என் மலர்
புதுச்சேரி

ஜீவானந்தம் அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
பிளஸ்-1 சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
- பிளஸ்-1 வகுப்புக்கு பள்ளி அளவிலான சேர்க்கை கடந்த 15-ந் தேதியுடன் முடிந்தது.
- மேல்நிலைப்பள்ளியில் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்தனர்.
புதுச்சேரி:
புதுவை பிராந்தியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்புக்கு பள்ளி அளவிலான சேர்க்கை கடந்த 15-ந் தேதியுடன் முடிந்தது. மேல்நிலைப்பள்ளியில் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்தனர். உயர்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தனர்.
மாணவர்களின் சேர்க்கை தவிர மொத்தம் ஆயிரத்து 900 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது. மாணவர்கள் இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழுடன் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்றனர். 500 முதல் 200 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
இதில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்தனர். இன்று மதியம் 2 மணிக்கு 199 முதல் 180 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை)ள காலை 10 மணிக்கு 179 முதல் 175 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. புதுவை குடியிருப்பு சான்று இல்லாதவர்களுக்கு (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது.






