என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஒற்றை சாளர முறை அரசின் தொழில் கொள்கையை விரைவில் அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
    • அரசின் வேண்டு கோளுக்கு இணங்க மாசு இல்லா தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்பதுதான் தொழில் கூட்டமைப்பின் குறிக்கோள்.

    புதுச்சேரி:

    புதுவை தொழில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் எம்.எல்.ஏ. சிவசங்கரன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஒற்றை சாளர முறை அரசின் தொழில் கொள்கையை விரைவில் அறிவித்து செயல்படுத்த வேண்டும். தொழில் தொடங்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு 33 ஆண்டுகளுக்கு நில ஒதுக்கீடு வழங்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் தொழிற்சாலை தொடங்க

    ஒற்றை சாளர முறை அனுமதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    24 மணி நேரமும் தடை இன்றி மின்சாரம் வழங்க ஆவண செய்ய வேண்டும். தொழில் வளர்ச்சி விரோதமாக செயல்படும் தொழில் துறை இயக்குநரை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தொழில் கூட்டமைப்பின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் தொழில் கூட்டமைப்பின் தலைவர் பாபு கூறியதாவது:-

    அரசின் வேண்டு கோளுக்கு இணங்க மாசு இல்லா தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்பதுதான் தொழில் கூட்டமை ப்பின் குறிக்கோள். ஆனால் துறை இயக்குனர் ஒத்துழைப்பு இல்லை.

    தொழிற் பேட்டைகளில் தடையின்றி மின்சாரம் பெற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பிம்ஸ் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
    • செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, பேராசிரியர் மலர்விழி முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.

    பிம்ஸ் மருத்துவமனை கல்லூரி அரங்கில் நடந்த கருத்தரங்கில், மருத்துவக் கல்லூரி முதல்வர் அனில்பூர்த்தி தலைமை தாங்கினார். செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, பேராசிரியர் மலர்விழி முன்னிலை வகித்தனர்.

    டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர் இணை பேராசிரியர் கோபி சந்திரன், இருதய செயலிழப்பு மேலாண்மையில் செவிலியர் தலைமையில் நடத்தப்படும் கிளினிக்கின் முக்கிய பங்கு குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.

    நிகழ்ச்சியில், இருதய நிபுணர் மார்க், பொது மருத்துவத்துறை பேராசிரியர் நாயர் இக்பால், டாக்டர் வசந்தி மற்றும் செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேராசிரியர் வித்யா நன்றி கூறினார்.

    • வழக்கு விசாரணைக்காக புதுவை கோர்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் பிரகாஷ் அழைத்து வரப்பட்டார்.
    • தேவநாதனை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கொலை வழக்கு தொடர்பாக பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணைக்காக புதுவை கோர்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் பிரகாஷ் அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு மர்மபொருளை ஒரு வாலிபர் கொடுத்தார். இதைபார்த்த போலீசார் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், பொறையூரை சேர்ந்த தேவநாதன் (வயது19) என்பதும், விசாரணை கைதி பிரகாசுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. அதையடுத்து தேவநாதனை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • கவர்னர் உத்தரவின்படி, புதுவை மின்துறை பொது சேவை நிறுவனமாக தொடர்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழுவை அமைத்து போராட்டம் நடத்தினர். புதுவை மின்துறையை தனியார்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

    மின்துறை முன்பு போராட்டத்தை தடுக்கும் வகையில் மின்துறை பொது சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு மின்துறை முன்பு போராட்டம் நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த தடை உத்தரவு மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுவை கவர்னர் உத்தரவின்படி, புதுவை மின்துறை பொது சேவை நிறுவனமாக தொடர்கிறது. இந்த அறிவிப்பு 19.1.23 முதல் 18.7.2023 வரை அமலில் இருக்கும் என மின்துறை சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ளார். இதனால் புதுவை மின்துறை முன்பு போராட்டம் நடத்த 6 மாதத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • புதிய பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கி போக்குவரத்துக் கழகம் வளச்சியடைய வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா போக்குவரத்து ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில், புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள 3 மாத ஊதியம் மற்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட டி.ஏ.வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட எம்.ஏ.சி.பி. மற்றும் 7 -வது ஊதியக்குழுவை அமுல்படுத்த வேண்டும்.

