என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது.
    • ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்

    புதுச்சேரி:

    வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் காளிகாம்பாள் சமேத அகோரவீரபத்திர சாமி கோவில் உள்ளது.

    இங்குள்ள பால்முத்து மாரியம்மன், அறிவொளி விநாயகர், கங்கை அம்மன், காளிகாம்பாள் சமேத அகோர வீரபத்திரர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிய பராமச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.

    கும்பாபிஷேக விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை நடந்த 2-ம் கால யாக பூஜையில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்றார். மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    நாளை காலை 6.30 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம்புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தனி அதிகாரி உமாபதி, திருப்பணிக்குழு தலைவர் ராமதாஸ், தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார், திருப்பணிக்குழு, கிராமவாசிகள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜனதா கட்சி பொதுச் செயலாளர் மோகன்குமார் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி செயற்குழு கூட்டம் ஏரிப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    முன்னதாக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் ஏரிப்பாக்கம் கூட்ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பட்டியல் அணி மாநில செயற்குழு கூட்டம் மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் செல்வம், அசோக்பாபு எம்.எல்.ஏ. மாநில பா.ஜனதா கட்சி பொதுச் செயலாளர் மோகன்குமார் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் பட்ஜெட்டில் பட்டியல் இன சமூக மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் நலத்திட்டங்களை அமிர்த கால பட்ஜெட்டாக அறிவித்த மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பட்டியலின் செயற்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கட்டிடக்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடந்தது.
    • கவுரவ தலைவர் அபிஷேகம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடக்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் விஸ்வநாதன், பொதுச்செயலாளர் சந்தி ரசேகரன், பொருளாளர் கந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் ஞானவேல், பாலன், ராஜகுமாரி, முத்துவேல், கோடீஸ்வரன், ராமு, அன்பழகன், பாலகிரு ஷ்ணன், நடராஜன், பிரபு முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. கவுரவ தலைவர் அபிஷேகம் தொடங்கி வைத்தார்.

    பொதுச்செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் அந்தோணி வாழ்த்தி பேசினர். தினேஷ் பொன்னையா போராட்ட த்தை முடித்து வைத்தார். தொழிலாளர் துறை ஆணையர் பதவியை நிரப்ப வேண்டும்.

    நல வாரியத்தில் நிரந்தர பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். தொழிலாளர் நலத்திட்ட ங்களை காலத்தோடு வழங்க வேண்டும். புதிதாக விண்ணப்பித்தவர்களை நல வாரியத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் இருப்ப தினாலும் கொசுக்கள் உற்பத்தி பெருகிவிட்டது.
    • பொதுமக்கள் சுகாதாரம் குன்றி நோய்வா ய்ப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் தற்போது நிலவி வரும் பருவகால மாற்றத்தினாலும், பெரிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால் மற்றும் ப-வடிவ, யூ-வடிவ வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் இருப்பதினாலும் கொசுக்கள் உற்பத்தி பெருகிவிட்டது.

    இதனால் பொதுமக்கள் சுகாதாரம் குன்றி நோய்வா ய்ப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொசுக்களின் தொல்லையிலிருந்து பொதுமக்களை மீட்டெடுத்து அவர்கள் சுகாதாரத்தைப் பேணிக்காக்க உடனே அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாரி கொடுக்கும்படி உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்ற தலைமைப்பொறியாளர் நீர்பாசனத்துறை செயற்பொ றியாளர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு அனைத்து கால்வா ய்களையும் தூர்வாரும் படி கூறினார்.

    அப்போது அவை தலைவர் ரவி, தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி ராஜி, கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் சந்துரு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • செயல் விளக்கத்தை இந்திரா இண்டேன் பரசுராமன் விளக்கிக் கூறினார்.

