என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்களை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், வெடி பொருள் கட்டுப்பாட்டு துறையும் தனித்தனியாக சோதனை நடத்தி சில பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைத்தன.
இந்த நிலையில் பட்டாசு ஆலைகளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆலைகளை காலவரையின்றி மூட உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று 90 சதவீத பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் இன்று அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்படும் என டான்பாமா தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பட்டாசு ஆலைகளை மூடியது தொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், மாவட்ட நிர்வாகமும் எங்களிடம் பேசினர். தொழிலாளர்களின் நலன் கருதி ஆலைகளை திறக்க வேண்டும். பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது என கேட்டுக்கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு தொடரும், விதிமீறல்கள் இருந்தால் சுட்டிக்காட்டப்படும். அதனை செய்ய அறிவுரை வழங்கப்படும். அதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகும் விதிமீறல்கள் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று இன்று முதல் பட்டாசு ஆலைகளை திறந்துள்ளோம். நாங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதில்லை. எங்கள் கவனத்தையும் மீறி ஏதாவது நடந்தால் அதனை சுட்டிக்காட்டினால் சரி செய்ய தயாராக இருக்கிறோம். வெடி விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வெடி பொருள் கட்டுப் பாட்டுத்துறை விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் 996 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அனுமதியுடன் இயங்குபவை 731. மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்படுபவை 265.
இந்த பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 12-ந் தேதி நடந்த வெடி விபத்தில் 24 தொழிலாளர்கள் இறந்தனர்.
சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதே நாளில் வி.சொக்கலிங்காபுரத்தில் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து பட்டாசு ஆலைகளில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் விதிகளை மீறி செயல்பட்டதாக 41 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் விதிமீறல் இருந்தால் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இதற்காக அடிக்கடி சோதனை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைக்கும் பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் உரிமம் வாங்க வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. இதனால் பட்டாசு ஆலைகள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.
இதுபோன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், பட்டாசு ஆலைகளை பாதுகாக்கவும், தாங்களாகவே முன் வந்து விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை மூடுவது என ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 80 சதவீத பட்டாசு ஆலைகள் இன்று (8-ந் தேதி) முதல் மூடப்பட்டன. இதனால் அந்த ஆலைகளில் பணி செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இது குறித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் மகாலட்சுமி, செயலாளர் தேவா ஆகியோர் கூறுகையில், பட்டாசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றனர்.
சிவகாசி அருகே உள்ள பூவநாதபுரம் வடபட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்கிற கணேஷ்வரன் (வயது 30). இவர் சிவகாசி-ஆலங்குளம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் அருகில் வந்து கொண்டிருந்த போது அப்போது அங்கு வந்த காக்கிவாடன்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (43) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கணேஷ்வரனிடம் இருந்து ரூ.450 பறித்து கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.
இதேபோல் சிவகாசி அருகே உள்ள நல்லுத்தேவன்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (36) என்பவர் திருத்தங்கல்-கங்காகுளம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை திருத்தங்கலை சேர்ந்த மகேந்திரன் (37), சபரிகுமார் (40) ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 மற்றும் கைக்கெடிகாரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் திருத்தங்கல் அண்ணாகாலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (44). இவர் திருத்தங்கல்-விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள வடமலாபுரம் பாலம் அருகில் சென்ற போது அங்கு வந்த வினோத்கண்ணன் (35) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வினோத்கண்ணனை கைது செய்தனர்.
இதேபோல் திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த ராஜலிங்கம் (26) என்பவர் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த சாட்சியாபுரம் விநாயகர் காலனியை சேர்ந்த பாண்டியராஜன் என்கிற ஸ்டெல்லாபாண்டி (41) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300-யை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பாண்டியராஜனை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 12-ந்தேதி நடந்த வெடிவிபத்தில் 24 தொழிலாளர்கள் இறந்தனர். காயம் அடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதே நாளில் வி.சொக்கலிங்காபுரத்தில் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் உயிர் சேதம் இல்லை.
அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் நடந்ததால் அச்சங்குளம் விபத்து குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்தது. இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விதிகளை மீறி செயல்பட்டதாக 28 பட்டாசு ஆலைகளை சீல் வைத்தனர்.
