என் மலர்
புதுச்சேரி
- மீனவர் நலத்துறை சார்பில், மீனவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- போட்டியில் வென்ற மீனவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா சின்ன வீராம்பட்டினம் சமூதாய நலக்கூட்டத்தில் நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி போட்டியில் வென்ற மீனவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மீன்வளத்துறை அதிகாரிகள் சின்ன வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கராத்தே சங்கம் சார்பில் உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
- ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து அறநெறியோடு பயணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில செகோ-காய் கராத்தே சங்கம் சார்பில் உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி முகாம் நடந்தது.
பயிற்சி முகாமை , அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
அப்போது உடல், மன ஆரோக்கியத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து அறநெறியோடு பயணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு இந்தியன் செகோ-காய் தலைவர் பாரத்சர்மா தமிழ்நாடு கராத்தே சங்க செயலாளர் அல்தாப் ஆலம் தென்னிந்திய கராத்தே சங்க தலைவர் அன்சிஜேக்கப் முன்னிலை வகித்தனர்.
இதில் புதுவையில் உள்ள தலைமை கராத்தே பயிற்சி யாளர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை செகோ-காய் தலைவர் பழனிவேல் செய்திருந்தார்.
- பிரான்சில் வேலைக்கு அனுப்பி வைப்பதாக சண்முகத்திடம் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தம்பதியினர் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி பிரெஞ்சு தம்பதியினர் மீது பணம் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுவை லாஸ்பேட்டை நாவற்குளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் சண்முகம்(வயது44). கட்டிட காண்டிராக்டர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய ஆசைப்பட்டார். இதனை தன்னுடன் பணிபுரியும் காரைக்காலை சேர்ந்த வில்சன், சந்தோஷ்குமார் ஆகியோரிடம் சண்முகம் தெரிவித்தார்.
இதையடுத்து காரைக்காலை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ராஜகுமரன் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோர் பலரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக சண்முகத்திடம் தெரிவித்தனர்.
மேலும் ராஜகுமரன் மற்றும் அவரது மனைவி அமுதாவை சண்முகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். அப்போது பிரான்சில் வேலைக்கு அனுப்பி வைப்பதாக சண்முகத்திடம் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தம்பதியினர் தெரிவித்தனர்.
அதற்காக ரூ.16 லட்சம் தரவேண்டும் என்று அவர்கள் சண்முகத்திடம் பேரம் பேசினர். அதன்படி சண்முகம் அவர்களிடம் ரூ.16 லட்சம் கொடுத்தார். அதன்பிறகு ராஜகுமரனும் அவரது மனைவி அமுதாவும் பிரான்சுக்கு சென்று விட்டனர். ஆனால் சண்முகத்துக்கு பிரான்சில் வேலைக்கு சேர்க்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் சண்முகம் அவர்களை போனில் தொடர்பு கொண்ட போது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த சண்முகம் பிரான்சில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்தார்.
அப்போது பணம் பெற்ற தம்பதியினர் இதுபோன்று பலரை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சண்முகம் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பிரெஞ்சு தம்பதியினர் மீது பணம் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- உற்சவர் கெங்கைவராக நதீஸ்வரருக்கு காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வாக 8-ம் நாளான சுவாமிக்கு திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 9-ம் நாளான தேரோட்டம் நடைபெற்றது.
உற்சவர் கெங்கைவராக நதீஸ்வரருக்கு காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளினார். தேரை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வடம் இழுந்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.ஊர் மக்கள் ஒன்றுகூடி தேரைவடம் பிடித்து இழுந்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் 12 மணியளவில் மீண்டும் கோவிலை அடைந்தது.
சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.
இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் பங்கேற்கின்றன.
- மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தொகுதி வாரியாக பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
- காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயுவிற்கு மானியம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயுவிற்கு மானியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது சமையல் எரிவாயு விலை ரூ, 1150 என உயர்த்தப்பட்டுள்ளது, மானியமும் இல்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தொகுதி வாரியாக பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை தொகுதியில் பாதயாத்தரை நடைபெற்றது. வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகாவீர் நகரில் தொடங்கிய பாதயாத்திரையை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் 40 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் ரூ,65 ஆக இருந்த பெட்ரோல் விலை தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயுவிற்கு மானியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது சமையல் எரிவாயு விலை ரூ, 1150 என உயர்த்தப்பட்டுள்ளது, மானியமும் இல்லை.
