என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • டாக்டர்கள் அளிக்கும் ஆலோசனைகளை ஏற்று செயல்படும்படியும் அறிவுறுத்தினார்
    • போதுமான மருந்து, மாத்திரைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா ஆய்வு செய்தார். அங்கு மாதந்தோறும் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களிடம் மருந்து, மாத்திரைகள் முறையாக பெற்று சாப்பிடும்படியும், கர்ப்ப காலத்தில் டாக்டர்கள் அளிக்கும் ஆலோசனைகளை ஏற்று செயல்படும்படியும் அறிவுறுத்தினார். மேலும் அங்குள்ள டாக்டர், செவிலியரிடம் போதுமான மருந்து, மாத்திரைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் பாலாஜி, டாக்டர்கள் இமயவர்மன், திலகம், சாமிநாதன், முதுநிலை செவிலியர் சமீரா பானு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பிரபல தனியார் கம்பெனியை 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென முற்றுகை
    • பணிக்கு வருபவர்களை தடுத்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    சேதராபட்டில் உள்ள பிரபல தனியார் கம்பெனியை 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென முற்றுகையிட்டு பணிக்கு வருபவர்களை தடுத்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேதராப்பட்டு-மயிலம் சாலையில் பிரபல கனரக தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மின்சார கோபுரங்கள், செல்போன் டவர்கள் உள்ளிட்ட கனரக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 259 பேர் தங்களுக்கு பணி நியமனம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் நிர்வாகத்துடன் கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களில் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. ஆனால் 259 தொழிலாளர் தவிர்த்து புதிய தொழிலாளர்கள் மூலம் தொழிற்சாலை இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இந்நிலையில் 259 பேர் சேதராப்பட்டு தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் தொழிற்சாலையின் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கம்பெனியில் பணியாற்றி வரும் தினகரன், லட்சுமணன், விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார் உள்ளிட்ட பலர் முன்னிலையில் போராட்டம் நடந்தது.

    கம்பெனிக்குள் வந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை இவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் சேதராப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காத போராட்டக்காரர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கனரக தொழிற்சாலை இயங்காமல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சேதராப்பட்டு பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
    • புதுவை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் வேறு ஒருவரின் இடத்தை பத்திர பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுவை முருங்கப்பாக்கம் குயவர் தெருவை சேர்ந்தவர் சேகரன் (வயது64). இவர் புதுவை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த

    2017-ம் ஆண்டு இவரிடம் அரியாங்குப்பத்தை சேர்ந்த பாரதி (35) என்பவர் அணுகி அரியாங்குப்பம் மணவெளியில் பாக்கியவ தியம்மாள் என்பவருக்கு சொந்தமான இடம் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தார். அந்த இடத்தை சேகரன் வாங்க முடிவு செய்தார். அதற்காக பாக்கியவதியம்மாளின் வாரிசுகளான விஜயகுமார், மோகன்ராஜ் மற்றும் பானுமதி உள்பட 8 பேரிடம் ரூ.6 லட்சத்தை சேகரன் கொடுத்து தனது மனைவி லட்சுமி பெயரில் பத்திர பதிவு செய்தார்.

    பின்னர் பத்திர பதிவு செய்து கொடுத்த அந்த இடத்தை சேகரன் சென்று பார்த்த போது வேறு ஒருவர் விவசாயம் செய்ய நிலத்தை ஏர் உழுது செய்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து விசாரித்த போது அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சேகரன் அப்போது அரியாங்குப்பம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கிரையம் பெற்ற இடத்தை ரத்து செய்து விடுவதாகவும், பணத்தை 6 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் போலீசாரிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து 6 மாத காலம் கெடு முடிந்து சேகரன் பணத்தை கேட்ட போது அவர்கள் மீண்டும் 2 மாத காலம் அவகாசம் கேட்டனர். அதனையும் சேகரன் ஏற்றுக்கொண்டார்.