மேலும் சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் 2 குழுக்கள் அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் 13 ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.
மேலும் விதிமீறல் இருந்தால் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இதற்காக அடிக்கடி சோதனை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைக்கும் பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் உரிமம் வாங்க வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. இதனால் பட்டாசு ஆலை அதிபர்கள் மிகவும் சங்கடத்திற்குள்ளாகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், பட்டாசு ஆலைகளை பாதுகாக்கவும் நாளை (8-ந் தேதி) முதல் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை மூடுவது என ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சில கிராமங்களில் அனுமதியின்றி வீடுகளிலும், காட்டுப் பகுதிகளிலும், ஷெட் அமைத்து பட்டாசு தயாரிப்பது நடைபெற்று வருகிறது. இது குறித்து வெம்பக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ராமராஜ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் சோதனை நடத்தினர். அப்போது வெம்பக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து (வயது 35), ஷெட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வெற்றிலையூரணி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தெற்கு ஆனைக்குட்டம் காட்டுப்பகுதியில் சோதனை நடத்தினார். அப்போது அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக கோமாளிபட்டியை சேர்ந்த முத்துராஜ், தெற்கு ஆனைக்குட்டத்தைச் சேர்ந்த முத்து கணேஷ், கருப்பசாமி, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கருப்பசாமி (29) கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 60 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான முத்துராஜ், முத்துகணேஷ், ஆகியோரை வெம்பக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் முத்து, (வயது 37). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது மனைவி முத்துமாரியுடன் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் இருவரும் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் செந்தில்முத்துவின் மனைவி முத்துமாரி பலியானார்.
இதை தொடர்ந்து செந்தில்முத்து தனக்கு நஷ்ட ஈடு தரக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நடுவர் நீதிமன்றம், விபத்தில் பலியான முத்துமாரி குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை மதுரை அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த தொகை வழங்காததால் செந்தில் முத்து தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மதுரை கோட்டத்திற்கு சொந்தமான 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
நேற்று காலை 2 அரசு பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தன. அங்கு வந்த கோர்ட்டு ஊழியர்கள் அந்த 2 பஸ்களையும் ஜப்தி செய்தார். அதில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவும் கலந்து கொண்டது. இந்த நிலையில் அங்கு அந்த யானையை பாகன்கள் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து யானை பாகன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து முகாமில் யானை ஜெயமால்யதாவை மற்ற பாகன்கள் பராமரித்து வந்தனர். இருந்தாலும் சரியாக உணவு அருந்தாமல் ஏக்கத்துடன் இருந்து வந்தது. இதனை கவனித்த புத்துணர்வு முகாம் அதிகாரிகள் ஆண்டாள் கோவில் யானையை மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் அனுப்ப முடிவு செய்தனர்.
அதன்படி தேக்கம்பட்டி முகாமில் இருந்து கிளம்பிய ஸ்ரீவில்லிபுத்தூர் யானை நேற்று கோவிலுக்கு வந்து சேர்ந்தது. யானை வந்து இறங்கியவுடன் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. யானைக்கு மாலை அணிவிக்கப்படடது. தக்கார் ரவிச்சந்திரன் யானைக்கு பழங்கள் கொடுத்து மேலும் தீப ஆராதனை காண்பித்து வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். யானை 5 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த பிப்ரவரி மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிகளை மீறி செயல்படக் கூடாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் விபத்து ஏற்பட்டது வருத்தமளிக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் சுமார் 800-க்கு மேல் உள்ளன. இந்த ஆலைகளை ஆய்வு செய்ய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல பட்டாசு ஆலை களில் ஆய்வு செய்தது.
இதில் மரத்தடியில் பட்டாசு தயார் செய்தது, அளவுக்கு அதிகமாக மருந்து இருப்பு வைத்திருந்தது, விதியை மீறி பட்டாசு தயாரிக்கும் அறையில் அளவுக்கு அதிகமாக பணியாளர்களை கொண்டு வேலை செய்தது உள்ளிட்ட பல விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு 11 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஆய்வு நடைபெறும்.
இல்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






