என் மலர்
புதுச்சேரி
- பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக புதுவை வருகிறார்.
- தமிழைத்தேடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வருகிற 21-ந் தேதி சென்னையில் தொடங்கி 28-ந் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார்.
புதுச்சேரி:
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக வருகிற 23-ந் தேதி புதுவை வருகிறார்.
இதுகுறித்து ஆலோசனைக்கூட்டம் கவுண்டம்பாளையம் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. பா.ம.க. அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார். கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் வடிவேல், மதியழகன், வன்னியர் சங்க தலைவர் துரை, செயலாளர்கள் முருகன், நாவப்பன், இளைஞரணி சேகர், புருஷோத்தமன், மகளிரணி இபெல், ஜோதி, மீனவரணி உத்திராடம் உட் பட பலர் பங்கேற்றனர்.
இதன்பின் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழைத்தேடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வருகிற 21-ந் தேதி சென்னையில் தொடங்கி 28-ந் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார். 3-ம் நாளான 23-ந் தேதி 10 மணிக்கு புதுவை கம்பன் கலையரங்கில் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.
அரசியல்சார்பற்ற நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். தமிழை மீட்க வலியுறுத்தி பிரச்சாரம் நடக்கிறது. தமிழகம், புதுவையில் தொழில் நிறுவனங்கள் பெயர் பலகையில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை.
இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.
- பெங்களூரு விஸ்வேஷ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்பமும் கேரள அரசின் பொதுக்கல்வித்துறையும் இணைந்து தென்னிந்திய அளவிலான அறிவியல் படைப்புகளுக்கான கண்காட்சியை திருச்சூரில் நடத்தியது.
- புதுவை கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் மண்டல மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று தேர்வாகி இப்போட்டியில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
பெங்களூரு விஸ்வேஷ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்பமும் கேரள அரசின் பொதுக்கல்வித்துறையும் இணைந்து தென்னிந்திய அளவிலான அறிவியல் படைப்புகளுக்கான கண்காட்சியை திருச்சூரில் நடத்தியது.
இதில் புதுவை புனித பேட்ரிக் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி சண்முகபிரியா, 8-ம் வகுப்பு மாணவி தையல்நாயகி ஆகியோர் குழு பிரிவில் புதுவையின் சார்பில் பங்கேற்று தென்னிந்திய அளவில் சிறந்த படைப்புகளுக்கான முதல் பரிசை பெற்றனர். இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போட்டியில் புதுவை மாணவர்கள் முதலிடம் பெற்று புதுவைக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.
முன்னதாக இவர்கள் புதுவை கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் மண்டல மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று தேர்வாகி இப்போட்டியில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த மாணவிகள் பள்ளியின் தாளாளர் பிரடரிக் ரெஜிஸ், பள்ளி முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, நெறியாளர் நீலா ஆகியோர் புதுவை கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- காரைக்கால் உள்ளிட்ட நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சேதம் அடைந்து விட்டன.
- காரைக்காலில் பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஹெக்டருக்கு என்ற கணக்கில் வழங்க வேண்டும்
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில வாரங்களில் காவேரி ஆற்றின் கடைமடை பகுதியான டெல்டா மாவட்டமான காரைக்கால் உள்ளிட்ட நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் பல இடங்களில் சேதம் அடைந்து விட்டன. இதே போல உளுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
எதிர்பாராத தவறான நேரத்தில் பெய்த பெருமழையால் முதலையே இழந்து நஷ்டத்தை அடைந்து கண்ணீரோடு இருக்கின்ற விவசாயிகளின் துயரத்தை குறைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே புதுவை அரசும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஏக்கருக்கு நிவாரணம் ரூ.20 ஆயிரம் என்பதோடு சற்று சேர்த்து, காரைக்காலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஹெக்டருக்கு என்ற கணக்கில் வழங்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர் பயிர்களுக்கும் தமிழ்நாடு போல நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு ஏ.வி. சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- புதுவை கவுண்டம் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நீர் குடம் பயணம் தொடக்க விழா நடைபெற்றது.
- விழாவில் நீரின் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நீர் குடத்தை அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, மார்ச் 22-ந் தேதி நிறைவு விழா நடக்கும்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டம் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நீர் குடம் பயணம் தொடக்க விழா நடைபெற்றது.
கவுண்டம்பாளையம்-வழுதாவூர் சந்திப்பில் இருந்து நீர் குடத்தை தண்ணீர் திருவிழா குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வரவேற்று பள்ளிக்கு எடுத்துச் சென்றனர்.
பள்ளியில், தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், முதல்வர் கவிதா ஆகியோர் நீர் குடத்தை பெற்றுக் கொண்டனர். பின், நடந்த விழாவில் உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ் ராஜா வாழ்த்திப் பேசினார்.
