என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பணி நிரந்தரம் செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சாகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
    • கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 700 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மருத்துவமனை மேலே ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சாகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாலை 4 மணிக்கு என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கவர்னர் தமிழிசையை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தனர்.

    கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க ஊழியர்கள் திலாசுபேட்டையில் உள்ள அவரின் ஆன்மீக குரு அப்பா பைத்தியம்சாமி கோவிலுக்கு சென்றனர்.அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்த பிறகு ஊழியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி பூஜையை முடித்துக் கொண்டு ஒரு மணி நேரமாக கோவில் வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது தலைமை செயலகத்தில் இருக்கும் மருத்துவமனை இயக்குனரை தொடர்பு கொண்டு பணி ஆணை தயாராகிறதா என கேட்டறிந்தார்.

    அதற்கு உடனடியாக தயார் செய்யப்பட்டு வருகிறது. சற்று நேரத்தில் கோவிலுக்கு வந்து விடுவோம் என்று கூறியதால் முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைதியாக கோவில் வாசலில் அமர்ந்து இருந்தார்.

    அதன் பிறகு தலைமை செயலகத்திலிருந்து பணி ஆணை கொண்டுவரப்பட்டு முதல்-அமைச்சரிடம் கொடுக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் கோவிலில் காத்திருந்து 700 ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி நள்ளிரவு 11.15 மணியளவில் வழங்கினார். இதில் உற்சாகமடைந்த ஊழியர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

    அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள், ஏ.கே.டி.ஆறுமுகம் கே.எஸ்.பி.ரமேஷ், , பாஸ்கர், லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மாணவிகளுக்கு மெகந்தி வரையும் போட்டி சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர்.

    புதுச்சேரி:

    அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு மெகந்தி வரையும் போட்டி சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநில தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் உதயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    மாலதி செல்வம் போட்டியின் நடுவராக இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம், புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர்.

    • அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள மேல்நிலை எழுத்தர் பதவிகள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பயிற்சி பெறுவதற்கான அனுமதி சீட்டை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள மேல்நிலை எழுத்தர் பதவிகள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

    இந்த போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு புதுவை அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரை நிலை கழகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் மகாத்மா காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் மேல் நிலைப்பள்ளி, மாதா கோவில் வீதியில் உள்ள இமாகுலேட் பள்ளியில் நடக்கிறது.

    இதன் தொடக்க விழா நேற்று மாலை பெத்திசெமினார் பள்ளியில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பயிற்சி பெறுவதற்கான அனுமதி சீட்டை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை செயலாளர் கேசவன், இயக்குனர் அசோகன், மேம்பாட்டு வரை நிலைக்கழக மேலாண் இயக்குனர் தயாளன், பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த இலவச பயிற்சி முகாம் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 200 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

    • உப்பளம் தொகுதியில் கொசுமருந்து தௌிக்கும் பணியை தி.மு.க.தொடர்ந்து செய்து வருகிறது
    • பொதுமக்கள் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சலால் மிகவும் அவதிவுற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் கொசுமருந்து தௌிக்கும் பணியை தி.மு.க.தொடர்ந்து செய்து வருகிறது.

    தற்போது கொசுவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சலால் மிகவும் அவதிவுற்று வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியை தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி தனது சொந்த செலவில் உப்பளம் தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியினை தொடர்ந்து செய்து வருகின்றார் .

    பெரிய பள்ளி, ராசு உடையார் தோட்டம், பிரான்சுவாதோப்பு, ,ஆகிய இடங்களில் கென்னடி எம்.எல்.ஏ. தனது கட்சி தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று கொசு மருந்து தெளிக்கும் பணியினை தீவிரமாக மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி ,கிளை செயலாளர்கள் விநாயகம், காலப்பன், செல்வம், ராகேஷ், லாரன்ஸ், மற்றும் ஈசாக்கு, தி.மு.க. நிவர்வாகிகள் மோரிஸ், ரகுமான், சிரஞ்சீவி, மரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
    • இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.

    புதுச்சேரி:

    காரைக்கால்- இலங்கை யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க புதுவை அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டே இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.

    யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவித்துள்ளார். இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.

    இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காரைக்கால் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    நாகூர் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பால் காரைக்கால் கடலில் பாதிப்பா? என அதிகாரிகள் ஆய்வு செய்வதாகவும் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார். 

