search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி
    X

    கோப்பு படம்

    சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி

    • சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
    • புதுவை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் வேறு ஒருவரின் இடத்தை பத்திர பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுவை முருங்கப்பாக்கம் குயவர் தெருவை சேர்ந்தவர் சேகரன் (வயது64). இவர் புதுவை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த

    2017-ம் ஆண்டு இவரிடம் அரியாங்குப்பத்தை சேர்ந்த பாரதி (35) என்பவர் அணுகி அரியாங்குப்பம் மணவெளியில் பாக்கியவ தியம்மாள் என்பவருக்கு சொந்தமான இடம் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தார். அந்த இடத்தை சேகரன் வாங்க முடிவு செய்தார். அதற்காக பாக்கியவதியம்மாளின் வாரிசுகளான விஜயகுமார், மோகன்ராஜ் மற்றும் பானுமதி உள்பட 8 பேரிடம் ரூ.6 லட்சத்தை சேகரன் கொடுத்து தனது மனைவி லட்சுமி பெயரில் பத்திர பதிவு செய்தார்.

    பின்னர் பத்திர பதிவு செய்து கொடுத்த அந்த இடத்தை சேகரன் சென்று பார்த்த போது வேறு ஒருவர் விவசாயம் செய்ய நிலத்தை ஏர் உழுது செய்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து விசாரித்த போது அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சேகரன் அப்போது அரியாங்குப்பம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கிரையம் பெற்ற இடத்தை ரத்து செய்து விடுவதாகவும், பணத்தை 6 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் போலீசாரிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து 6 மாத காலம் கெடு முடிந்து சேகரன் பணத்தை கேட்ட போது அவர்கள் மீண்டும் 2 மாத காலம் அவகாசம் கேட்டனர். அதனையும் சேகரன் ஏற்றுக்கொண்டார்.

    அதன் பிறகு கொரோனா காலம் வந்து விட்டதால் பணத்தை திருப்பி தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக விஜயக்குமார், மோகன்ராஜ், பானுமதி உள்ளிட்டோர் கூறினர். ஆனால் தொடர்ந்து போன் மூலம் பணத்தை கேட்ட போது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சேகரன் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி விஜயக்குமார், மோகன்ராஜ், பானுமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×