என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி கலெக்டர் வல்லவன்
புதுச்சேரி கலெக்டராக வல்லவன் நியமனம்
புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள வல்லவன், ஏற்கனவே வகித்து வந்த உள்ளாட்சித்துறை, கலால்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, கலால்துறை ஆணையர் பொறுப்பினையும் தொடர்ந்து கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டராக பூர்வா கார்க் பணியாற்றி வந்தார். அவர் சமீபத்தில் சண்டிகருக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய கலெக்டராக வல்லவன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள வல்லவன், ஏற்கனவே வகித்து வந்த உள்ளாட்சித்துறை, கலால்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, கலால்துறை ஆணையர் பொறுப்பினையும் தொடர்ந்து கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவினை அரசின் சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் வல்லவன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story