என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கொலை பற்றி அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
    • கொலை சம்பவம் காரணமாக அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் பழிக்கு பழியாக ரவுடி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

    புதுைவ அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் மாஞ்சாலை வீதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பிரவீன்(வயது19). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதாசிவம் மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் பிரவீன் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் ரோடு ஆர்.கே.நகர் பெரியார் சிலை அருகே வந்த போது அங்கு பதுங்கியிருந்த ஒரு கும்பல் பிரவீனை வழி மறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் தன்னை கொல்ல அந்த கும்பல் வழி மறித்ததை பார்த்தும் அக்கும்பலிடமிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பியோடினார்.

    ஆனால் அந்த கும்பல் பிரவீனை ஓடஓட விரட்டி கத்தியாலும், அரிவாளாளும் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது.

    இந்த கொலை பற்றி அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் பிரவீன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிரவீன் கொலை செய்யப்பட்டது ஏன்? அவரை கொலை செய்த கும்பல் யார்? என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே பிரவீன் சிறு வயது முதலே கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜிம்பாண்டியன் கொலை வழக்கில் பிரவீனுக்கு தொடர்பு இருந்தது. அப்போது பிரவீனுக்கு 17 வயதே ஆனதால் அவரை போலீசார் கைது செய்து அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிரவீன் தனி கோஷ்டியை உருவாக்கி கொண்டு அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தாக்கி வந்துள்ளார்.

    மேலும் பிரவீனுக்கும் ஜிம்பாண்டியனின் தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் இருந்து வந்தது.

    இதனால் ஜிம்பாண்டியனை கொலை செய்த பிரவீனை பழிக்கு பழியாக கொல்ல ஜிம்பாண்டியன் கூட்டாளிகள் திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜிம்பாண்டியனின் கூட்டாளியான ஆகாஷ் என்பவரை ஜிப்மர் ஆஸ்பத்திரி முன்பு பிரவீன் செருப்பால் தாக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    அதுநாள் முதல் பிரவீன் மீது ஆகாஷ் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் ரோட்டில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடிக்கும் போது பிரவீனுக்கும், ஆகாஷ் தரப்பினருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. நேற்று காலை பிரவீன் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில் ஆகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான மனோ, கவி, ஜான் மற்றும் ஷேக் ஆகியோர் பிரவீன் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரது தாயார் விஜயலட்சுமியிடம் உனது மகன் எங்கே என்று கேட்டுள்ளனர்.

    உன் மகனை சும்மா விடமாட்டோம் என்று கூறியதோடு உன் மகனின் கதையை முடித்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். நேற்று மாலை முதல் பிரவீனை அந்த கும்பல் நோட்டமிட்டு வந்துள்ளது.

    நேற்று இரவு 8 மணிக்கு பிரவீன் வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மதுவாங்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது அவரை கும்பல் பின் தொடர்ந்து வந்ததை பார்த்தும் பிரவீன் அவர்களிடமிருந்து சிக்காமல் இருக்க ஒவ்வொரு தெருவாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    கடைசியாக அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பெரியார் சிலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த பிரவீனை ஆகாஷ் தனது கூட்டாளிகள் 8 பேருக்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து ஓடஓட வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இதில் இரவோடு இரவாக கொலையாளிகள் 5 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த கொலை சம்பவம் காரணமாக அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார்.
    • மக்கள் முதலீட்டை கொள்ளையடித்த மத்திய அரசின் இமாலய ஊழலை கண்டித்தும், பயனற்ற மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ததை கண்டித்தும், புதுவை மின்துறையின் பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார்.

    முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், காங்கிரஸ் துணைத் தலைவர் பி.கே.தேவதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, வேல்முருகன், கோபி, மருதுபாண்டி, செல்வநாதன், செந்தில்குமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், ஆறுமுகம், ராஜு பாபு, விநாயக முருகன், திருமலை, லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மக்கள் முதலீட்டை கொள்ளையடித்த மத்திய அரசின் இமாலய ஊழலை கண்டித்தும், பயனற்ற மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ததை கண்டித்தும், புதுவை மின்துறையின் பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • புதுவை அரசு பிரீபெய்டு மின்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. பிரீபெய்டு மின்திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
    • பழைய பஸ் நிலையம் அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பிரீபெய்டு மின்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

    பிரீபெய்டு மின்திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு (எம்.எல்.), விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரீபெய்டு மின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

    இதற்காக பழைய பஸ் நிலையம் அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் இந்திய கம்யனிஸ்டு நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், சேதுசெல்வம், அபிஷேகம், தினேஷ்பொன்னையா, மார்க்சிஸ்டு பிரதேச செயலாளர் ராஜங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், ராமச்சந்திரன், கலியமூர்த்தி, ராமசாமி, கொளஞ்சியப்பன், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், தலையாரி, அமுதவன், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்பிரமணியன், மோதிலால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஊர்வலம் சோனாம் பாளைம் வாட்டர்டேங்க் அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • சாரதா வீட்டில் தனியாக இருந்தார். காலை 11.30 மணியளவில் அவரின் வீட்டில் பலத்த வெடி சத்தம் கேட்டது.
    • போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த சாரதாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 50). வட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சாரதா(43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இன்று காலை வழக்கம்போல குருமூர்த்தியும், மகன்களும் வட்டிக்கடைக்கு சென்றுவிட்டனர். சாரதா வீட்டில் தனியாக இருந்தார். காலை 11.30 மணியளவில் அவரின் வீட்டில் பலத்த வெடி சத்தம் கேட்டது.

    அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். வீட்டின் மெயின்கதவு நிலையோடு பெயர்ந்து கிடந்தது. அருகிலிருந்த வீட்டின் ஜன்னல் விரிசல் விட்டிருந்தது. வீட்டுக்குள் சாரதா காயமடைந்து கிடந்தார். உடனடியாக போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த சாரதாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

    ஆனால் 2 சிலிண்டரும் முழுமையாக இருந்தது. இதனால் வீட்டில் வெடிசத்தம் ஏற்பட்டது எதனால்? வெடிமருந்து வைத்திருந்தார்களா? நாட்டு வெடிகுண்டு ஏதும் வீசப்பட்டதா? எனபோலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வள்ளலாருக்கு பாரத ரக்க்ஷா மன்ச்சா ர்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பிள்ளையார்குப்பம், கன்னியகோவில், முள்ளோடை பகுதியில் நடந்தது.
    • மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ருத்ரமூர்த்தி தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வள்ளலாருக்கு பாரத ரக்க்ஷா மன்ச்சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பிள்ளையார்குப்பம், கன்னியகோவில், முள்ளோடை பகுதியில் நடந்தது. 3 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ருத்ரமூர்த்தி தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர்கள் குமாரசாமி, வக்கீல். தர்மலிங்கம், துணை செயலாளர் ஆறுமுகம், இவாமென்ஸ் தலைவர் குமரேசன், சரவணன், ஊடக தலைவர் சிவா மற்றும் பாகூர் பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் சுற்றுச்சூழல் நிறுவனம் உள்ளது.
    • எவர்கிரீன் நிறுவனரும், புதுவை மாசுக்கட்டுப்பாட்டு துறை உறுப்பு செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு, அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் சுற்றுச்சூழல் நிறுவனம் உள்ளது.

    இந்நிறுவனம், பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, கந்தன்பேட் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் போன்ற சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள இளைஞ ர்களால் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு, தினசரி மதிய உணவு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, வள்ளலார் பிறந்த நாளான நேற்று மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    எவர்கிரீன் நிறுவனரும், புதுவை மாசுக்கட்டுப்பாட்டு துறை உறுப்பு செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு, அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன் மூலமாக, அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர் பயன்பெறுவார்கள்.

    இந்நிகழ்ச்சியில், கிராம பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து வந்தன.
    • இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து வந்தன.

    இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் சில சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும் குற்ற செயல்களுக்கும் பயன்படுத்தி வந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் மின் துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் புதிய மின் கம்பங்கள் அமைத்தல், புதிய மின் விளக்குகள் பொறுத்தி பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வல்லவன், துணை பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வந்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு திரும்பிய ரேணுகாதேவி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    புதுச்சேரி:

    வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வந்ததை

    தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை பழைய சாரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவர் சேர் பின்னும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாலமுருகன். இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபோல் நேற்று மாலை பாலமுருகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது பாலமுருகனை அவரது தாயார் ரேணுகாதேவி வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் இப்படி மது குடித்து விட்டு வருகிறாயே என கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த பாலமுருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு திரும்பிய ரேணுகாதேவி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து பாலமுருகனை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை ஜெயமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் வழங்குகிறார்.
    • ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாளையொட்டி தனது பெற்றோர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து ஆசி பெறுகிறார். இதனைதொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. நீடூழி வாழவேண்டி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க தேர் இழுக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் நாளை வழங்குகிறார்.

    புதுவை அரசு கொறடாவும், இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரசார் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

    அதுபோல் நாளை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரசார் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

    ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாளையொட்டி தனது பெற்றோர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து ஆசி பெறுகிறார். இதனைதொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. நீடூழி வாழவேண்டி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க தேர் இழுக்கிறார்கள். இதனை தொடர்ந்து 7 மணிக்கு சித்தானந்தா கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பூத்துறையில் உள்ள மனநல காப்பகத்தில் மனநலம் குன்றியவர்களுக்கு காலை உணவு மற்றும் புத்தாடைகள் வழங்குகின்றனர்.

