என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    செல்போனை பெற்றோர் பறித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    திருநள்ளாறில் செல்போனை பெற்றோர் பறித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே திருநள்ளாறு பேட்டை தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். அவரது மகள் விஜயலட்சுமி (வயது19). இவர் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் முதல் ஆண்டு தாவரவியல் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை என்பதால், விஜயலட்சுமி வீட்டில் இருந்துவந்தார்.

    ஆன்லைன் பாடத்திற்காக பெற்றோர் வாங்கிகொடுத்த செல்போனில், விஜலட்சுமி எப்போதும் கேம் விளையாடிகொண்டிருப்பது வாடிக்கையாம். பலமுறை பெற்றோர் சொல்லிபார்த்தும், செல்போனில் விளையாடுவதை விஜயலட்சுமி விடவில்லை.

    சம்வத்தன்று செல்போனில் வழக்கம் போல், கேம் விளையாடிய விஜலட்சுமியை பெற்றோர் திட்டி, செல்போனை பிடுங்கிவைத்து கொண்டனர்.

    இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உத்திரத்தில், துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது தனது மகள் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்க்கத்தினர் உதவியுடன், விஜயலட்சுமியை தூக்கில் இருந்து கீழே இறக்கி, தேனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விஜயலட்சுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×