search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleared"

    • வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் இருப்ப தினாலும் கொசுக்கள் உற்பத்தி பெருகிவிட்டது.
    • பொதுமக்கள் சுகாதாரம் குன்றி நோய்வா ய்ப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் தற்போது நிலவி வரும் பருவகால மாற்றத்தினாலும், பெரிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால் மற்றும் ப-வடிவ, யூ-வடிவ வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் இருப்பதினாலும் கொசுக்கள் உற்பத்தி பெருகிவிட்டது.

    இதனால் பொதுமக்கள் சுகாதாரம் குன்றி நோய்வா ய்ப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொசுக்களின் தொல்லையிலிருந்து பொதுமக்களை மீட்டெடுத்து அவர்கள் சுகாதாரத்தைப் பேணிக்காக்க உடனே அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாரி கொடுக்கும்படி உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்ற தலைமைப்பொறியாளர் நீர்பாசனத்துறை செயற்பொ றியாளர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு அனைத்து கால்வா ய்களையும் தூர்வாரும் படி கூறினார்.

    அப்போது அவை தலைவர் ரவி, தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி ராஜி, கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் சந்துரு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 4 ரதவீதிகளிலும் தார்ச்சாலைகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சாலையோரம் உள்ள விளம்பர பலகைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சிறப்பு பெற்றது ஆனித்தேரோட்டம். இந்தாண்டு திருவிழா வருகிற 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டம் 11-ந் தேதி நடக்கிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோலாகலமாக நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து ஆனித்தேரோட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தையொட்டி ரதவீதிகளில் சாலைகளை புதுப்பிக்கவும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பக்தர்கள் சார்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மாநகராட்சி சார்பில் கோவிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளிலும் தார்ச்சாலைகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நெல்லை மண்டல உதவி கமிஷனர் பைஜூ தலைமையில் டவுன் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் உள்ள விளம்பர பலகைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன.

    மேலும் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அவர்கள் அகற்றாததால் இன்று மாநகராட்சி மூலம் எடுத்து செல்லப்பட்டது. சில கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

    ×