    புதுச்சேரி:

    இந்திரா இண்டேன் கியாஸ் நிறுவனம் சார்பில் தொண்டமான் நத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமையல் எரிவாயு குறித்து எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    செயல் விளக்கத்தை இந்திரா இண்டேன் பரசுராமன் விளக்கிக் கூறினார். இதில் பள்ளியின் முதல்வர் சண்முகம், சொர்ணாம்பிகா, அன்பரசி, செல்வலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு முகாமில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பாளர் உத்திரேஸ்வரன் மற்றும் மகளிர் சுயநிதி குழு அமைப்பாளர் சந்திர வசந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

    • தற்காப்பு கலை சங்க பயிற்சியாளர்கள் கூட்டம் நடந்தது.
    • பயிற்சி முகாம் மற்றும் போட்டிகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒருங்கிணைந்த தற்காப்பு கலை சங்க பயிற்சியாளர்கள் கூட்டம் மாநில சங்க தலைமை அலுவலகத்தில் சேர்மன் கராத்தே வளவன் தலைமையில் நடந்தது. தலைவர் ராஜ், தொழில்நுட்ப இயக்குனர் சந்தோஷ், செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், வெங்கடாஜலபதி, மகேஷ், பாகூர் பாலா, காலாப்பட்டு செல்வம், சுரேஷ், அண்ணாநகர் செல்வம், செந்தில், ஜிப்மர் சுப்பிரமணி, திலாஸ்பேட்டை அசோக், கோபி, அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 17,18,19, ஆகிய தேதிகளில் மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் போட்டிகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தற்காப்பு கலையை ஒருங்கிணைப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முடிவில் பொருளாளர் சுபாஷ் நன்றி கூறினார்.

    • உரிமங்களை புதுபிப்பதற்கான வழக்கமான நடை முறைகளும் கைவிடப்பட்டது.
    • செல்வ கணபதி எம்.பி.யிடம் முறையிட்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளங்களின் ஒதுக்கீட்டு உரிமத்தையும், வாடகையையும் கடந்த 2013-ம் ஆண்டு மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை 1000 சதவீதம் உயர்த்தி விட்டது. உரிமங்களை புதுபிப்பதற்கான வழக்கமான நடை முறைகளும் கைவிடப்பட்டது. திடீர் வாடகை, உரிமைத் தொகை உயர்வு காரணமாக உப்பு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் செல்வ கணபதி எம்.பி.யிடம் முறையிட்டிருந்தனர்.

    இந்நிலையில் உப்பு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் செல்வகணபதி எம்.பி. டெல்லி சென்று, மத்திய மந்திரி பியுஷ்கோயலை சந்தித்து, இந்த பிரச்சினையின் முழு பாதிப்புகளையும் விளக்கி, நல்ல தீர்வு காணுமாறு கூறினார்.

    இதுகுறித்து உயரதிகாரிகளுடன் விவாதித்து, சுமூகமான தீர்வு காண்பதாக மத்திய மந்திரி உறுதி அளித்தார். இதன்மூலம் 10 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • புதுவையிலிருந்து அதே விமானம் 1.55 மணிக்கு புறப்பட்டு 2.50 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.
    • மாலை 4.35 மணிக்கு புதுவையிலிருந்து புறப்பட்டு 6.20 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியிலிருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமான சேவை நடந்து வருகிறது. அதாவது நாள்தோறும் பகல் 11.55 மணிக்கு ஐதராபாத்திலிருந்து புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு நண்பகல் 1.35 மணிக்கு வந்தடைகிறது.

    புதுவையிலிருந்து அதே விமானம் 1.55 மணிக்கு புறப்பட்டு 2.50 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது. அங்கிருந்து மாலை 3.20 மணிக்கு புறப்படும் விமானம் 4.15 மணிக்கு புதுச்சேரியை வந்தடைகிறது. மாலை 4.35 மணிக்கு புதுவையிலிருந்து புறப்பட்டு 6.20 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது.

    பராமரிப்பு பணிகள் காரணமாக புதுச்சேரி-பெங்களூரு இடையே மட்டும் வருகிற 17-ந்தேதி வரை இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சம்பா பருவத்துக்கு 5 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது.
    • இந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தாளடி, சம்பா பருவத்துக்கு 5 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது.

    இந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பருவம் தவறிய திடீர் மழை பெய்தது. 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 4 நாட்கள் பெய்த தொடர் கனமழையால் அறுவ டைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

    திருநள்ளாறு, அம்பகரத்தூர் , நெடுங்காடு, செல்லூர், தென்னங்குடி, திருப்பட்டினம், சேத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலங்களில் நெற்பயிர்கள் முழுமையாக சாய்ந்து நீரில் மூழ்கின. பல இடங்களில் நெற்பயிர்கள் முளைவிட தொடங்கியுள்ளன.

