என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தீவிரவாத எதிர்ப்பு குழு தலைவருக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து
தீவிரவாத எதிர்ப்பு குழு தலைவருக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதர் திருமூர்த்தி, 2022-ம் ஆண்டின் தீவிரவாத எதிர்ப்புக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த திருமூர்த்தி, சுவாமி விவேகானந்தர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தலைமை பொறுப்பேற்ற புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தற்போது அவர் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






