என் மலர்
புதுச்சேரி

சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசு வழங்கிய காட்சி.
பேட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை
- பெங்களூரு விஸ்வேஷ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்பமும் கேரள அரசின் பொதுக்கல்வித்துறையும் இணைந்து தென்னிந்திய அளவிலான அறிவியல் படைப்புகளுக்கான கண்காட்சியை திருச்சூரில் நடத்தியது.
- புதுவை கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் மண்டல மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று தேர்வாகி இப்போட்டியில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
பெங்களூரு விஸ்வேஷ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்பமும் கேரள அரசின் பொதுக்கல்வித்துறையும் இணைந்து தென்னிந்திய அளவிலான அறிவியல் படைப்புகளுக்கான கண்காட்சியை திருச்சூரில் நடத்தியது.
இதில் புதுவை புனித பேட்ரிக் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி சண்முகபிரியா, 8-ம் வகுப்பு மாணவி தையல்நாயகி ஆகியோர் குழு பிரிவில் புதுவையின் சார்பில் பங்கேற்று தென்னிந்திய அளவில் சிறந்த படைப்புகளுக்கான முதல் பரிசை பெற்றனர். இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போட்டியில் புதுவை மாணவர்கள் முதலிடம் பெற்று புதுவைக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.
முன்னதாக இவர்கள் புதுவை கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் மண்டல மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று தேர்வாகி இப்போட்டியில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த மாணவிகள் பள்ளியின் தாளாளர் பிரடரிக் ரெஜிஸ், பள்ளி முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, நெறியாளர் நீலா ஆகியோர் புதுவை கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.






