என் மலர்
உள்ளூர் செய்திகள்

144 தடை உத்தரவு
மின்துறை ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு- காரைக்காலில் 144 தடை உத்தரவு
காரைக்கால் மாவட்டத்திலுள்ள வேறு எந்த மின் துறை சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைநிறுத்தம் செய்வது, சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது, போராட்டம் நடத்த 144 கீழ் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்:
யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மின்துறை ஊழியர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(பிப்.1) முதல் மின் துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டம் நடந்தால், மின் துறை சார்ந்த பல்வேறு அன்றாட பணிகள் தடைபடும் எனவும், அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சாரம் மக்களுக்கான அத்தியாவசிய தேவை என்பதால் மின் விநியோகம் தடைபடக் கூடாது. மின் துறை சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது. மின்துறை சார்ந்த ஊழியர்கள், அவர்கள் சார்ந்த அமைப்புகள், சங்கங்கள், மின்துறை அலுவலகத்திலோ, மின் உற்பத்தி மற்றும் மின்சாரம் வழங்கும் இடங்களிலோ, துணை மின்நிலையத்திலோ, காரைக்கால் மாவட்டத்திலுள்ள வேறு எந்த மின் துறை சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைநிறுத்தம் செய்வது, சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது, போராட்டம் நடத்த, 144 கீழ் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் இதர சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது மறு அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story