என் மலர்
புதுச்சேரி
- திருக்கனூர் செல்லிப்பட்டு கிராமத்தில் சீர் செல்வ முருகன் கோவிலில் தைப்பூச தீமிதி திருவிழா நடைபெற்றது.
- 56 -ம் ஆண்டு தைப்பூச தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக 5 மணிக்கு சீர் செல்வ முருகன் சுவாமி காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி:
திருக்கனூர் செல்லிப்பட்டு கிராமத்தில் சீர் செல்வ முருகன் கோவிலில் தைப்பூச தீமிதி திருவிழா நடைபெற்றது.
புதுவையை அடுத்த திருக்கனூர் செல்லிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத சீர்செல்வ முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
அதன்படி 56 -ம் ஆண்டு தைப்பூச தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக 5 மணிக்கு சீர் செல்வ முருகன் சுவாமி காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 7 மணி அளவில், தைப்பூச தீமிதி, காவடி உற்சவம் நடைபெற்றது. இதில் சுற்று கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
புதுவை மாநிலத்திலேயே தைப்பூச திருவிழாவில் தீ மிதித்து வழிபடும் ஒரே கோவில் என்பது தனி சிறப்பாகும்.
- வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ் தலமையில் கல் மாதா தூண் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று லூர்து அன்னை மாதாவினுடைய தூணை அர்ச்சித்து ஆசிர்வாதம் பெற்றார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ் தலமையில் கல் மாதா தூண் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
பேராயர் பிரான்சிஸ் கலிஸ் 32 அடி உள்ள ஒரு கல் வில்லியனூர் தூய லூர்து அன்னை மாதாவினுடைய தூணை மந்திரித்து அர்ச்சித்து ஆசிர்வதித்து திறந்து வைத்தார்.
அனைத்து பணிகளையும் திருத்தலத்தினுடைய அதிபர் பிச்சைமுத்து அடிகளார், உதவி தந்தை ஜீவா பங்கு பேரவை மக்களோடு இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று லூர்து அன்னை மாதாவினுடைய தூணை அர்ச்சித்து ஆசிர்வாதம் பெற்றார். பேரவை நிர்வாகிகள் மற்றும் தி.மு.க . நிர்வாகிகள் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், சபரிநாதன், பாஸ்கர், மந்திரிகுமார், ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ஓசூர் அதியமான் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களிடையிலான சதுரங்க போட்டி நடந்தது. போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 537 மாணவர்கள் பங்கேற்றனர்.
- இதே போட்டியில் புதுவை மாணவன் வருண் பிரபாகரன் 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 15-வது இடமும், கனிஷ்வர்மா 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 9-வது இடமும் பெற்றனர்.
புதுச்சேரி:
ஓசூர் அதியமான் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களிடையிலான சதுரங்க போட்டி நடந்தது.
போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 537 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டி 7 ,9 ,11 ,13, மேற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நடந்தது.
போட்டியில் 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புதுவை மாணவர் மாதேஷ் குமார் 9-க்கு 8 புள்ளிகள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.
இதே போட்டியில் புதுவை மாணவன் வருண் பிரபாகரன் 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 15-வது இடமும், கனிஷ்வர்மா 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 9-வது இடமும் பெற்றனர்.
- புதுவை அரசு வேளாண் துறை மதகடிப்பட்டு உழவர் உதவியகம் சார்பில் ஆத்மா திட்டம் மூலம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
- கோழிகுஞ்சு வளர்ப்பு முறைகள், பாதுகாப்பு முறை குறித்து கோழிக் குஞ்சுகள் வளர்ப்பால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சன்னியாசிக்குப்பம் பாலமுருகன் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண் துறை மதகடிப்பட்டு உழவர் உதவியகம் சார்பில் ஆத்மா திட்டம் மூலம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் நடராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகளை வழங்கினார்.
இதில் சன்னியாசிக்குப்பம் இந்திரா நகர் பகுதிகளை சேர்ந்த 20 பெண்கள் பயன் பெற்றனர்.
கோழிகுஞ்சு வளர்ப்பு முறைகள், பாதுகாப்பு முறை குறித்து கோழிக் குஞ்சுகள் வளர்ப்பால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சன்னியாசிக்குப்பம் பாலமுருகன் தெரிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, விரிவாக்க பணியாளர் பக்கிரி ஆகியோர் செய்திருந்தனர்.
- புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் கீழ் கரிக்கலாம்பக்கம் உழவர் உதவியகத்தை சேர்ந்த காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
- முகாமில் கரிக்க லாம்பாக்கம் மற்றும் ஏம்பலம், கோர்க்காடு ஆகிய பகுதிகள் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் கீழ் கரிக்கலாம்பக்கம் உழவர் உதவியகத்தை சேர்ந்த காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் அலுவலர் தினகரன் காய்கறி சாகுபடி செய்யும் முறை, லாபம் அடைவது குறித்து விளக்கிப் பேசினார்.டாக்டர் செல்வமுத்து ஆத்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகள் எவ்வாறு பயன்பெறுகின்றனர் என்றும் இனி செயல்படு த்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
முகாமில் கரிக்க லாம்பாக்கம் மற்றும் ஏம்பலம், கோர்க்காடு ஆகிய பகுதிகள் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
காய்கறி விதை மினி கிட் மற்றும் காய்கறி ஸ்பிரேயர் மற்றும் நுண்ணுட்டி சத்து ஆகியவை இலவசமாக விவசாயி களுக்கு வழங்க ப்பட்டது இறுதியில் கிராம விரிவாக்க பணியாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
விழாவின் ஏற்பாடுகளை தப்புசாமி செய்திருந்தார்.
- உலக நாதன் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
- உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு பூபாலன் நகரை சேர்ந்தவர் உலக நாதன் (வயது 49). மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
தற்போது புதுவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உலகநாதன் பிட்காயினில் முதலீடு செய்ய விரும்பினார். அதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய தள செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் இருந்த செல்போன் எண்ணில் உலக நாதன் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ஆன்லைன் வர்த்தக மேலாளர் மனோஜ் என்றும், பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும், இதில் முதலீடு செய்த பலர் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டார்.
இதனை உண்மை என்று நம்பிய, உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார். அடுத்த சில நாட்களில் அந்த செயலியின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உலகநாதன், மனோஜை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த உலகநாதன், இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர் குறித்து விசாரித்து வருகிறார்.
- காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார்.
- முதல்கட்டமாக முத்தியால்பேட்டை தொகுதியில் நடைபயணம் தொடங்கியது. முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே தொடங்கிய நடைபயணத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த நடைபயணம் காஷ்மீரில் முடிவடைந்தது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் கையோடு கைகோர்ப்போம் என்ற நடைபயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி புதுவை பிரதேச காங்கிரஸ் சார்பில் புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் தொகுதிவாரியாக ஒற்றுமை நடைபயணம் நடக்க உள்ளது. முதல்கட்டமாக முத்தியால்பேட்டை தொகுதியில் நடைபயணம் தொடங்கியது.
முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே தொடங்கிய நடைபயணத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நடைபயணத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம், கிருஷ்ணராஜ், ராஜாகுமார், மாவட்ட தலைவர் வேல்முருகன், மகிளா காங்கிரஸ் விஜயகுமாரி, ஜெயலட்சுமி, சந்திரிகா, நிர்வாகிகள் லட்சுமிகாந்தன், முத்துராமன், தனுசு, மருதுபாண்டி, ராஜேந்திரன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நடைபயணம் முத்தியால்பேட்டை முழுவதும் சுற்றி வ ந்தது. நடைபயணத்தின்போது காங்கிரசார் பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகம் செய்தனர். அந்த நோட்டீசில் புதுவைக்கு மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, மத்திய நிதி கமிஷனில் சேர்ப்பு, ரூ.3 ஆயிரம் கோடி மானியம் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு அளித்தது. இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படவில்லை. விவசா யிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யவில்லை. ரேஷன்கடைகளை திறக்கவில்லை. அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையீட்டால் முதல்-அமைச்சர் அடிபணிந்து அடிமை ஆட்சி நடத்துகிறார். எல்லா துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
- புதுவையில் அமைந்துள்ள பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி 1792-ம் ஆண்டு குருமடமாகவும், கல்லூரியாகவும் தொடங்கப்பட்டது.
- 1934-ம் ஆண்டு முதல் குழு மாணவர்கள் தேர்வை சந்தித்து அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 1978-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி ெதாடங்கப்பட்டது. தற்போது 7 ஆயிரத்து 646 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் அமைந்துள்ள பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி 1792-ம் ஆண்டு குருமடமாகவும், கல்லூரி யாகவும் தொடங்க ப்பட்டது. இப்போது அமைந்துள்ள இப்பள்ளி 1844-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1846 மார்ச் 19-ந் தேதி பள்ளி தொடங்கப்பட்டது.
இப்பள்ளி தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. 1932-ம் ஆண்டு இப்பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் அங்கீகாரம் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.
1934-ம் ஆண்டு முதல் குழு மாணவர்கள் தேர்வை சந்தித்து அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 1978-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி ெதாடங்கப்பட்டது. தற்போது 7 ஆயிரத்து 646 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
220 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்த பெருபான்மையான மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங், சட்டம் என தொழில் சார்ந்த கல்வி கற்று சாதனை படைத்து வருகின்றனர்.
புதுவையில் பெத்தி செமினார் தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான விழா வருகிற 6-ந் தேதி ெதாடங்கி 8-ந் தேதி வரை முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி 175-வது ஆண்டு விழாவின் முதல் நாள் வருகிற 6-ந் தேதி மாலை 5.15 மணியளவில் உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப்பள்ளியில் ஐதராபாத் பேராயர் கர்த்தினல். அந்தோணி பூலே தலைமையில் நடக்கிறது.