உலக அரங்கில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அதானிக்காக மத்திய பா.ஜனதா ஆட்சி செயல்படுகிறது. அதானிக்கு 13 துறைமுகங்கள், 6 விமான நிலையங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளது. சோலார் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதும் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுவையில் முதல் -அமைச்சர் ரங்கசாமி தலைமையில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதுவை மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் கொடுப்போம் என பா.ஜனதா வாக்குறுதி கொடுத்தது. மாநில அந்தஸ்தை கொடுப்போம், சுற்றுலாவை வளர்ப்போம், வியாபாரத்தை பெருக்கு வோம் என்றார்கள். ஆனால் ஒன்று கூட நடக்கவில்லை. ஆனால், பா.ஜனதா- என்ஆர். காங்கிரஸ் ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் மட்டும் நடக்கிறது.
கலால்துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை என அனைத்து துறையிலும் ஊழல் நடைபெறுகிறது, புதுவையில் வளர்ச்சி இல்லை. மக்கள் நலத்திட்டங் கள் முடக்கப்பட்டுள்ளன.
பா.ஜனதா எம்.எல்.ஏ. புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமைப்போம் என கூறுகிறார். முன்னுக்கு பின் முரணான கூட்டணியாக உள்ளது. புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுபானக்கடையில் தான் விழ வேண்டும்.
புதுவையில் மதுபான கடைகளை திறந்து புதுவை கலாச்சாரத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி சீரழித்துவிட்டார். கஞ்சா, போதை பொருள் அதிகரித்து விட்டது. எனவே, மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
பாதயாத்திரையில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், பொதுசெயலாளர் கருணாநிதி சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் மகாவீர்நகர் போலீஸ் நிலையம், உழவர்சந்தை, குளுனி பள்ளி வழியாக ஜீவானந்தபுரத்தில் வந்து நிறைவடைந்தது.
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- வாழ்க்கையில் ஒரு குறிக் கோளை எடுத்துக்கொண்டு அதை அடைவதற்கான தொழில்நுட்ப த்திறனை வளர்த்துக்கொண்டு நாமும் முன்னேறி அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் முன்னேற்ற வேண்டும்
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாரன், செ யலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் தேசிய அங்கீகார வாரிய தலைவர் கே.கே.அகர்வால் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவின்போது, இளங்கலை தொழில் நுட்ப பிரிவில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் 190 மாணவர்கள், மின்னணு மற்றும் தொைலத்தொடர்பு பொறியியல் துறை 290, கணினி பொறியியலில் 227, தகவல் தொழில் நுட்பத்தில் 181, கருவியல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறையில் 49 , எந்திரபொ றியியலில் 237, கட்டிடபொறியியலில் 57 என 2017-ம் கல்வியாண்டை சேர்ந்த 508 பேர், 2018-ம் கல்வியாண்டை சேர்ந்த 519 பேர் என மொத்தம் 1,027 பேர் பட்டங்களை பெற்றனர்.
நர்மதா, சுஷ்மிதா, கீதாதேவி, அபிஷேக் பானர்ஜி, அபிராமி, ஜானகி, கண்ணன், புவனேஷ்வரன் ஆகியோர் தங்கப்பதக்கங்களை பெற்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேல ாக பணியாற்றி வரும் 61 பேராசிரியர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் விருதுகளை வழங்கி கவுரவித்தது.
விழாவில் மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் பேசுகையில், 'வாழ்க்கையில் ஒரு குறிக் கோளை எடுத்துக்கொண்டு அதை அடைவதற்கான தொழில்நுட்ப த்திறனை வளர்த்துக்கொண்டு நாமும் முன்னேறி அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் முன்னேற்ற வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல் முருகன், முத்துலட்சுமி, முகமது யாசின், சிதம்பரம், சந்திரசேகர், வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார்.
