என் மலர்
புதுச்சேரி

மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.
மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்
- கருத்தரங்கில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
- மாணவ-மாணவிகளுக்கு பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் புத்தகம் பரிசாக வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது.
நாட்டு நலப்பணி மூலம் நடந்த கருத்தரங்கை பள்ளி துனை முதல்வர் லதா தொடங்கி வைத்தார்.வேதியல் ஆசிரியர் நற்றமிழ் வரவேற்புரை ஆற்றினார்.
கருத்தரங்கில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
கருத்தரங்கிற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர்கள் ராஜலிங்கம்,சங்கீதா ஆகியோர் செய்து இருந்தனர்.கருத்தரங்கில் கலந்து கொண்டு மேடைஏறி கருத்துக்களை பதிவு செய்த மாணவ-மாணவிகளுக்கு பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் புத்தகம் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை அருள்மொழி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.தமிழ் ஆசிரியர் திலகவதி நன்றி கூறினார்.