    இதன் பின்னர் திரவுபதியம்மன் கோவில், முத்திரையர்பாளையம் செங்கழுநீரம்மன் கோவில், சாணரப்பேட்டை கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து கேக் வெட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதனைதொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் 13-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை புதுவை வழுதாவூர் சாலை கோவிந்தபேட்டை-முத்திரையர்பாளையம் பகுதியில் உள்ள இந்திராநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இந்திராநகர் தொகுதி மக்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

    பிறந்தநாளையொட்டி இந்திராநகர் தொகுதியை சேர்ந்த ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. வழங்குகிறார். இரவு 7.30 மணிக்கு தந்தை பெரியார் நகரில் வக்ரதுண்ட விநாயகர் கோவிலில் அறங்காவலர் குழு சார்பில் நடைபெறும் சிறப்பு பூஜையில் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்.

    • பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதத்தின் கடைசி வானொலியில் உரை நிகழ்த்துவார்.
    • 'மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பதில் அளித்து வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி வாழ்த்துக்கள்' கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதத்தின் கடைசி வானொலியில் உரை நிகழ்த்துவார்.

    அதன் தமிழாக்கமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம். இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து 'நமோ ஆப்' மூலமாக ஆன்லைனில் வினாடி வினா நடத்தப்படும்.

    அதில் சிறப்பாக பதில் தெரிவித்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை பூரணாங்கு ப்பத்தைச் சேர்ந்த வரும், அரியாங்குப்பம் மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி பொதுச் செயலாளருமான கிருஷ்ணகுமார் என்ற வாலிபருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் 'மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பதில் அளித்து வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி வாழ்த்துக்கள்' கூறியுள்ளார்.

    இந்த கடிதத்தினை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் காண்பித்து கிருஷ்ணகுமார் வாழ்த்து பெற்றார். மேலும் பிரதமர் நிகழ்த்திய மனதின் குரல் நிகழ்ச்சி 50 பாகங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகம் ஒன்றை பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து அனுப்பியதை சபாநாயகர் வெளியிட்டார்.

    • தனியார் பஸ் போலீஸ்காரர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியது.
    • போலீஸ்காரர் பழனி பஸ்சில் ஏறி வந்து டிரைவரை ஹெல்மெட் மற்றும் கையால் தாக்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக சிவராந்தகம் பகுதியை சேர்ந்த பழனி பணியாற்றி வருகிறார். இவர் சக போலீஸ்காரருடன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் பகுதியில் ரோந்து சென்றார்.

    மாடவீதி சந்திப்பில் சென்ற போது திருக்கனூரில் இருந்து வில்லியனூர் வழியாக புதுவைக்கு வந்த தனியார் பஸ் போலீஸ்காரர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் அவர்கள் கீழே விழுந்தனர்.

    இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் பழனி பஸ்சில் ஏறி வந்து டிரைவரை ஹெல்மெட் மற்றும் கையால் தாக்கினார்.

    இந்த காட்சி பஸ்சில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    பஸ் டிரைவர் மீது தவறு இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்து வேண்டுமே தவிர அவரை போலீஸ்காரர் ஹெல்மெட்டால் தாக்குவதும், அது தொடர்பாக வெளியான சி.சி.டி.வி. வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    போலீஸ்காரர் தாக்கியதில் லேசான காயமடைந்த பஸ் டிரைவர் ஆஸ்பத்திரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை முதலி யார்பேட்டை விடுதலை நகரில் வலம்புரி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது.
    • பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளரும் ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் நிறுவனருமான வெற்றிச்செல்வம் தலைமை யில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதலி யார்பேட்டை விடுதலை நகரில் வலம்புரி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது.

    கோயில் அறங்காவலர் குழு சார்பில் கடலூர் ரோடு சாலை முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் செடல் குத்திக்கொண்டு பால்குடம் எடுத்துக்கொண்டு கடலூர் ரோடு, உழந்தைக் கீழப்பாளையம் புவன்கரே வீதி வழியாக விடுதலை நகர் வலம்புரி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. செடல் குத்துதல் மற்றும் பால்குட ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்களோடு கலந்து கொண்டனர்.

    பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளரும் ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் நிறுவனருமான வெற்றிச்செல்வம் தலைமை யில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இதில் ரிப்லேக்ஸ் டிவைன் பயோ மெடிக்கல் கேர் பாத சிகிச்சை மருத்துவ மைய நிர்வாக இயக்குனர் டாக்டர் கருணாகரன்- ஜெயலட்சுமி தலைமையில் டாக்டர்கள் புகழேந்தி, முனியப்பன், வக்கீல் நவரோஜ், செந்தில்குமார், கெஸ்பர், கஜலட்சுமி, மங்கையர்க்கரசி ஸ்ரீ அரவிந்த், கவுதம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் பன்னீர்செல்வம், குணசேகரன், கண்ணையன், ராமலிங்கம், ரங்கநாதன், பச்சையப்பன், மகாலிங்கம், மதன் ,சரவணன், பொன்னுசாமி, சங்கர், பிரதாப், செல்வகணபதி, ஜெயமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தைப்பூச விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×