    • ஆயிகுளத்தை உழவர்கரை நகராட்சி சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் செலவில் சீரமைக்கப்படுகிறது.
    • குப்பைகளை குளத்தில் போடாவண்ணம் குளத்தை சுற்றி 2 மீட்டர் உயரத்துக்கு கம்பி வேலி அமைப்பது என பணிகள் நடைபெறவுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வரலாற்று சிறப்புமிக்க ஆயிகுளம் ரூ.1 கோடி செலவில் சீரமைப்பு பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    புதுவையின் வரலாற்று சின்னமாக ஆயிகுளம் விளங்கி வருகிறது. இந்திராநகர் தொகுதிக்குட்பட்ட முத்திரையர்பாளையத்தில் உள்ள இந்த ஆயிகுளத்தை உழவர்கரை நகராட்சி சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் செலவில் சீரமைக்கப்படுகிறது.

    இந்த குளத்தை சுற்றி கரைகளை மேம்படுத்துவது, குளத்தையொட்டி பாதுகாப்பு கட்டிடம் மற்றும் கழிவறை வசதி மேம்படுத்துதல், குளத்தின் அருகே உள்ள வீடுகளின் கழிவு நீர் குளத்தில் கலப்பதை தடுக்கும் வகையில் வீடுகளின் கழிவுநீர் பைப்புகளில் ஒருங்கிணைத்து அருகில் உள்ள வாய்க்காலில் செல்ல வசதி செய்வது, குளத்தை சுற்றியுள்ள வீடுகளின் குப்பைகளை குளத்தில் போடாவண்ணம் குளத்தை சுற்றி 2 மீட்டர் உயரத்துக்கு கம்பி வேலி அமைப்பது என பணிகள் நடைபெறவுள்ளது.

    இந்த ஆயி குளத்தை சீரமைக்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், செற்பொறியாளர் மலை வாசன், உதவி பொறியாளர் கலிவரதன், இளநிலை பொறியாளர் முத்தையன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி லாரி டிரைவர் பலியானார்.
    • அவரை அலை இழுத்து சென்றதால் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற டிரைவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி லாரி டிரைவர் பலியானார்.

    மகாராஷ்டிரா மாநிலம் தகாரி பகுதியை சேர்நதவர் பாலாஜி பகோரா(வயது47). இவர் கண்டெய்னர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். மகாராஷ்டிராவில் இருந்து பொருட்களை கண்டெய்னர் லாரியல் ஏற்றி கொண்டு நேற்று காலை திருபுவனையில உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு வந்தார்.

    அப்போது பொருட்கள் இறக்க காலதாமதம் ஏற்பட்டதால் அங்கிருந்த மற்ற 3 டிரைவர்களுடன் பாலாஜி பகோரா பொழுது போக்கிற்காக புதுவை கடற்கரைக்கு வந்தனர்.

    காந்தி சிலை பின்புறம் 4 பேரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் பாலாஜி பகோரா சிக்கிக்கொண்டார். அவரை அலை இழுத்து சென்றதால் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற டிரைவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.

    உடனே அங்கிருந்தவர்கள் கடலில் இறங்கி பாலாஜி பகோராவை மீட்டனர். பின்னர் அவரை மற்ற டிரைவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாலாஜி பகோரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலில் மூழ்கி பலியான பாலாஜி பகோராவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

    • படகு குழாமில் வார விடுமுறை நாட்களில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
    • வெயிலில் நீண்டநேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாமில் வார விடுமுறை நாட்களில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விடுமுறை நாட்களான சுற்றுலா பயணிகள் அதிகளவில் படகு குழாமில் குவிந்திருந்தனர்.

    படகில் ஏறி பேரடைஸ் தீவுக்கு சென்று கடலில் குளித்து விளையாடி மகிழ்ந்தனர். இதனால் படகிற்காக நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

    அவர்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2 நாட்கள் படகு குழாமில் ரூ.9 லட்சம் வருவாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
    • எல்லா திட்டங்களையும் இத்தொகு தியில் கொண்டுவர வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருக்கனூரில் நடந்தது. மண்டல பொறுப்பாளர் கண்ணன், தலைவர் வேதாச்சலம் தலைமை வகித்தனர். தொகுதி பொதுச்செயலாளர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: -

    தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். மண்ணாடிப்பட்டு பின்தங்கிய தொகுதியாக இருந்தது. இதை மாற்ற ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

