என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selling at Rs.120 per kg"

    • தொடர் மழையால் விளைச்சல் குறைந்தது
    • விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை

    வேலூர்:

    தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் , தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் வீழ்ச்சியடைந்தது, விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வேலூர் நேதாஜி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. வேலூர் மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது .

    இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.170 முதல் ரூ.190 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் உழவர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததால், வியாபாரிகள் தக்காளிகளை ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்தனர். புள்ளி விழுந்த மற்றும் பாதி அழுகிய தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் அழுகிப்போன மற்றும் ஓட்டை தக்காளிகள் கூட விற்பனை செய்தனர். தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்குகின்றனர். 

    • போலீசார் திடீர் சோதனை
    • மருந்து, மாத்திரைகளை பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர். தன்வீர் உள்ளிட்ட குழுவினர் மதனஞ்சேரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த குகன் (வயது 26) என்பவர் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    ×