    இதனால் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்தனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    புதுவை சட்டசபையில் நடந்த குளிர்கால கூட்டத்தில் காரைக்கால் எம்.எல்.ஏ.க்களும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். காரைக்காலில் தி.மு.க. எம்.எல்.ஏ. க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு காரைக்கால் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அரசு குழு அமைக்க வேண்டும். தமிழகம்போல பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மழையால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வேளா ண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் காரைக்கால் சென்றார்.

    காரைக்கால் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், வரி ச்சகுடியில் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அப்போது விவசாயிகள், நெ ற்பயிற்கள் நீரில் மூழ்கியதில் முளைத்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

    சேதமடைந்த நெற்பயிற்களை மத்திய குழு பர்வையிடுவதற்குள் அறுவடை முடிந்துவிடும். எனவே மாவட்ட நிர்வாகம் சேதங்களை புகைப்படமாக எடுத்து மத்திய குழுவினருக்கு தெரியபடுத்த வேண்டும்.

    சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த ஆண்டிற்கான காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், நெற்கதிர்களை எடுத்து பாதிப்பை ஆய்வு செய்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தனி செயலர் மனோகர் மற்றும் அரசு அதிகாரிகள் அமைச்சருடன் சென்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

    • சாமிபிள்ளை தோட்டம் அருகே மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது.
    • இதனால் அந்த மதுபானக்கடை திறக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிகுப்பம் கிழக்கு கடற்கரை சாலை சாமிபிள்ளை தோட்டம் அருகே மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது.

    குடியிருப்புகளை ஒட்டிய மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மதுபானக்கடை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை உருவாக்கி பல போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதனால் அந்த மதுபானக்கடை திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் மதுக்கடையை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலை மதுபானக்கடை அருகே போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் லெனின்துரை தலைமை வகித்தார். இந்தியகம்யூனிஸ்டு சேதுசெல்வம், சுப்பையா, மார்க்சிஸ்டு சத்யா, காங்கிரஸ் வினோத், மற்றும் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுக்கடையை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

    • வில்லியனூரில் உள்ள பொது சேவை மையத்தை நாடவேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்பட்டனர்.
    • சிவா பொது சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சுல்தா ன்பேட்டை கிராமத்தில் வசிக்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆதார் அட்டையில் விலாசம் மாற்றுதல், மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட ஆன்–லைன் பரிவர்த்தனைகளுக்கு வில்லியனூரில் உள்ள பொது சேவை மையத்தை நாடவேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்பட்டனர்.

    சுல்தான்பேட்டை மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் புதிய பொது சேவை மையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா பொது சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், சுல்தான்பேட்டை பள்ளிவசால் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக புதுவை வருகிறார்.
    • தமிழைத்தேடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வருகிற 21-ந் தேதி சென்னையில் தொடங்கி 28-ந் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார்.

    புதுச்சேரி:

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக வருகிற 23-ந் தேதி புதுவை வருகிறார்.

    இதுகுறித்து ஆலோசனைக்கூட்டம் கவுண்டம்பாளையம் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. பா.ம.க. அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார். கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் வடிவேல், மதியழகன், வன்னியர் சங்க தலைவர் துரை, செயலாளர்கள் முருகன், நாவப்பன், இளைஞரணி சேகர், புருஷோத்தமன், மகளிரணி இபெல், ஜோதி, மீனவரணி உத்திராடம் உட் பட பலர் பங்கேற்றனர்.

    இதன்பின் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழைத்தேடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வருகிற 21-ந் தேதி சென்னையில் தொடங்கி 28-ந் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார். 3-ம் நாளான 23-ந் தேதி 10 மணிக்கு புதுவை கம்பன் கலையரங்கில் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.

    அரசியல்சார்பற்ற நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். தமிழை மீட்க வலியுறுத்தி பிரச்சாரம் நடக்கிறது. தமிழகம், புதுவையில் தொழில் நிறுவனங்கள் பெயர் பலகையில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை.

    இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.

    ×