என் மலர்
புதுச்சேரி

பரிக்கல்பட்டு அரசு பள்ளியில் அறிவியல் தின விழா நடைபெற்ற காட்சி.
அரசு பள்ளியில் அறிவியல் தின விழா
- புதுவையை அடுத்த கீழ்ப்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
- மாணவர்களுக்கு கோல போட்டி, அறிவியல் வினாடி வினா, அறிவியல் பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த கீழ்ப்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். ஆசிரியர் சபரிநாதன் "பொம்மைகள் வழியாக அறிவியலைக் கற்றல்" என்ற தலைப்பில் செய்து காட்டல் நிகழ்ச்சியை நடத்தி சிறப்புரையாற்றினார்.
அறிவியல் கோல போட்டி, அறிவியல் வினாடி வினா, அறிவியல் பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதன் ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்களான வரலட்சுமி மற்றும் வில்லியம் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்திருந்தனர். ஆசிரி யர்கள் துரைசாமி, கோமளா, சாமுண்டீஸ்வரி, வீரம்மா, மூர்த்தி, பெருமாள், ராஜலட்சுமி, ஜெயந்தி, ஜெயபாரதி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






