என் மலர்

  புதுச்சேரி

  வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற வாலிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
  X

  வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற வாலிபர் கிருஷ்ணகுமாரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வாழ்த்திய காட்சி.

  வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற வாலிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதத்தின் கடைசி வானொலியில் உரை நிகழ்த்துவார்.
  • 'மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பதில் அளித்து வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி வாழ்த்துக்கள்' கூறியுள்ளார்.

  புதுச்சேரி:

  பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதத்தின் கடைசி வானொலியில் உரை நிகழ்த்துவார்.

  அதன் தமிழாக்கமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம். இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து 'நமோ ஆப்' மூலமாக ஆன்லைனில் வினாடி வினா நடத்தப்படும்.

  அதில் சிறப்பாக பதில் தெரிவித்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை பூரணாங்கு ப்பத்தைச் சேர்ந்த வரும், அரியாங்குப்பம் மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி பொதுச் செயலாளருமான கிருஷ்ணகுமார் என்ற வாலிபருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் 'மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பதில் அளித்து வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி வாழ்த்துக்கள்' கூறியுள்ளார்.

  இந்த கடிதத்தினை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் காண்பித்து கிருஷ்ணகுமார் வாழ்த்து பெற்றார். மேலும் பிரதமர் நிகழ்த்திய மனதின் குரல் நிகழ்ச்சி 50 பாகங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகம் ஒன்றை பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து அனுப்பியதை சபாநாயகர் வெளியிட்டார்.

  Next Story
  ×