- பாரதிதாசன் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா , தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு தொழிலாளர் துறை சார்பில் பாரதிதா சன் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 30 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த முகாமில் 1,395 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 382 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா , தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மேரி ஜோஸ்பின் சித்ரா, தொழிலாளர் துறை துணை ஆணையர் ராகினி உள்பட பலர்கலந்து கொண்டனர்.
- அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் புதுவைப்பதியில் நடந்தது.
- புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் எடுத்து வரப்பட்டது.
புதுச்சேரி:
அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தின விழா புதுவை மாநிலத்தில் முதல்முறையாக பாகூரை அடுத்த அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் புதுவைப்பதியில் நடந்தது.
முன்னதாக காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்தல், அதைத்தொடர்ந்து புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் எடுத்து வரப்பட்டது. 8 மணிக்கு உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பகல் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்தல், மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, 5.30 மணிக்கு இனிமம் (பிரசாதம்) வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை புதுவை, கடலூர் மற்றும் திண் டிவனம் பகுதி அய்யாவழி அன்புகொடி மக்கள் செய்து இருந்தனர்.
- தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே தொழிலாளியை தாக்கியதை தட்டிக்கேட்ட தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே மேல் சாத்தமங்கலம் ஏம்பலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாரதி தாசன்(வயது37). இவர் தனது வீட்டின் அருகே பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 7 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் இருந்து அம்ரித்குமார் என்பவர் வேலை செய்து விட்டு தான் தங்கியுள்ள இடத்துக்கு செல்ல முயன்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், கருணா, சேது மற்றும் 4 பேர் அம்ரித்குமாரை வழிமறித்து அவரை சரமாரியாக கையாளும், உருட்டு கட்டையாளும் தாக்கினர்.
மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனை கண்ட பாரதிதாசன் அவர்களிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அந்த கும்பல் பாரதிதாசனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.
இதுகுறித்து பாரதிதாசன் மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சாலைகளை சீரமைக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது.
- ஊழியர்களிடம் சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து தரும் படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 1-வது தெரு மற்றும் அசோகன் வீதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தன.
இந்த சாலைகளை சீரமைக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி மூலம் சைடு வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்ட நிலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வை யிட்டார். மேலும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து தரும் படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முக சுந்தரம், தி.மு.க. கிளை செயலாளர்கள் செல்வம் காளப்பன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.
- புதுவையின் அருகே பாகூரில் வட்டார அளவிலான தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது.
- அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி பாராட்டி பேசினார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் நோக்கவுரை ஆற்றினார்.
புதுச்சேரி:
பாகூரில் வட்டார அளவிலான தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது.
புதுவை நலப்பணிச் சங்கத்தின் ஆலோசகர் முத்துஅய்யாசாமி வரவேற்றார். புதுவை நலப்பணிச் சங்கத்தின் தலைவரும் பாகூர் தண்ணீர்த் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
நல்லாட்சிக்கான கூட்டமைப்பு பொறுப்பாளர் விக்டர் ராஜ் அறிமுக உரையாற்றினார். தண்ணீர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் பாவாடை கருத்துரை வழங்கினார்.
புதுவை அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி பாராட்டி பேசினார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் நோக்கவுரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சிலம்பப் பயிற்சியாளர் செல்வம், முதலுதவி பயிற்சியாளர் செஞ்சிலுவைச் சங்கத்தின் அருள், ஏரி சங்கத்தின் பொறுப்பாளர் அர்ச்சுனன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 28-ம் ஆண்டுவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கைவினைமற்றும் மாறுவேட ப்போட்டி நடைபெற்றது.
- போட்டியில் பங்கேற்ற குழந்தைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ஆர்ட் லேண்ட் குழந்தைகள் கலை மையத்தின் 28-ம் ஆண்டுவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கைவினைமற்றும் மாறுவேட ப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் மழலையர் முதல் 10- வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற குழந்தைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இப்போட்டியின் நடுவர்களாக அலமேலு, தமிழ்செல்வி ஆகியோர் செயல் பட்டனர். நிகழ்ச்சியை ஓவியர் சரவணகுமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.