    3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட போனசை உடனே வழங்க வேண்டும். புதிய பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கி போக்குவரத்துக் கழகம் வளச்சியடைய வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குனர் துறை செயலரிடம் கலந்தாலோ சித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது தொ.மு.ச, பா.ஜனதா மஸ்தூர், ஐ.என்.டி.யூ.சி., விடுதலை சிறுத்தைகள் கட்சி, அரசு ஊழியர்கள் சம்மேளனம், மத்திய கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்கம், பி.ஆர்.டி.சி. ஓட்டுனர்-நடத்துனர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஆரோ புட் நிறுவன வாசலில் அமர்ந்து நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே ஆரோ புட் நிறுவனத்தை முற்றுகையிட்டு தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே புளிச்சப்பள்ளம் பகுதியில் ஆரோ புட் நிறுவனம் உள்ளது.

    இந்த நிறுவனத்தில் 150 நிரந்தர ஊழியர்கள், 450 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் பல்வேறு கட்சியினுடைய தொழிற்சங்கங்கள் இயங்கி வருகிறது.

    தே.மு.தி.க. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகளை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக பி.எஃப். பணத்தை பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    தே.மு.தி.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த 12 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கடலூர் தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் நிறுவனம் அதனை ஏற்காமல் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் ஆரோ புட் நிறுவனம் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகி ஜெய்சங்கரை வேறு துறைக்கு மாற்றிய நிலையில் இதனை கண்டித்தும், தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ஆதரவாக நிர்வாகி வக்கீல் ராதா கிருஷ்ணன் தலைமையில், பூத்துறை அருள் உள்ளிட்ட பலர் ஆரோ புட் நிறுவன வாசலில் அமர்ந்து நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வானூர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆரோபுட் நிறுவன வாசலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அன்னை அறக்கட்டளையின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் அதன் நிறுவன தலைவர் எஸ்.சிவா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அன்னை அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
    • சொந்தமாக தொழில் செய்யும் உழைப்பாளர் 40-க்கும் மேற்பட்டோருக்கு தள்ளுவண்டி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அன்னை அறக்கட்டளையின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் அதன் நிறுவன தலைவர் எஸ்.சிவா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அன்னை அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

    பிறந்த நாளையொட்டி சிவா தனது தாய், தந்தையரை வணங்கினார். நகரை தூய்மை செய்யும் துப்புரவு பணியாளருக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார். மதியம் உப்பளம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை, காலணிகள் வழங்கினார்.

    இதை தொடர்ந்து மணிகூண்டில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி னார். ஏழை, எளிய குடும்பங்க ளுக்கு தேவையான மளிகை பொருட்களை சுமார் 3000 பேருக்கு வழங்கினார்.

    சொந்தமாக தொழில் செய்யும் உழைப்பாளர் 40-க்கும் மேற்பட்டோருக்கு தள்ளுவண்டி வழங்கினார். பிறந்த நாள் விழா கொண்டாடிய சிவாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், துணை சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், எம்.எல்,ஏ.க்கள் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், போலீஸ் உயர்அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தொழிலபதிர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு சமூக அமைப்புகளை சார்ந்த தலைவர்கள், இளைஞர்கள், மகளிர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை புதுவை அன்னை அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டிருந்து. மேலும் அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
    • விதவை பெண் தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படி கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை மாதத்தின் முதல்நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து அலுவலகம் வர வேண்டும்.

    மாதந்தோறும் 15-ந் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும். அதில் உயரதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில் இம்மாதம் 15-ந் தேதியான இன்று புதுவையில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கவர்னர் மாளிகையில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கல்மேடுபட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அஞ்சலை(67). கவர்னரிடம் மனு அளித்தார். அதில், தனது வீட்டையும், சுற்றியுள்ள நிலத்தையும் 2-வது மகள் அபகரித்துவிட்டதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    இதேபோல கோர்க்காடை சேர்ந்த விதவை பெண், தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதாகவும், கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டதால், அரசு பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும். தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படியும் கோரிக்கை வைத்தார்.

    இதேபோல் பெரியவர் ஒருவர் தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் மிரட்டுவதாக பென்டிரைவ்வில் ஆதாரத்துடன் புகார் செய்தார்.

    கவர்னர் மாளிகையில் சந்தித்த பலர் நிலமோசடி தொடர்பாகவே புகார் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கவர்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைத்தார்.

    புதுவை தலைமை செயலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

    • ஆண்டியார் பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்தனர்.
    • புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் 5 மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி ஆண்டியார் பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்தனர்.

