என் மலர்
புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.
அறுவை சிகிச்சை கருத்தரங்கம்
- பிம்ஸ் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
- செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, பேராசிரியர் மலர்விழி முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
பிம்ஸ் மருத்துவமனை கல்லூரி அரங்கில் நடந்த கருத்தரங்கில், மருத்துவக் கல்லூரி முதல்வர் அனில்பூர்த்தி தலைமை தாங்கினார். செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, பேராசிரியர் மலர்விழி முன்னிலை வகித்தனர்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர் இணை பேராசிரியர் கோபி சந்திரன், இருதய செயலிழப்பு மேலாண்மையில் செவிலியர் தலைமையில் நடத்தப்படும் கிளினிக்கின் முக்கிய பங்கு குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில், இருதய நிபுணர் மார்க், பொது மருத்துவத்துறை பேராசிரியர் நாயர் இக்பால், டாக்டர் வசந்தி மற்றும் செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் வித்யா நன்றி கூறினார்.






