என் மலர்
புதுச்சேரி

மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பார்வையிட்ட காட்சி.
காரைக்கால் மாவட்டத்தில் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு
- சம்பா பருவத்துக்கு 5 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது.
- இந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தாளடி, சம்பா பருவத்துக்கு 5 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது.
இந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பருவம் தவறிய திடீர் மழை பெய்தது. 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 4 நாட்கள் பெய்த தொடர் கனமழையால் அறுவ டைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
திருநள்ளாறு, அம்பகரத்தூர் , நெடுங்காடு, செல்லூர், தென்னங்குடி, திருப்பட்டினம், சேத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலங்களில் நெற்பயிர்கள் முழுமையாக சாய்ந்து நீரில் மூழ்கின. பல இடங்களில் நெற்பயிர்கள் முளைவிட தொடங்கியுள்ளன.
இதனால் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்தனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
புதுவை சட்டசபையில் நடந்த குளிர்கால கூட்டத்தில் காரைக்கால் எம்.எல்.ஏ.க்களும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். காரைக்காலில் தி.மு.க. எம்.எல்.ஏ. க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு காரைக்கால் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அரசு குழு அமைக்க வேண்டும். தமிழகம்போல பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மழையால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வேளா ண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் காரைக்கால் சென்றார்.
காரைக்கால் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், வரி ச்சகுடியில் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அப்போது விவசாயிகள், நெ ற்பயிற்கள் நீரில் மூழ்கியதில் முளைத்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த நெற்பயிற்களை மத்திய குழு பர்வையிடுவதற்குள் அறுவடை முடிந்துவிடும். எனவே மாவட்ட நிர்வாகம் சேதங்களை புகைப்படமாக எடுத்து மத்திய குழுவினருக்கு தெரியபடுத்த வேண்டும்.
சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த ஆண்டிற்கான காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், நெற்கதிர்களை எடுத்து பாதிப்பை ஆய்வு செய்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தனி செயலர் மனோகர் மற்றும் அரசு அதிகாரிகள் அமைச்சருடன் சென்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.