    இதனை ஏற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் துரித நடவடிக்கை எடுத்து சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் ஆண்டியார் பாளையம் பகுதியில் ரூ.49.31 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

    இந்த புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் 5 மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர் டாக்டர் முரளி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடக்கோட்ட செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் ஜோதி மற்றும் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர்கள் மணிமொழி சாய் ஆனந்த், மினு, ஷர்மிளா ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ஊழியர்கள் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், சக்திபாலன், ஞானசேகர், முன்னாள் கவுன்சிலர் ராஜா, வாழுமுனி கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, செந்தில் குமார், ரமேஷ், சிவக்குமார், சகாயராஜ், நடராஜன், முத்துராமன், சிவா, செல்வம், பச்சையப்பன், மணி, சேதுபதி, பெருமாள், சடகோபன், சிவராமன், பாண்டியன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை ரெயில் நிலையத்திற்கு பிற மாநில முக்கிய தலைநகரங்களுடன் இணைப்பு வசதி ஏற்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • ஏனாமிற்கு ரெயில் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டில் வந்து நிற்கும் காக்கிநாடா ரெயிலை புதுவைக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையத்தில் வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது புதுவை ரெயில் நிலையத்திற்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், வளர்ச்சிப்பணிகள், புதுவை ரெயில் நிலையத்திற்கு பிற மாநில முக்கிய தலைநகரங்களுடன் இணைப்பு வசதி ஏற்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது.

    அதன் காரணமாக தற்போது புதுவையில் இருந்து மங்களூர், தாதர், டெல்லி, ஹவுரா, புவனேஸ்வர், யஷ்வந்த்பூர், கன்னியாகுமாரி ஆகிய ஊர்களுக்கு ரெயில் சேவை உள்ளது.

    இதனால் புதுவைக்கு பயணிகள் வருகை ஆண்டுதோறும் 4.2 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் தரம் உயர்த்தவும், மேலும் பல முக்கிய ஊர்களுக்கு புதுவையில் இருந்து ரெயில் வசதி ஏற் படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

    ஏனாமிற்கு ரெயில் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டில் வந்து நிற்கும் காக்கிநாடா ரெயிலை புதுவைக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். புதுவை ரெயில் நிலையத்தில் ெரயில்களை பராமரிக்க கூடுதல் லைன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. புதுவையில் ரூ.72 கோடியில் ரெயில் நிலையம் விரிவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இந்த பணியை திட்டமிட்ட காலத்தில் முடிக்கவேண்டும். சென்னையிலிருந்து புதுவை-கடலூர் ரெயில் பாதை குறித்தும் முடிவெடுக்கப்பட வேண்டியுள்ளது. வருகிற மார்ச் 6-ந் தேதி திருச்சியில் தெற்கு ரெயில்வே கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதுவைக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கருத்தரங்கில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
    • மாணவ-மாணவிகளுக்கு பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது.

    நாட்டு நலப்பணி மூலம் நடந்த கருத்தரங்கை பள்ளி துனை முதல்வர் லதா தொடங்கி வைத்தார்.வேதியல் ஆசிரியர் நற்றமிழ் வரவேற்புரை ஆற்றினார்.

    கருத்தரங்கில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

    கருத்தரங்கிற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர்கள் ராஜலிங்கம்,சங்கீதா ஆகியோர் செய்து இருந்தனர்.கருத்தரங்கில் கலந்து கொண்டு மேடைஏறி கருத்துக்களை பதிவு செய்த மாணவ-மாணவிகளுக்கு பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை அருள்மொழி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.தமிழ் ஆசிரியர் திலகவதி நன்றி கூறினார்.

    • புதுவை இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
    • இது தொடர்பான ஆதாரத்துடன் விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனை யாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் சட்டவிரோத பேனர்களை அகற்ற வலியுறுத்தி சிந்தனை யாளர் பேரவை, புதுவை இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    ஆனால் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் முன்பே வழுதாவூர் சாலையில் தடைவேலிகளை அமைத்து போராட்ட காரர்களை தடுத்து நிறுத்தி பலரை கையையும் தோளையும் பிடித்து இழுத்து தள்ளி போலீஸ் வாகனத்தில் ஏற்றியது ஜனநாயகத்துக்கு எதிரான அராஜகமாகும். புதுவை காவல்துறை நடத்திய இத்தகைய அத்துமீறல்களை வன்மை யாக கண்டிக்கிறோம்.

    இது தொடர்பான ஆதாரத்துடன் விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×