என் மலர்
புதுச்சேரி
புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த மாதம் 10-ந்தேதி பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் 10-ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18-ந்தேதி மூடப்பட்டன.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்தது.
இதன்படி புதுவையில் 1-ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வகுப்பறைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காரைக்கால்:
காரைக்கால் நகர் பகுதியில், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை (வயது 14), கூலி வேலை செய்துவரும் சிறுவன் (17) ஒருவன், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தான். பல நாட்கள் வெளியில் சுற்றி வந்த இந்த இளம் காதல் ஜோடி, காரைக்கால் கடற்கரைக்கு சென்று சுற்றியுள்ளனர். அப்போது பொது இடத்தில் இருவரும் அத்துமீறி நடந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த சிறுமியின் தந்தை, 2பேரையும் கையும், களவுமாக பிடித்து கடுமையாக கண்டித்துள்ளார். பின்னர் சிறுவனை காரைக்கால் டவுன் போலீசில் ஒப்படைத்தார். மேலும் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், சிறுவன் மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து அரசு சட்ட விதிகள் படி, சிறுவனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தனர். சோதனையின் முடிவில் சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
புதுச்சேரி தர்மாபுரி பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ்காரரின் மனைவி 21 வயது பெண். இவர் கர்ப்பமாகாமலேயே கர்ப்பமானதாக கூறி குடும்பத்தினரை நம்ப வைத்தார். இப்படியே நிறைமாதம் வரை வந்து விட்ட நிலையில் பரிசோதனைக்காக தனது மனைவியை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு போலீஸ்காரர் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுக்கச் சென்றபோது திடீரென அந்த பெண் மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் முதலில் அந்த செல்போன் விழுப்புரம் சிக்னலை காட்டியது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண் போலீஸ்காரரான தனது கணவருக்கு போன் செய்து பேசினார்.
அப்போது தன்னை யாரோ கோவைக்கு கடத்தி வந்து விட்டதாகவும், தனது வயிற்றில் இருந்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் கோரிமேடு போலீசார் கோவைக்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், அந்த பெண் கர்ப்பமாக இருந்ததாக கூறி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஏமாற்றி நாடகமாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை புதுவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மின்துறை ஊழியர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(பிப்.1) முதல் மின் துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டம் நடந்தால், மின் துறை சார்ந்த பல்வேறு அன்றாட பணிகள் தடைபடும் எனவும், அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சாரம் மக்களுக்கான அத்தியாவசிய தேவை என்பதால் மின் விநியோகம் தடைபடக் கூடாது. மின் துறை சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது. மின்துறை சார்ந்த ஊழியர்கள், அவர்கள் சார்ந்த அமைப்புகள், சங்கங்கள், மின்துறை அலுவலகத்திலோ, மின் உற்பத்தி மற்றும் மின்சாரம் வழங்கும் இடங்களிலோ, துணை மின்நிலையத்திலோ, காரைக்கால் மாவட்டத்திலுள்ள வேறு எந்த மின் துறை சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைநிறுத்தம் செய்வது, சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது, போராட்டம் நடத்த, 144 கீழ் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் இதர சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது மறு அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் அருகே திருநள்ளாறு பேட்டை தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். அவரது மகள் விஜயலட்சுமி (வயது19). இவர் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் முதல் ஆண்டு தாவரவியல் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை என்பதால், விஜயலட்சுமி வீட்டில் இருந்துவந்தார்.
ஆன்லைன் பாடத்திற்காக பெற்றோர் வாங்கிகொடுத்த செல்போனில், விஜலட்சுமி எப்போதும் கேம் விளையாடிகொண்டிருப்பது வாடிக்கையாம். பலமுறை பெற்றோர் சொல்லிபார்த்தும், செல்போனில் விளையாடுவதை விஜயலட்சுமி விடவில்லை.
சம்வத்தன்று செல்போனில் வழக்கம் போல், கேம் விளையாடிய விஜலட்சுமியை பெற்றோர் திட்டி, செல்போனை பிடுங்கிவைத்து கொண்டனர்.
இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உத்திரத்தில், துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது தனது மகள் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்க்கத்தினர் உதவியுடன், விஜயலட்சுமியை தூக்கில் இருந்து கீழே இறக்கி, தேனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விஜயலட்சுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