    அதன் பிறகு கொரோனா காலம் வந்து விட்டதால் பணத்தை திருப்பி தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக விஜயக்குமார், மோகன்ராஜ், பானுமதி உள்ளிட்டோர் கூறினர். ஆனால் தொடர்ந்து போன் மூலம் பணத்தை கேட்ட போது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சேகரன் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி விஜயக்குமார், மோகன்ராஜ், பானுமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • புதுவை அரசு துறைகளில் துணை தாசில்தார்கள் உள்பட 15 புதிய பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்
    • மத்திய சட்டத்துறை மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் துணை தாசில்தார்கள் உள்பட 15 புதிய பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தினார். புதுவை அரசு பயணமாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண்ரெட்டியை சந்தித்தார். அப்போது அவரிடம் புதுவை அரசின் சுற்றுலா திட்டங்கள் குறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விளக்கி கூறினார்.

    மேலும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை கடற்கரை சாலையில் நிறுவப்பட்டு வரும் தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவை சந்தித்தார்.

    இந்த சந்திப்பின் போது புதுவை தேர்தல் துறையில் புதிதாக துணை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் துணை தாசில்தார்கள் உள்ளிட்ட 15 புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்புவதற்கு அனுப்பப்பட்ட கோப்புக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய சட்ட மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கேட்டுக்கொண்டார்.

    அதோடு 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவையில் நிறுவப்பட வுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் தாங்கிய தியாக சுவர் குறித்தும் எடுத்து கூறினார். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அருள்முருகன், சக்கரா பவுன்டேசன் நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • கேமராக்களும், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்ட கேமராக்களும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க முடிவு செய்யப்பட்டடுள்ளது. முதல் கட்டமாக பெரிய பள்ளிகளில் சிறப்பு அம்சங்கள் உடைய சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமராக்களும், வேகமாக செல்லும் வாகங்களை படமெடுக்கும் நவீன கேமராக்களும், அதிக துல்லியத்துடன் இரவு பார்வை தெளிவாக எடுக்கக் கூடிய அமைப்பு கொண்ட கேமராக்களும், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்ட கேமராக்களும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான ஆவணங்களை தயார் செய்து, பின்னர் கேமராக்கள் பொருத்தும் பணிக்கான ஆய்வுகளைஅனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மேற்கொண்டார். அப்போது, தனியார் நிறுவன வணிக வளர்ச்சி அதிகாரி பாலசுப்ரமணியன், தி.மு.க. பிரமுகர்கள் அஷ்ரப், நிசார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேஸீர், லாரன்ஸ், மோரில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஏற்கனவே இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் உள்துறை அமைச்சர், டி.ஜி.பி. ஆகிேயாரிடம் மனு வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் இன்னும் அரசு சார்பாக பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுவையில் 2 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டது.
    • புதிதாக 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதுவையில் 176, காரைக்காலில் 35, ஏனாமில் ஒருவர் என புதிதாக 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 21, காரைக்காலில் 3, ஏனாமில் ஒருவர் என 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் ஆயிரத்து 63, காரைக்காலில் 172, ஏனாமில் 14, மாகியில் 2 பேர் என ஆயிரத்து 251 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.புதுவையில் 143, காரைக்காலில் 6, ஏனாமில் 7 பேர் என 156 பேர் சிகிச்சையில் குணம டைந்தனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 963 ஆக உள்ளது.

    புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 68 ஆயிரத்து 679 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.

    • அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தின் புதுவை மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
    • ரங்கப்பிள்ளை வீதி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தின் புதுவை மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

    ரங்கப்பிள்ளை வீதி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜசேகர் தொடக்கவுரையாற்றினார். புதுவை ஓய்வூதியர்கள் சங்க மாநில செயலாளர் நடராஜன், மாவட்ட தலைவர் முத்து, சுப்பிரமணியன், குமார், வில்லியனூர் கிளை செயலாளர் கலியபெருமாள், ஆகியோர்வா ழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    1.1.2017 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

    • பிளஸ்-1 வகுப்புக்கு பள்ளி அளவிலான சேர்க்கை கடந்த 15-ந் தேதியுடன் முடிந்தது.
    • மேல்நிலைப்பள்ளியில் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பிராந்தியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்புக்கு பள்ளி அளவிலான சேர்க்கை கடந்த 15-ந் தேதியுடன் முடிந்தது. மேல்நிலைப்பள்ளியில் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்தனர். உயர்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தனர்.

