என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட காட்சி.
  X
  இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட காட்சி.

  புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு- ஆண்களை விட பெண்கள் அதிகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
  புதுச்சேரி:

  இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1.1.2022 தகுதி நளாக கொண்டு புதுவையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்தது.

  இந்த பணி முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் வெளியிட்டார். 

  இதை   அரசியல் கட்சிகளின்  பிரதிநிதிகள்  பெற்றுக்கொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதுவை மாநிலத்தில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 110 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 35 ஆயிரத்து 225 பெண் வாக்காளர்கள், 3&ம் பாலினத்தினர் 120 பேர் என மொத்தம் 10 லட்சத்து 10 ஆயிரத்து 455 வாக்காளர்கள் உள்ளனர். 

  புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 302 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 11 ஆயிரத்து 215 பெண் வாக்காளர்கள், 3ம் பாலினத்தினர் 99 பேர் என மொத்தம் 7 லட்சத்து 78 ஆயிரத்து 616 பேர் உள்ளனர். 

  இறுதி வாக்காளர் பட்டியல் விடுமுறை நாட்கள் தவிர்த்து 7 நாட்கள் அனைத்து ஓட்டுச்சாவடிகள், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. 

  புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×