரை நன்றி கூறினார்.
புதுவை மத்திய பல்கலைக்கழக கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான ஜனநாயக விரோத நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும். பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட 25 சதவீத கல்வி கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்.
புதுவை மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவிலும் 25 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மத்திய அரசின்ங்கள் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு திட்டஏற்படுத்தப்பட்டது.
புதுச்சேரி:
மத்திய அரசின் மீன்வளத் துறை அமைச்சகம் மூலம் பிரதமரின் மத்யஸ்த சம்பதா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் குறித்து மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசின் மீன்வளத்துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் இணைந்து பங்குதாரர்களின் விழிப்புணர்வு கூட்டத்தை மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடத்தியது.
மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி வர வேற்றார். மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய அரசின் 18 திட்டங்கள் குறித்த சந்தேகங்கள், திட்ட மானியம், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள், மத்திய அரசின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மீன்பிடிப்பது முதல் நுகர்வோர் வரை தொடர் வழிகாட்டு உதவி, மீன்வள மேலாண்மை கூட்டமைப்பு, மீனவர்கள் நலன் குறித்து துணை, உதவி இயக்குனர்கள் விளக்கினர். மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.
கொரோனா வேகமாக பரவுவதால் மக்கள் கூடுவதை தடை செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வந்த 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டதாக தி.மு.க. அரசு அறிவித்துள்ளதை புதுவை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
புதுவையில் 54 சதவீதத்தினர் மட்டுமே 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். புதுவையில் கொரோனோ வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசின் அறிவுரைக்கு ஏற்ப புதுவை அரசு செயல்பட வேண்டும்.
கடந்த காலத்தை போல நாள்தோறும் குறைந்தது 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்த வேண்டும். ஒமைக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகளை பெங்களுரூக்கு அனுப்புவதால் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே உருமாறும் மரபணு பரிசோதனைக் கூடத்தை புதுவையில் நிறுவ வேண்டும். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ளது. மக்களை காப்பாற்ற புதுவை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். பஸ் நிலையம், மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகம் கூடுவதை தடை செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி:
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1.1.2022 தகுதி நளாக கொண்டு புதுவையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்தது.
இந்த பணி முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் வெளியிட்டார்.
இதை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதுவை மாநிலத்தில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 110 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 35 ஆயிரத்து 225 பெண் வாக்காளர்கள், 3&ம் பாலினத்தினர் 120 பேர் என மொத்தம் 10 லட்சத்து 10 ஆயிரத்து 455 வாக்காளர்கள் உள்ளனர்.
புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 302 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 11 ஆயிரத்து 215 பெண் வாக்காளர்கள், 3ம் பாலினத்தினர் 99 பேர் என மொத்தம் 7 லட்சத்து 78 ஆயிரத்து 616 பேர் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் விடுமுறை நாட்கள் தவிர்த்து 7 நாட்கள் அனைத்து ஓட்டுச்சாவடிகள், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் தெரிவித்துள்ளார்.
யோகா நோய்களுக்கு மருந்தாகும் என கவர்னர் தமிழிசை கூறினார்.
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாத்துறை சார்பில் 27-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் தொடங்கியது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவுக்கு தலைமை வகித்தார்.
கவர்னர் தமிழிசை யோகா திருவிழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
யோகா உடலையும், உள்ளத்தையும் பாதுகாக்கும். புதுவை சித்தர்களின் பூமி. யோகப்பயிற்சி செய்து தான் சித்தர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்கள்.
புதுவையில் 27 ஆண்டாக உலக யோகா திருவிழா நடக்கிறது என்பது வெகு காலத்துக்கு முன்பே யோகா பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. யோகா கற்றவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் மனது பாதிக்கப்படாமல் மீண்டு வருவார்கள். யோகா உடலுக்கும், மனதுக்கும் பாதுகாப்பு தருகிறது.
யோகா நிச்சயமாக நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. யோகா கற்றுக் கொண்டால் இளமையாக இருக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இந்திய யோக கலையை உலகம் முழுவதும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடுகின்றனர். இதற்கு பிரதமருக்கு நன்றி கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்&அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவையில் சுற்றுலா மூலம் வருவாயை பெருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். வார இறுதியில் பல மாநில மக்கள் இங்கு வந்து மகிழ்ந்து செல்கின்றனர். உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் தொற்று நம்மை தாக்காது என்ற நிலை உள்ளது.
நோயற்ற வாழ்வு வாழ யோகா அடிப்படையாக உள்ளது. புதுவையை மேம்படுத்த அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவையின் அனைத்து இடங்களையும் சுற்றுலாத்தலமாக கொண்டு வரவேண்டும்.
புதுவை பழமையான நகரம். பழமையான கட்டிடங்கள் உள்ளன. இப்போது நமக்குள்ள சிரமம் பழமையான கட்டிடங்களை பாதுகாப்பதுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து பழமையான கட்டிடங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை நாம் எடுத்து வருகிறோம். தொடர்ந்து எடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், பாஸ்கர், சுற்றுலாத்துறை செயலர் அருண், இயக்குனர் பிரியதர்ஷனி உள்பட பலர் உடனிருந்தனர்.
