search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிலுக்கு திரும்பிய யானை ஜெயமால்யதாவை கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் வரவேற்றனர்
    X
    கோவிலுக்கு திரும்பிய யானை ஜெயமால்யதாவை கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் வரவேற்றனர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பிய ஆண்டாள் கோவில் யானை

    தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை திருப்பி அனுப்பப்பட்டதால், அந்த யானை கோவிலுக்கு வந்தடைந்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவும் கலந்து கொண்டது. இந்த நிலையில் அங்கு அந்த யானையை பாகன்கள் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து யானை பாகன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து முகாமில் யானை ஜெயமால்யதாவை மற்ற பாகன்கள் பராமரித்து வந்தனர். இருந்தாலும் சரியாக உணவு அருந்தாமல் ஏக்கத்துடன் இருந்து வந்தது. இதனை கவனித்த புத்துணர்வு முகாம் அதிகாரிகள் ஆண்டாள் கோவில் யானையை மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் அனுப்ப முடிவு செய்தனர்.

    அதன்படி தேக்கம்பட்டி முகாமில் இருந்து கிளம்பிய ஸ்ரீவில்லிபுத்தூர் யானை நேற்று கோவிலுக்கு வந்து சேர்ந்தது. யானை வந்து இறங்கியவுடன் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. யானைக்கு மாலை அணிவிக்கப்படடது. தக்கார் ரவிச்சந்திரன் யானைக்கு பழங்கள் கொடுத்து மேலும் தீப ஆராதனை காண்பித்து வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். யானை 5 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
    Next Story
    ×