என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காச நோய் கண்டறியும் முகாம்"

    • முகாமில் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காச நோய் பரிசோதனை செய்யப்பட்டது.
    • சோபா ஊட்டச்சத்து உணவு குறித்து விளக்கினார் .

    சேலம்:

    தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக சேலத்தில் பொதுமக்களுக்காக காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. டி.டி.எம்.சி. இயக்குனர் பிரான்சினா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அந்தோணி வரவேற்றார்.

    சேலம் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் டாக்டர் கணபதி காசநோய் பரவும் விதம், தடுப்புமுறைகள், காசநோயாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். முகாமில் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காச நோய் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் பொது மக்கள் பலர்ப யன் அடைந்தனர். இதில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியராஜா காச ஒழிப்பு உறுதிமொழி வாசித்தார். பின்னர் சோபா ஊட்டச்சத்து உணவு குறித்து விளக்கினார் .

    முதுநிலை மேற்பார்வை யாளர் ஸ்ரீ சதாசிவம் ஜெயப்பிரகாசம் மற்றும் தூய மரியன்னை மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×