search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பாராட்டு
    X

    ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பாராட்டிய காட்சி.

    ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பாராட்டு

    • லண்டன் பாராளு மன்றத்தில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நவபாரத் மோட்சா சார்பில் குளோபல் இன்ஸ்பிரேஷனல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

    புதுச்சேரி:

    லண்டன் பாராளு மன்றத்தில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நவபாரத் மோட்சா சார்பில் குளோபல் இன்ஸ்பிரேஷனல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இந்திய அளவில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், சமூக சேவை, பொருளாதாரம் போன்ற வற்றில் சாதித்தவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் தென்னிந்தியா அளவில் புதுவை கலாம் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி 430 பிரசவத்துக்கு உதவி சிறப்பான சமுக சேவை புரிந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    அவரை புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சரின் தனி செயலர் மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×