என் மலர்
நீங்கள் தேடியது "Dr. Badugayam"
- நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த முருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 54). கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.
இன்று அதிகாலை முருகம்பட்டு கிராமத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி தனது பைக்கில் சேகர் சென்று கொண்டிருந்தார். கீழ் ஆலத்தூர் அருகே வரும்போது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக்கை போட்டார்.
அப்போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி சேகர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கே வி குப்பம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






