என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில்மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு
    X

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அங்கீகார வாரிய தலைவர் கே.கே.அகர்வால் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய போது எடுத்தபடம். 

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில்மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • வாழ்க்கையில் ஒரு குறிக் கோளை எடுத்துக்கொண்டு அதை அடைவதற்கான தொழில்நுட்ப த்திறனை வளர்த்துக்கொண்டு நாமும் முன்னேறி அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் முன்னேற்ற வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாரன், செ யலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்றுப் பேசினார்.

    விழாவில் தேசிய அங்கீகார வாரிய தலைவர் கே.கே.அகர்வால் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

    பட்டமளிப்பு விழாவின்போது, இளங்கலை தொழில் நுட்ப பிரிவில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் 190 மாணவர்கள், மின்னணு மற்றும் தொைலத்தொடர்பு பொறியியல் துறை 290, கணினி பொறியியலில் 227, தகவல் தொழில் நுட்பத்தில் 181, கருவியல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறையில் 49 , எந்திரபொ றியியலில் 237, கட்டிடபொறியியலில் 57 என 2017-ம் கல்வியாண்டை சேர்ந்த 508 பேர், 2018-ம் கல்வியாண்டை சேர்ந்த 519 பேர் என மொத்தம் 1,027 பேர் பட்டங்களை பெற்றனர்.

    நர்மதா, சுஷ்மிதா, கீதாதேவி, அபிஷேக் பானர்ஜி, அபிராமி, ஜானகி, கண்ணன், புவனேஷ்வரன் ஆகியோர் தங்கப்பதக்கங்களை பெற்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேல ாக பணியாற்றி வரும் 61 பேராசிரியர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் விருதுகளை வழங்கி கவுரவித்தது.

    விழாவில் மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் பேசுகையில், 'வாழ்க்கையில் ஒரு குறிக் கோளை எடுத்துக்கொண்டு அதை அடைவதற்கான தொழில்நுட்ப த்திறனை வளர்த்துக்கொண்டு நாமும் முன்னேறி அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் முன்னேற்ற வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல் முருகன், முத்துலட்சுமி, முகமது யாசின், சிதம்பரம், சந்திரசேகர், வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார்.

    Next Story
    ×