search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சட்டசபை கூட்ட தொடரில் வெளியிட வேண்டும்-பா.ம.க.வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    சட்டசபை கூட்ட தொடரில் வெளியிட வேண்டும்-பா.ம.க.வலியுறுத்தல்

    • பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
    • புதுவையில் கோரிக்கை பேரணி நடத்தி சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ம.க,மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-

    பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தினார்.

    அதன் விளைவாக புதுவை மாநிலத்தில் வன்னியர், மீனவ சாதிகளை உள்ளடக்கிய 11 சமுதாயங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தினர் (எம்.பி.சி.) என பிரிவு உருவாக்கி கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுக் கொடுத்தார்.

    ஆனால் சமீப காலமாக வெளியான அரசு பணிகளில் இந்த எம்.பி.சி. இட ஒதுக்கீடு விதிமுறை பின்பற்ற படவில்லை.

    இதனை கண்டித்து பா.ம.க. அறிக்கைகள் வாயிலாகவும், முதல்- அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

    கட்சியின் மாநில பொதுக்குழுவிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, புதுவையில் கோரிக்கை பேரணி நடத்தி சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

    அப்போது முதல்-அமைச்சரும், உள்துறை அமைச்சரும் பா.ம.க.வினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய கோரிக்கையை விரைவில் வழங்குவதாக உறுதி அளித்தார்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிர்வாகிகள் மீது பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டது. ஆனால் இத்தனை மாதங்கள் ஆகியும் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே வருகின்ற சட்ட மன்ற கூட்ட தொடரில் இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×