என் மலர்
புதுச்சேரி

அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் சார்பில் காசநோய் கண்டறிதல் ஆய்வு முகாம் தொடக்க விழாவில் மருத்துவர்கள் கலந்து கொண்டு காசநோய் பற்றி பேசிய போது எடுத்த படம்.
காசநோய் கண்டறிதல் முகாம்
- அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் அரியூர் சமுதாய ஆரம்ப சுகாதார மையமும் இணைந்து தேசிய காசநோய் ஒழிப்புச் திட்டம் மற்றும் நோயினை கண்டறிதல் ஆய்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- வேதபிரியா, ஊர் பிரமுகர் முருகப்பன் மற்றும் டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல் மற்றும் நோய்க்கான சிகிச்சை கள் குறித்து பேசினார்கள்.
புதுச்சேரி:
அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் அரியூர் சமுதாய ஆரம்ப சுகாதார மையமும் இணைந்து தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் நோயினை கண்டறிதல் ஆய்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினசாமி ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில காசநோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர். கோவிந்த ராஜன் கலந்துகொண்டு காசநோய் குறித்து பேசினார். அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர். சதீஷ்குமார், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ தலைவர் டாக்டர். வேதபிரியா, ஊர் பிரமுகர் முருகப்பன் மற்றும் டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல் மற்றும் நோய்க்கான சிகிச்சை கள் குறித்து பேசினார்கள்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிதல் ஆய்வு முறை சிகிச்சை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வீடு தோறும் நோய் கண்டறிதல் நடை பயணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






