என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வாலிபருக்கு கத்திக்குத்து
- கோரிமேடு அருகே சஞ்சீவிநகர் திரவுபதி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபால்
- இவரது குடும்பத்துக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவியின் குடும்பத்துக்கும் வீட்டு மனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது
புதுச்சேரி:
கோரிமேடு அருகே வீட்டு மனை தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள். கோரிமேடு அருகே சஞ்சீவிநகர் திரவுபதி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது56). தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது குடும்பத்துக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவியின் குடும்பத்துக்கும் வீட்டு மனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனபால் அவரது கூரை வீட்டுக்கு பாலித்தீன் கவர் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது ரவி மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தனபால் மற்றும் அவரது மனைவி, மகன் அரவிந்தன் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தி னர் இருதரப்பினரையும் சமாதானம் செய்திருந்த நிலையில் ரவி மற்றும் அவரது மகன் தினகரன் ஆகியோர் மீண்டும் தகராறு செய்து தனபாலையும், அவரது மகன் அரவிந்தனையும் தாக்கினர்.
மேலும் அரவிந்தனை தினகரன் கத்தியால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அரவிந்தன் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தனபால் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரவி மற்றும் அவரது மகன் தினகரன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.






