என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
- தாயார் இறந்த வேதனையில் பரிதாபம்
- மன உளைச்சலில் காணப்பட்டார்
வேலூர்:
வேலூர் அடுத்த மூஞ் சூர்பட்டு கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 27). இவர் 5 ஆண்டுக்கு முன் ஆரணி எஸ்.வி. நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை திரு மணம் செய்துகொண்டு அங்கேயே வசித்து வந்தார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். மேலும், ராதிகா 5 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்தார்.
இந்த நிலையில், மூஞ் சூர்பட்டில் உள்ள ராதிகா வின் தாயார் சுமதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தாய் சுமதியை உடனிருந்து
கவனித்துக்கொள்ள ராதிகா கடந்தவாரம் ஆரணியில் இருந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று மருத்துவ மனையில் சுமதியை உடனிருந்து கவனித்து வந்தார்.
கடந்த 29-ந்தேதி காலை சிகிச்சை பலனின்றி சுமதி இறந்து விட்டார். தாய் இறந்ததால் ராதிகா மன உளைச்சலில் காணப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து வேலுார் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராதிகா உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