கோஜி ரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தரராஜன், குளங்களை காப்போம் குழுத் தலைவர் கார்த்திகேயன், வாட்டர் ஆப் புதுவை குழுத் தலைவர் தினேஷ், நன்செய் குழு நிறுவனர் அருள்சேகர் பாண்டிகேன் அமைப்பு புரகீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நீரின் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நீர் குடத்தை அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, மார்ச் 22-ந் தேதி நிறைவு விழா நடக்கும்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட் அலுவலர் ஜெயந்தி, ஆசிரியர்கள் நெடுஞ்செழியன், கார்த்திக், ஜீவா செய்திருந்தனர்.
- புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஒரு நாள் பயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
- இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் நடைபெற்ற 4-வது பிட் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஒரு நாள் பயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏனாமில் சில பணிகளுக்கு நிதி ஒதுக்கி கொடுத்திருந்தார். அப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெறப்பட்ட நிதியை சரியாக செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், திட்ட ங்களுக்கு தேவைப்படும் நிதியை தர தயாராக இருப்ப தாகவும் உறுதியளித்தார்.
இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் நடைபெற்ற 4-வது பிட் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். பின்னர் ஏனாமில் கட்டப்பட்டுவரும் 100 படுக்கைகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனை கிளை யையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- புதுவை மாநில தலித், பழங்குடி இயக்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் சிறப்புக்கூறு நிதியை முழுமையாக தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்கே செலவிட வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
- போலீசார் ஆம்பூர் சாலையில் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். அப்போது போலீ சாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில தலித், பழங்குடி இயக்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் சிறப்புக்கூறு நிதியை முழுமையாக தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்கே செலவிட வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா சிலை அருகே புறப்பட்ட ஊர்வலத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஏகாம்பரம், பாஸ்கர், ராஜா, பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டமன்றம் நோக்கி வந்தது.
போலீசார் ஆம்பூர் சாலையில் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். அப்போது போலீ சாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிறப்புக்கூறு நிதியை வேறு திட்டங்க ளுக்கு மாற்றக்கூடாது, நிதியை திருப்பித்தர வேண்டும். முழுமையாக ஆதிதிராவிடர்களுக்கு சிறப்புக்கூறு நிதியை செலவிட வேண்டும் என வலியுறுத்தியும், அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
- முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி மக்களை சந்திக்கும் ஒற்றுமை நடைபயணம் நடத்துவதாக போலி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
- 9 ஆண்டாக ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உலகிற்கே ஒரு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது. மத்திய, மாநில அரசை குறை சொல்லும் தகுதி நாராயணசாமிக்கு இல்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி மக்களை சந்திக்கும் ஒற்றுமை நடைபயணம் நடத்துவதாக போலி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
புதுவை மாநிலத்தை காக்கும் சக்தி காங்கிரஸ் கட்சி என்கிறார். 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து புதுவையை அழித்த கட்சி காங்கிரஸ். தனி கணக்கு ஆரம்பித்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கி புதுவை மாநிலத்தை அழிவு பாதைக்கு எடுத்துச்சென்றது.
பல ஆண்டுகளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை
கேள்விக்குறியாக்கிய பெருமை நாராயணசாமி யைத்தான் சேரும்.
9 ஆண்டாக ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உலகிற்கே ஒரு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது. மத்திய, மாநில அரசை குறை சொல்லும் தகுதி நாராயணசாமிக்கு இல்லை.
உலக நாடுகளின் பொருளாதார நிலையில் 5-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. எனவே நாராயணசாமியின் போலியான நாடகம் மற்றும் வார்த்தைகள் புதுவை மாநில மக்களிடம் எடுபடாது. இன்னும் 50 ஆண்டுகள் நாராயணசாமியும், காங்கிரஸ் கட்சியும் கனவு மட்டுமே காண வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. சமூக அமை ப்புகளு டன் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- இது புதுவை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இத்திட்டம் ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கக்கூடியதா க உள்ளது.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. சமூக அமை ப்புகளு டன் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-
மத்திய அரசு அழுத்தம் காரணமாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுவை அரசு ரூ.28 கோடி செலவில் கொண்டு வந்த 33 ஆயிரம் புதிய டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டர்களை மாற்றிவிட்டு, மொத்தம் 4.07 லட்சம் மின் இணைப்புகளுக்கும் ரூ.251.10 கோடி மதிப்பில் புதிய பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது புதுவை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இத்திட்டம் ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கக்கூடியதா க உள்ளது.