வருகிற 7-ந்தேதி வரை யோகா திருவிழா பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர். நாள்தோறும் யோகாசன போட்டிகள், செயல்விளக்கம் நடக்கிறது.
நல்வாழ்வு கண்காட்சி, இயற்கை உணவு அங்காடிகளும் நடத்தப்படுகிறது. நாள்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், யோகா வல்லுனர்களின் சொற்பொழிவுகளும் நடத்தப்படுகிறது.
புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 2 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 50, காரைக்காலில் 13, மாகியில் 10 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 35, காரைக்காலில் 18, மாகியில் 6 பேர் என 59 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 7, மாகியில் 2 பேர் என 9 பேர் சிகிச்சை யில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 533 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 162, காரைக்காலில் 38, ஏனாமில் ஒருவர், மாகியில் 18 பேர் என 219 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 278 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 14 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத எதிர்ப்பு குழு தலைவருக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதர் திருமூர்த்தி, 2022-ம் ஆண்டின் தீவிரவாத எதிர்ப்புக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த திருமூர்த்தி, சுவாமி விவேகானந்தர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தலைமை பொறுப்பேற்ற புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தற்போது அவர் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவையில் ஓடும் டெம்போவில் நூதன முறையில் ரூ.1லட்சம் நகையை திருடி சென்ற டிப்-டாப் பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருக்கனூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் இளவரசன் (வயது56). இவர் திருக்கனூரில் தீவன கடை நடத்தி வருகிறார். இவரது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடை பெறவுள்ளது. இதற்காக இளவரசன் தனது மனைவி இந்திராணியுடன் புதுவை நகை கடைக்கு நகை வாங்க வந்தார்.
புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு நகை கடையில் அவர்கள் 15 பவுன் நகை வாங்கினர். அந்த நகையை தனித்தனியாக 7 பெட்டிகளில் ஒரு பையில் வைத்துக் கொண்டு கணவன்-மனைவி இருவரும் புதிய பஸ் நிலையத்துக்கு வர டெம்போவில் ஏறினர்.
அப்போது அவர்களுடன் 2 டிப்-டாப் பெண்கள் ஒரு கை குழந்தையுடன் டெம்போவில் ஏறி நின்றபடி பயணம் செய்தனர். சிறிது தூரம் சென்றதும் அந்த டிப்-டாப் பெண்கள் சில்லரை காசுகளை கீழே போட்டுவிட்டு அதை எடுப்பதுபோல் பாவனை செய்தனர்.
அப்போது அதில் ஒரு பெண் இந்திராணியின் காலை வேகமாக மிதித்தார். ஏற்கனவே கால்வலியால் அவதியடைந்து வந்த இந்திராணிக்கு அந்த பெண் காலால் மிதித்ததால் வலியால் துடித்தார்.
அந்த நேரத்தில் நகை வைத்திருந்த பை நழுவி கீழே விழுந்தது. ஆனாலும் இந்திராணி சுதாரித்துக் கொண்டு உடனே நகை பையை எடுத்துக்கொண்டார். தொடர்ந்து இந்திராணியும், அவரது கணவரும் டெம்போவில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.
புதிய பஸ் நிலையத்தில் டெம்போ நின்றதும் டிப்-டாப் பெண்களில் ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்தது போல் நடித்து கீழே சாய்ந்தார். இதனால் டெம்போவில் பயணம் செய்த இந்திராணி உள்பட பயணிகள் யாரும் கீழே இறங்க முடியாமல் டெம்போவிலேயே உட்கார்ந்து இருந்தனர்.
சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு மயக்கம் தெளிந்தது போல் அந்த பெண் எழுந்தார். இதைத்தொடர்ந்து இந்திராணி மற்றும் மற்ற பயணிகள் டெம்போவில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் இந்திராணி தனது கணவருடன் திருக்கனூர் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார்.
அப்போது நகை வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது அதில் 3 பெட்டிகள் காணாமல் போனதை கண்டு இந்திராணி அதிர்ச்சியடைந்து அலறி னார். அந்த 3 பெட்டிகளில் 2 செட் கம்மல் மற்றும் குருமாத் ஆகிய 3 பவுன் நகை வைத்திருந்தனர். அந்த நகைகளை டெம்போவில் வந்த டிப்-டாப் பெண்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து இந்திராணி யும் அவரது கணவர் இளவரசனும் பஸ்சை விட்டு இறங்கி அந்த மர்ம பெண்களை தேடினர். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. நகையுடன் அவர்கள் மாயமாகி விட்டனர். திருட்டு போன நகையின் மொத்த மதிப்பு ரூ.1லட்சம் ஆகும்.
இதுகுறித்து இளவரசன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் நகையை திருடி சென்ற பெண்களை தேடி வருகிறார்கள்.