    சாலை, குடிநீர், மக்கள் நலத்திட்டங்களை உடனுக்குடன் வழங்கி வருகிறோம். எல்லா திட்டங்களையும் இத்தொகு தியில் கொண்டுவர வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

    இலவசமனைப்பட்டா விரைவில் வழங்கப்படும். எந்தெந்த பகுதியில் மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளதோ அப்பகுதியில் தகுதியான வர்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் அனந்தன், பொதுச்செயலாளர் திருவேங்கடம், நிர்வாகிகள் வீரராகவன், தமிழ்மணி, செல்வகுமார், சையது, சீனுவாசமூர்த்தி, கலியபெருமாள், ராஜா, சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர். மகளிர் அணி நிர்வாகி அனுசுயா நன்றி கூறினார்.

    • புதுவையை அடுத்த கீழ்ப்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்களுக்கு கோல போட்டி, அறிவியல் வினாடி வினா, அறிவியல் பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த கீழ்ப்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். ஆசிரியர் சபரிநாதன் "பொம்மைகள் வழியாக அறிவியலைக் கற்றல்" என்ற தலைப்பில் செய்து காட்டல் நிகழ்ச்சியை நடத்தி சிறப்புரையாற்றினார்.

    அறிவியல் கோல போட்டி, அறிவியல் வினாடி வினா, அறிவியல் பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இதன் ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்களான வரலட்சுமி மற்றும் வில்லியம் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்திருந்தனர். ஆசிரி யர்கள் துரைசாமி, கோமளா, சாமுண்டீஸ்வரி, வீரம்மா, மூர்த்தி, பெருமாள், ராஜலட்சுமி, ஜெயந்தி, ஜெயபாரதி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 4.5 லட்சம் ரொக்கப்பரிசு கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடந்தது.

    2-வது நாளாக 2019-ம் ஆண்டு இளநிலை மற்றும் 2017, 2018, 2019-ம் ஆண்டு முதுநிலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்று கல்லூரியின் சிறப்புகள் குறித்து பேசினார்.

    விழாவில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். பட்டமளிப்பு விழாவின் போது, இளநிலை தொழில்நுட்ப பிரிவில் 758 மாணவ-மாணவிகளுக்கும், முதுநிலை பிரிவில் 630 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டன.

    மேலும் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு 9 பவுன் தங்க நாணயம் மற்றும் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 4.5 லட்சம் ரொக்கப்பரிசு கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.

    விழாவில் மணக்குள விநாயகர் கல்லூரியின் இயக்குனர்ராஜகோவிந்தன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சித்துறை டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேளாண் மற்றும் தோட்டக் கலை துறை டீன் முகமது யாசின், பிசியோ தெரபி டீன் சிதம்பரம், சட்டக்கல்வித் துறை டீன் சந்திரசேகர் மற்றும் துறை தலை வர்கள் கலந்து கொண்டனர்.

    பட்டமளிப்பு விழாவினை தொடர்ந்து, மணக்குள விநாயகர் கல்லூரி மற்றும் ஏஐசிடிஇ இணைந்து அமைத்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய யோசனை ஆய்வகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

    முடிவில் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார்.

    • பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
    • புதுவையில் கோரிக்கை பேரணி நடத்தி சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ம.க,மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-

    பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தினார்.

    அதன் விளைவாக புதுவை மாநிலத்தில் வன்னியர், மீனவ சாதிகளை உள்ளடக்கிய 11 சமுதாயங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தினர் (எம்.பி.சி.) என பிரிவு உருவாக்கி கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுக் கொடுத்தார்.

    ஆனால் சமீப காலமாக வெளியான அரசு பணிகளில் இந்த எம்.பி.சி. இட ஒதுக்கீடு விதிமுறை பின்பற்ற படவில்லை.

    இதனை கண்டித்து பா.ம.க. அறிக்கைகள் வாயிலாகவும், முதல்- அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

    கட்சியின் மாநில பொதுக்குழுவிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, புதுவையில் கோரிக்கை பேரணி நடத்தி சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

    அப்போது முதல்-அமைச்சரும், உள்துறை அமைச்சரும் பா.ம.க.வினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய கோரிக்கையை விரைவில் வழங்குவதாக உறுதி அளித்தார்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிர்வாகிகள் மீது பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டது. ஆனால் இத்தனை மாதங்கள் ஆகியும் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே வருகின்ற சட்ட மன்ற கூட்ட தொடரில் இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×