என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கராத்தே பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாமை , அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    கராத்தே பயிற்சி முகாம்

    • கராத்தே சங்கம் சார்பில் உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து அறநெறியோடு பயணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில செகோ-காய் கராத்தே சங்கம் சார்பில் உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி முகாம் நடந்தது.

    பயிற்சி முகாமை , அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    அப்போது உடல், மன ஆரோக்கியத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து அறநெறியோடு பயணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு இந்தியன் செகோ-காய் தலைவர் பாரத்சர்மா தமிழ்நாடு கராத்தே சங்க செயலாளர் அல்தாப் ஆலம் தென்னிந்திய கராத்தே சங்க தலைவர் அன்சிஜேக்கப் முன்னிலை வகித்தனர்.

    இதில் புதுவையில் உள்ள தலைமை கராத்தே பயிற்சி யாளர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை செகோ-காய் தலைவர் பழனிவேல் செய்திருந்தார்.

    Next Story
    ×