இத்திட்டத்தால் ஏற்படும் செலவு பொதுமக்கள் தலையில் சுமத்தப்படும். முன்கூட்டியே பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்ற கட்டாய நிலைக்கு மக்கள் தள்ளப் படுவர். இது முற்றிலும் மக்கள் விரோத திட்டமாகும்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும். மின் கட்டணமும் பல மடங்கு உயரும். புதுவை அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மூக நல அமைப்புகளை ஒன்றிணைத்து புதுவை-காரைக்காலில் ஒரே சமயத்தில் மாநிலம் தழுவிய மின்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப் படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியில் ஒரு லட்சத்து 13, 000 ஆயிரம் கோடி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றி அதானிக்கு முதலீடு செய்ய உறுதுணையாக இருந்த மோடி அரசை பதிவி விலகக் கோரி புதுவை முதலியார்பேட்டை எஸ்.பி.ஐ. வங்கி முன் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி என்ற கோபாலமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியில் ஒரு லட்சத்து 13, 000 ஆயிரம் கோடி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றி அதானிக்கு முதலீடு செய்ய உறுதுணையாக இருந்த மோடி அரசை பதிவி விலகக் கோரி புதுவை முதலியார்பேட்டை எஸ்.பி.ஐ. வங்கி முன் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி என்ற கோபாலமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் அரியூர் சமுதாய ஆரம்ப சுகாதார மையமும் இணைந்து தேசிய காசநோய் ஒழிப்புச் திட்டம் மற்றும் நோயினை கண்டறிதல் ஆய்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- வேதபிரியா, ஊர் பிரமுகர் முருகப்பன் மற்றும் டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல் மற்றும் நோய்க்கான சிகிச்சை கள் குறித்து பேசினார்கள்.
புதுச்சேரி:
அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் அரியூர் சமுதாய ஆரம்ப சுகாதார மையமும் இணைந்து தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் நோயினை கண்டறிதல் ஆய்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினசாமி ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில காசநோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர். கோவிந்த ராஜன் கலந்துகொண்டு காசநோய் குறித்து பேசினார். அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர். சதீஷ்குமார், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ தலைவர் டாக்டர். வேதபிரியா, ஊர் பிரமுகர் முருகப்பன் மற்றும் டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல் மற்றும் நோய்க்கான சிகிச்சை கள் குறித்து பேசினார்கள்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிதல் ஆய்வு முறை சிகிச்சை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வீடு தோறும் நோய் கண்டறிதல் நடை பயணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரெயில்வே திட்டம் கவர்னர் வேண்டுகோளை ஏற்று, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது சரியில்லாத கூற்று.
- புதுவை அரசு தன் நிலைப்பாடை எழுத்துப்பூர்வமாக தென்னகரெயில்வேக்கு கடிதம் அனுப்பினால்தான் திட்டம் உயிர்பெறும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
சென்னையிலிருந்து புதுவை வழியாக கடலூருக்கு ரெயில்வே திட்டம் கவர்னர் வேண்டுகோளை ஏற்று, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது சரியில்லாத கூற்று.
புதுவை எம்.பி.யாக நான் இருந்தபோது மத்திய ரெயில்வே அமைச்சர்களாக இருந்த லல்லுபிரசாத்யாதவ், வேலு ஆகியோரிடம் கூறி திட்டத்திற்கு அனுமதி பெற்றேன்.
2007-ல் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்து வந்த ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் நடந்தது. புதுவை அரசின் செயல்பாட்டால் இத்திட்டம் கிடப் பில் போடப்பட்டது. மத்திய அரசு இந்த ஆண்டும் ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது.
புதுவை அரசு தன் நிலைப்பாடை எழுத்துப்பூர்வமாக தென்னகரெயில்வேக்கு கடிதம் அனுப்பினால்தான் திட்டம் உயிர்பெறும். புதுவையில் உள்ள சில செல்வந்தர்களை திருப்திப்படுத்த அரசா ங்கம் நினைத்தால் இத்திட்டம் செயல்படாது. சிக்கல்களை கவர்னர் தீர்த்தால் திட்டத்திற்கு வழி பிறக்கும். இத்திட்டம் அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி. இது மக்களுக்கு பயன்படும் வகையில் கவர்னர் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காரைக்கால் மாவட்ட த்தில் கனமழை பெய்தது. கனமழையால் நெடுங்காடு, திருப்பட்டினம், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி உட்பட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 12 ஆ யிரத்து 500 ஹெக்டேர் நெற்பயிர்கள் முழுமையாக சேதம டைந்தது.
- காரைக்கால் மாவட்டத்தில் கனமழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் தலைமையில் குழு அமைத்து விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட த்தில் கனமழை பெய்தது. கனமழையால் நெடுங்காடு, திருப்பட்டினம், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி உட்பட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 12 ஆ யிரத்து 500 ஹெக்டேர் நெற்பயிர்கள் முழுமையாக சேதம டைந்தது. பாதிக்கப்பட்ட நெடுங்காடு, திருப்படினம் உட்பட பல இடங்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் ஆகியோர் தலைமையில் குழுவினர் சென்று விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
இதன்பின் நாஜிம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் கனமழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் தலைமையில் குழு அமைத்து விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை எடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என தளர்வுகளையும் கோரியு ள்ளார்.
புதுவை முதல்-அமைச்சரும், பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். தமிழகம்போல பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






