என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆயிகுளம் ரூ.1 கோடி செலவில் சீரமைப்பு-முதல்-அமைச்சர் ரங்கசாமி பணியை தொடங்கி வைத்தார்
    X

    ஆயிகுளத்தை சீரமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் உள்ளார்.

    ஆயிகுளம் ரூ.1 கோடி செலவில் சீரமைப்பு-முதல்-அமைச்சர் ரங்கசாமி பணியை தொடங்கி வைத்தார்

    • ஆயிகுளத்தை உழவர்கரை நகராட்சி சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் செலவில் சீரமைக்கப்படுகிறது.
    • குப்பைகளை குளத்தில் போடாவண்ணம் குளத்தை சுற்றி 2 மீட்டர் உயரத்துக்கு கம்பி வேலி அமைப்பது என பணிகள் நடைபெறவுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வரலாற்று சிறப்புமிக்க ஆயிகுளம் ரூ.1 கோடி செலவில் சீரமைப்பு பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    புதுவையின் வரலாற்று சின்னமாக ஆயிகுளம் விளங்கி வருகிறது. இந்திராநகர் தொகுதிக்குட்பட்ட முத்திரையர்பாளையத்தில் உள்ள இந்த ஆயிகுளத்தை உழவர்கரை நகராட்சி சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் செலவில் சீரமைக்கப்படுகிறது.

    இந்த குளத்தை சுற்றி கரைகளை மேம்படுத்துவது, குளத்தையொட்டி பாதுகாப்பு கட்டிடம் மற்றும் கழிவறை வசதி மேம்படுத்துதல், குளத்தின் அருகே உள்ள வீடுகளின் கழிவு நீர் குளத்தில் கலப்பதை தடுக்கும் வகையில் வீடுகளின் கழிவுநீர் பைப்புகளில் ஒருங்கிணைத்து அருகில் உள்ள வாய்க்காலில் செல்ல வசதி செய்வது, குளத்தை சுற்றியுள்ள வீடுகளின் குப்பைகளை குளத்தில் போடாவண்ணம் குளத்தை சுற்றி 2 மீட்டர் உயரத்துக்கு கம்பி வேலி அமைப்பது என பணிகள் நடைபெறவுள்ளது.

    இந்த ஆயி குளத்தை சீரமைக்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், செற்பொறியாளர் மலை வாசன், உதவி பொறியாளர் கலிவரதன், இளநிலை பொறியாளர் முத்தையன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×