என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திட்டங்கள் இல்லாத பட்ஜெட்- காங்கிரஸ் தலைவர் கருத்து

    திட்டங்கள் இல்லாத பட்ஜெட் என காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு இந்தியாவில் இந்துத்துவா ஆட்சியில் பணக்காரர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளது. 

    இது மேலும் அதிகரிக்க பா.ஜனதா பட்ஜெட்டில் 5 சதவீத வரிச்சலுகை கொடுத் துள்ளது. வைரத்துக்கு 5 சதவீத வரி குறைத்துள்ளது. ஆனால் குடைகளுக்கு 20 சதவீத வரி உயர்ந்துள்ளது. கங்கை- காவிரி இணைப்பை கைவிட்டுள்ளனர். 

    அதற்கு பதிலாக கோதாவரி- காவிரி இணைப்பு என்று 25 ஆண்டுகால திட்டத்தை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல், விளம்பரத்துக்காக அறிவித்துள்ளனர். 

    100 நாள் வேலை திட்டத்தில் 25 சதவீத நிதியை குறைத்து சமூக அநீதி செய்துள்ளனர். சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு கடன் மட்டும் அளிப்போம், எந்த சலுகையும் தர மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். 

    நாட்டின் சொத்துக்களை திட்டமிட்டு விரும்பி தாரை வார்ப்பதின் தொடர்ச்சியாக, எல்.ஐ.சி. பங்குகளை விற்கிறோம் என்று வெளிப்படையாக பட்ஜெட்டில் தெரிவித்துள்ளனர். 

    ஒரே நாடு ஒரே கொள்கை என்று கூறி மாநில பத்திரப்பதிவு அலுவலக உரிமையை பறித்துள்ளனர். 

    கொரோனா ஊரடங்கால், வேலை இழந்து வருமானம் இழந்து தவிக்கும் மக்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு, திட்டங்கள் எதுவும் இல்லை. 

    சம்பளதாரர்களுக்கு, நடுத்தர மக்களுக்கு, ஏழைகளுக்கு, இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு நிறுவனங்களுக்கு என்று எதுவுமே இல்லை. வரும் தேர்தல்களில், பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×