என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதகடிப்பட்டில் நேரடி நெல்கொள்முதல் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்த காட்சி.
    X
    மதகடிப்பட்டில் நேரடி நெல்கொள்முதல் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்த காட்சி.

    விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல்

    விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை வேளாண் விளை பொருட்களுக்கு சிறந்த விலை கிடைக்கும் வகையில் புதுவை குடிமைப்பொருள் துறை மூலம் மத்திய அரசின் இந்திய உணவு கழகத்தால் விவசாயிகளிட மிருந்து நேரடி நெல் கொள் முதல் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. 

    புதுவையில் உள்ள விற்பனைக்குழுவின் அனைத்து ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகங்களும், நேரடி கொள்முதல் நிலையங்களாக அறிவிக்கப்படுகிறது. 

    இங்கு இந்திய உணவுக் கழகம் நிர்ணயித்துள்ள தரக்கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொருட்டு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் சன்ன ரகங்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.ஆயிரத்து 960, மோட்டா ரகங்களுக்கு குவிண்டாலுக்கு 
    ரூ.ஆயிரத்து 940 விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. 

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து மதகடிப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்  தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்ச்சியில் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், அங்காளன் எம்.எல்.ஏ., விற்பனைக்குழு செயலர் சிவசங்கரமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×