என் மலர்
வேலூர்
- தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஒடுகத்தூர்:
ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையம், ராகவேந்திரா நகரைச் சேர்ந்த விஷ்னுகுமார் என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
இதனை கவனிக்காத விஷ்னுகுமார் குடும்பத்தினர். வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, வீட்டினிலும் பாம்பு ஊர்ந்து சென்றதை திடீரென பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சசிதரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் புகுந்த நாகபாம்பை லாவகமாக பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
- விளையாடி கொண்டிருந்தபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அல்லனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி கவுசல்யா. தம்பதியினருக்கு கிஷோர் ( வயது 3) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.
கவுசல்யா நேற்று முன்தினம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தார்.
வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது கிஷோர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கினான்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
வேலூர்:
சத்துவாச்சாரி ஒய்.ஆர்.எஸ்.எஸ். 2-வது தெருவை சேர்ந்தவர் கமால் (வயது 54). ஆட்டோ டிரைவர். இவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
டிரைவர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதனால் விரத்தி அடைந்த கமால் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கமால் பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கமால் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது
- இல்லத்தரசிகள் கவலை
வேலூர்:
தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் வேலூர் நேதாஜி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. வேலூர் மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது.
இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்கப்படுகிறது.
அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்குகின்றனர்.
- ரூ.2.50 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தர வின் பேரில், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட் சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், ஏட்டு சந்திரபாபு, காவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் குடியாத்தம் கஸ்பா அரசமர தெருவை சேர்ந்த விஷ்ணு என்ற வசீகரன் (வயது 21), மொய் தீன்பேட்டை பிரான் நகரை சேர்ந்த ஆசிம் (23) என்பது தெரியவந்தது.
இவர்கள் குடியாத்தம் நடுப்பேட்டை மற்றும் தரணம்பேட்டை பகுதிகளில் பைக் திருடியதும், தரணம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடை யில் 8 கிலோ செம்பு கம்பிகளை திருடியதும், அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட பைக் என்பதும் மேலும் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் கஸ்பா சுடுகாடு பகுதியில் மறைத்து வைத்திருந்த பைக்குகள், 8 கிலோ செம்பு கம்பிகளை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.2.50 லட்சமாகும்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்ணு, ஆசிம் ஆகியோரை கைது செய்தனர்.
- 2 நாட்கள் நடைபெறுகிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விண்ண ப்பங்கள் இணையத்தில் பதிவு செய்யும் பணி 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி கடந்த 24-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 68 ரேசன் கடைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 38 கடைகள், ஊராட் சிகளில் 312 கடைகள் என மொத்தம் 418 கடைகளுக்கு 397 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு முகாம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஒரே நேரத்தில் மக்கள் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே தெரு, நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக நடைபெற்று வரும் இந்த முகாமில் பதிவு செய்யாமல் விடுபட்ட மற்றும் விண்ணப்பபதிவு மேற்கொள்ளாத விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ள வருகிற 3 மற்றும் 4-ந் தேதி அந்த மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, விடுபட்ட அனைத்து குடும்ப அட்டை தாரர்களும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. பிரமுகர் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 38) இவர் பாஜக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகின்றார்.
இவர் கடந்த 23-ந் தேதி சமூக வலைதளத்தில் (பேஸ்புக்) வீடியோ ஒண்றுக்கு கமாண்ட் பன்னி தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் அவரின் குடும்பத்தாரை இழிவு படுத்தி அனுப்பியுள்ளார்.
இதனைப்பார்த்த ஒடுகத்தூர் தி.மு.க. பிரமுகர் பெருமாள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்து வேப்பங்குப்பம் போலீசார் தலைமறைவாக இருந்த விமல்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஒடுகத்தூரில் சுற்றி திரிந்த விமல்குமாரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ஒடுகத்தூரில் சர்சையை ஏற்படுத்தியது.
- ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் அழைத்து சென்றனர்
- பழுதடைந்த மலை கிராம சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த தீத்தானூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் ( வயது 17). இவர் கடந்த சில மாதங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
சந்தீப் ஜமுனாமரத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று புற நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்குள்ள டாக்டர்கள் சந்தீப்பை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி பரிந்துரை செய்துள்ளனர்.
சந்தீப் தனது சொந்த ஊரான தீத்தானூர் மலை கிராமத்திலிருந்து குடிகம் மலை, கத்தியப்பட்டுமலை, பெரியஏரியூர், ஒடுக்கத்தூர் வழியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி பைக்கில் சந்தீப் தனது பெற்றோருடன் குடிகம் வழியாக கத்தியப்பட்டு மலைகிராமத்தில் இருந்து இன்று காலை வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சந்திப்புக்கு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்தார்.
இது குறித்து அந்த மலை கிராம மக்கள் பீஞ்சமந்தைக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகன டிரைவருக்கு போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
பைக்கில் அழைத்து சென்றனர்
ஒரு மணி நேரம் கழித்து டிரைவர் சந்தீப் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். மலைகிராம சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் ஆம்புலன்ஸ் வாகனம் மலைப்பகுதியில் ஏறாது.
எனவே அவரை மலையடிவாரத்திற்கு அழைத்து வந்து விடுங்கள். அங்கிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்து ள்ளார்.
இதன் அடுத்து மலை கிராம மக்கள் அவரை மிகவும் சிரமத்துடன் பைக்கில், பெரிய ஏரியூர் மலையடிவாரத்திற்கு அழைத்து வந்ததனர்.
அவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அடுக்கம்பாறையில் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மலை கிராமங்களுக்கு அவசர நேரத்தில் உதவு வதற்காகவே ஆம்புலன்ஸ் சேவை தொடங்க ப்பட்டுள்ளது.
சரியான சாலை வசதி இல்லாததால் வானங்கள் சொல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் பழுதடைந்த மலை கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்
- கொடுங்கோல் அரசன் ஒருவன் கொன்றதை துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது
வேலூர்:
வேலூரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், கர்பலா போரில் நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைன் மற்றும் அவரின் குடும்பத்தினரை பட்டினியிட்டு கொடுங்கோல் அரசன் ஒருவன் கொன்றதை துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி இன்று வேலூர் சைதாப்பேட்டை, பிடிசி சாலை ஆகிய இடங்களில் ஷியா இஸ்லாமியர்கள் மார்பில் கத்திபோட்டு ரத்தம் சொட்ட, சொட்ட புனித போரில் ஹுசைன் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் தங்களை தாங்களே வருத்திக் கொண்டு மொகரம் பண்டிகையை அனுசரித்தனர்.
மேலும் முக்கிய வீதிகளில் இஸ்லாமிய பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
- உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்தாரா?
- போலீசார் விசாரணை
வேலூர்:
சென்னை, திருநின்றவூர், கோமதிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 41). இவர் காட்பாடி ரெயில் நிலையத்தில் வணிகப்பிரிவில் கிளர்க்காக வேலை செய்து வந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த முத்துக்குமார் நேற்று முன்தினம் காட்பாடி ரெயில்வே யார்டுக்கு எதிர்ப்புறத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமார் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தப்ப முயன்ற போது கை முறிந்தது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பாஷா, பெயிண்டு கடை உரிமையாளர்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர், இவரை செல்போ னில் தொடர்புகொண்டு, வசூர் ராஜா பேசுவதாகவும், ரூ. 3 லட்சம் தர வேண்டும் என்று கூறினார். பணம் தரவில்லை என்றால் உன்னையும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, பாஷா, தனது கடை ஊழி யர் சலீம் என்பவருடன் தனியார் ஷூ கம்பெனிக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
அப் போது, அவர்களை காரில் பின்தொடர்ந்து வந்து மடக் கிய வசூர் ராஜா, அவனது கார் டிரைவர் வெங்கடே சன் ஆகியோர், கத்தியைக் காட்டி, "நாளை உன் கடைக்கு வருவேன்.
ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்து வை, இல்லை யென்றால் இந்த முறை கண்டிப்பாக கொலை செய்து விடுவேன்" என மிரட்டியதோடு, அவரிட மிருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சத்து வாச்சாரி போலீசில் பாஷா புகார் அளித்தார். இதையடுத்து வசூர் ராஜா பெருமுகையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரையும் அவருடன் இருந்த வெங்கடேசனையும் பிடிக்க முயன்றனர்.
அப்போது தப்பி செல்ல முயன்ற வசூர் ராஜா தவறி கீழே விழுந்தார். அதில் அவரது வலது கையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தொடர்ந்து அவரையும், வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன குமார் (வயது 30). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தனகுமார் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த புது வசூரை சேர்ந்த வசூர் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் சந்தன குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.11, 500 -ஐ பறித்தனர்.
இதுகுறித்து சந்தன குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரிலும் போலீசார் வசூர் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சப்- கலெக்டர் உத்தரவு
- உடனடியாக புதிய பணியிடத்தில் சென்று சேர வேண்டும்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி பீஞ்சமந்தையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த குணராஜ் அணைக்கட்டுக்கும், நந்திவர்மன் கீழ்கிருஷ்ணா புரத்தில் இருந்து வெட்டுவா னத்திற்கும், முனிரத்தினம் பொய்கையில் இருந்து பள்ளிகொண்டாவுக்கும், தமிழ்அரசு பூதூரில் இருந்து கீழாச்சூருக்கும், அபிலாஸ் சின்னபள்ளிக்குப்பத்தில் இருந்து ஒடுகத்தூர் மற்றும் பீஞ்சமந்தைக்கு கூடுதல் பொறுப்பு, கார்த்தி கீழாச்சூரிலிருந்து செதுவாலைக்கும், சிவமூர்த்தி ஒடுக்கத்தூரிலிருந்து கருங்காலிக்கும், தமிழழகன் அணைக்கட்டில் இருந்து திப்பசமுத்திரத்திற்கும், ஞானசுந்தரி பள்ளி கொண்டாவில் இருந்து பொய்கைக்கும், தங்கமுத்து வெட்டு வாணத்தில் இருந்து பூதூருக்கும், கிருஷ்ணவேணி கருங்காலியிலிருந்து கீழ்கிருஷ்ணாபுரத்திற்கும், குமரேசன் மேல்அர சம்பட்டில் இருந்து சின்ன பள்ளிக்குப்பத்திற்கும், அன்பு செதுவாலை யிலிருந்து மேல்அரசம்பட்டுக்கும் பணியிடமாற்றம் செய்து வேலூர் சப்-கலெக்டர் கவிதா உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பணியிட மாற்றம் செய்யப்ப ட்டவர்கள் உடனடியாக புதிய பணியி டத்தில் சென்று சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