    மாணவர்களின் சேர்க்கை தவிர மொத்தம் ஆயிரத்து 900 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது. மாணவர்கள் இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழுடன் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்றனர். 500 முதல் 200 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.

    இதில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்தனர். இன்று மதியம் 2 மணிக்கு 199 முதல் 180 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை)ள காலை 10 மணிக்கு 179 முதல் 175 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. புதுவை குடியிருப்பு சான்று இல்லாதவர்களுக்கு (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது.

    • போலீஸ் நிலையம் முன்பு பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • இதற்காக ஆம்பூர் சாலையில் ஒன்று கூடினர்

    புதுச்சேரி:

    போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாத போலீசாரை கண்டித்து பெரியார் திராவிடர் விடுதலை கழகம், அலைகள் இயக்கம், அகில இந்திய மக்கள் கழகம் ஆகியவற்றின் சார்பில் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்காக ஆம்பூர் சாலையில் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு பெரியார் திராவிடர் விடுதலை கழக கோகுல்காந்தி நாத் தலைமை வகித்தார். அலைகள் இயக்கம் பாரதி, மக்கள் கழகம் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் செஞ்சி சாலையில் சென்ற பஸ்களை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • இந்திராகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
    • சோனியாகாந்தி 1998-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

    புதுச்சேரி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை தொடர்ந்து சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.

    இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் (வியாழக்கிழமை)போராட்டம் நடத்தப்பட உள்ளது. புதுவை காங்கிரஸ் சார்பில் 10 மணிக்கு இந்திராகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோனியாகாந்தி 1998-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின் அயராத உழைப்பால் 2 முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவந்தார். 2004-ல் பிரதமர் பதவி வேண்டாம் என மறுத்து மன்மோகன்சிங்கிற்கு வழங்கினார். எந்த ஆட்சி பதவியும் வகிக்காத சோனியா மீது அமலாக்கத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இதைகண்டித்து காங்கிரஸ் சார்பில்நடைபெறும் போராட்டத்தில் காங்கிரசார் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோரிமேடு அருகே சஞ்சீவிநகர் திரவுபதி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபால்
    • இவரது குடும்பத்துக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவியின் குடும்பத்துக்கும் வீட்டு மனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது

    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே வீட்டு மனை தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள். கோரிமேடு அருகே சஞ்சீவிநகர் திரவுபதி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது56). தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது குடும்பத்துக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவியின் குடும்பத்துக்கும் வீட்டு மனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனபால் அவரது கூரை வீட்டுக்கு பாலித்தீன் கவர் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது ரவி மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தனபால் மற்றும் அவரது மனைவி, மகன் அரவிந்தன் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தி னர் இருதரப்பினரையும் சமாதானம் செய்திருந்த நிலையில் ரவி மற்றும் அவரது மகன் தினகரன் ஆகியோர் மீண்டும் தகராறு செய்து தனபாலையும், அவரது மகன் அரவிந்தனையும் தாக்கினர்.

    மேலும் அரவிந்தனை தினகரன் கத்தியால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அரவிந்தன் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தனபால் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரவி மற்றும் அவரது மகன் தினகரன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    • புதுவை பஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் கண்டக்டரிடம் இருந்து 2 பெண்கள் பணத்தை பறித்து சென்றனர்
    • புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் அந்த 2 பெண்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

    புதுச்சேரி:

    புதுவை பஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் கண்டக்டரிடம் இருந்து 2 பெண்கள் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் அந்த 2 பெண்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது அந்த 2 பெண்களிடம் 3 வயது பெண் குழந்தை ஒன்று இருந்தது.அந்த குழந்தை குறித்த விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண் குழந்தை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாடகைக்கு வாங்கி வந்தது தெரியவந்தது.பின்னர் இந்த குழந்தையின் உண்மையான பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த குழந்தையின் உண்மை யான பெற்றோர்களை கண்டுபிடிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.அதன்படி இந்த தனிப்படை ஆந்திர விரைகிறது.

    ×