புதுவை-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் கலிஸ்ட், செங்கல்பட்டு மாவட்ட ஆயர் டாக்டர் நீதிநாதன், சேலம் மாவட்ட ஆயர் டாக்டர் அருள்செல்வம் ராயப்பன் ஆகியோரும் அருட்பணியாளர்களும் கலந்து கொண்டு நன்றி கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.
இதில் அருள் சகோதரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள, மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
2-ம் நாள் 175-வது பள்ளி ஆண்டு விழா 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.15 மணியளவில் உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்துரை வழங்குகிறார்.
புதுவை-கடலூர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆசீர் உரையாற்றுகிறார். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், வைத்திலிங்கம் எம்.பி., அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப முதன்மை அதிகாரி ராபர்ட் ஜெரால்டு ரவி, தென் மண்டல இயக்குனர் (சுற்றுலாத்துறை) முகமது பாருக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
விழாவிற்க்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமையில் உதவி தந்தை ஜீவா எட்வர்ட் எடிசன் ஆகியோர் செய்துள்ளனர்.
3-ம் நாள் விழா 8-ந் தேதி மாலை 6 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 175-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.
இதில் 1950-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
- லண்டன் பாராளு மன்றத்தில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நவபாரத் மோட்சா சார்பில் குளோபல் இன்ஸ்பிரேஷனல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
புதுச்சேரி:
லண்டன் பாராளு மன்றத்தில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நவபாரத் மோட்சா சார்பில் குளோபல் இன்ஸ்பிரேஷனல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இந்திய அளவில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், சமூக சேவை, பொருளாதாரம் போன்ற வற்றில் சாதித்தவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் தென்னிந்தியா அளவில் புதுவை கலாம் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி 430 பிரசவத்துக்கு உதவி சிறப்பான சமுக சேவை புரிந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அவரை புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
நிகழ்ச்சியில் அமைச்சரின் தனி செயலர் மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கதிர்காமம் தொகுதி குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார நடைபயணம் தொடங்கியது.
- தொகுதி முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத குண்டும். குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கதிர்காமம் தொகுதி குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார நடைபயணம் தொடங்கியது.
இந்திரா காந்தி சிலை அருகே பிரச்சார நடை பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் சேதுசெல்வம் தொடங்கி வைத்தார். தொகுதி செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். பயணத்தில் நிர்வாகிகள் பாலகங்காதரன், சண்முகம், மகாலிங்கம், கண்ணன், செங்குட்டுவன், ராகினி, குமரேசன், புளோரியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தொகுதி முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத குண்டும். குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மின்துறை தனியார் மயத்தை கைவிட வேண்டும். புதைவட கேபிள் அமைக்க வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் நடத்தப்பட்டது.
- புதுவை பிரதேச மார்க்சிஸ்ட்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- அப்போது ரேசன் கடைகளை திறப்பதற்கான கோப்பு அரசுக்கு அனுப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி யளித்தார்.
புதுச்சேரி:
புதுவை பிரதேச மார்க்சிஸ்ட்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரேஷன்கடைகளை திறக்கக்கோரி அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு நியாயமான போராட்ட த்தில் ஈடுபட்டனர். துறை இயக்குனர் சக்திவேல் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ரேசன் கடைகளை திறப்பதற்கான கோப்பு அரசுக்கு அனுப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி யளித்தார். அதிகாரியின் கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிட ப்பட்டது.
போராட்டத்தை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என காவல்துறை யினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். பெண்கள் போராட்டத்தில் ஈடுபட மத்திய, மாநில அரசுகளே காரணம். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூட்டமைப்பினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதை மார்க்சிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வழக்குப்பதிவு செய்து அவர்களின் போராட்ட உணர்வை முடக்க நினைப்பது ஒருபோதும் வெற்றி அடை யாது என்பதை அரசு உணரவேண்டும்.
பெண்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்துவிட்டு ரேஷன் கடைகளை உடனே திறக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வில்லியனூர் தொகுதி குட்பட்ட வி.மணவெளி தி.மு.க. கிளை சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பழனிச்சாமி, தட்சணா மூர்த்தி, கலியபெருமாள், சபாபதி, கிளைச்செயலாளர்கள், வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி குட்பட்ட வி.மணவெளி தி.மு.க. கிளை சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மணவெளி தர்மராஜ் ஏற்பாட்டில் அங்குள்ள மெயின் ரோட்டில் அண்ணா உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பழனிச்சாமி, தட்சணா மூர்த்தி, கலியபெருமாள், சபாபதி, கிளைச்செயலாளர்கள், வாசுதேவன், அரிகரன், பாலகுரு, நடராஜன் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேசன், அய்யனார், ராஜேந்திரன், ரமேஷ், கோபிநாதன், டிரைவர் முருகன், லட்சுமணன், ஜீவா, கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






