search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tuberculosis diagnosis camp"

    • அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் அரியூர் சமுதாய ஆரம்ப சுகாதார மையமும் இணைந்து தேசிய காசநோய் ஒழிப்புச் திட்டம் மற்றும் நோயினை கண்டறிதல் ஆய்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • வேதபிரியா, ஊர் பிரமுகர் முருகப்பன் மற்றும் டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல் மற்றும் நோய்க்கான சிகிச்சை கள் குறித்து பேசினார்கள்.

    புதுச்சேரி:

    அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் அரியூர் சமுதாய ஆரம்ப சுகாதார மையமும் இணைந்து தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் நோயினை கண்டறிதல் ஆய்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினசாமி ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில காசநோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர். கோவிந்த ராஜன் கலந்துகொண்டு காசநோய் குறித்து பேசினார். அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர். சதீஷ்குமார், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ தலைவர் டாக்டர். வேதபிரியா, ஊர் பிரமுகர் முருகப்பன் மற்றும் டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல் மற்றும் நோய்க்கான சிகிச்சை கள் குறித்து பேசினார்கள்.

    முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிதல் ஆய்வு முறை சிகிச்சை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வீடு தோறும் நோய் கண்டறிதல் நடை பயணம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி அருகே மேற்கு ராஜாபாளையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
    • இம்முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேற்கு ராஜாபாளையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.ஆரியபாளையம் வட்டார

    மருத்துவ அலுவலர் சம்பத்கு மார் தலைமையில், காசநோய் மேற்பார்வையாளர்கள் விஜயசாரதி, அன்பழகன், நம்பிக்கை மைய பணியா ளர்கள் லட்சுமணன், வித்யா, அகிலா, சுஜிதா நிதிஷ்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர், நடமாடும் எக்ஸ்-ரே பரிசோதனை இயந்திரத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு காசநோய் பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பேபி பாக்யராஜ், உறுப்பினர்கள் ஜெயராமன், வீரமுத்து, அங்கமுத்து, செந்தில்குமார், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காச நோய் பரிசோதனை செய்யப்பட்டது.
    • சோபா ஊட்டச்சத்து உணவு குறித்து விளக்கினார் .

    சேலம்:

    தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக சேலத்தில் பொதுமக்களுக்காக காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. டி.டி.எம்.சி. இயக்குனர் பிரான்சினா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அந்தோணி வரவேற்றார்.

    சேலம் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் டாக்டர் கணபதி காசநோய் பரவும் விதம், தடுப்புமுறைகள், காசநோயாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். முகாமில் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காச நோய் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் பொது மக்கள் பலர்ப யன் அடைந்தனர். இதில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியராஜா காச ஒழிப்பு உறுதிமொழி வாசித்தார். பின்னர் சோபா ஊட்டச்சத்து உணவு குறித்து விளக்கினார் .

    முதுநிலை மேற்பார்வை யாளர் ஸ்ரீ சதாசிவம் ஜெயப்பிரகாசம் மற்றும் தூய மரியன்னை மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×