என் மலர்
நீங்கள் தேடியது "ஊருடன் இணைவு"
- ஊரை விட்டு ஒதுக்கிய விவகாரம்
- மீண்டும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னஎட்டிபட்டு மலை கிராமத்தில் முத்து, பொன்னுசாமி, நாகராஜ், சுந்தரேசம் ஆகிய 4 குடும்பங்கள் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு சின்னசாமி என்பவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் முத்து, பொன்னு சாமி ஆகிய 2 பேரையும் வேப்பங்குப்பம் போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவர்கள் இருவரின் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2 மாதத்திலேயே 2 பேரையும் நிரபராதிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
இதனையடுத்து, சிறை சென்று வந்ததால் முத்து மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட 4 குடும்பங்களை நாட்டாமை (ஊரான்) பழனி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு ஒதுக்கிவைத்தார்.
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கிராமத்திற்குள் நுழையாமல், நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் சுப, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அகதிகள் போல் இவர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நாட்டாமை பழனி பணம் கேட்டு மிரட்டி துன்புறுத்துவதாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேப்பங்குப்பம் போலீசில் கண்ணீர் மல்க புகார் செய்தனர்.
இது குறித்து செய்தி நமது மாலை மலர் நாளிதழில் வெளியிடப்ப ட்டது. இதன் எதிரொலியாக இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று 2 தரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது குற்றச்செயலாகும் இனி இது போன்று நடக்காமல் பாத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் நீங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது சட்டபடி குற்ற மாகும்.
இதுதொடர்பாக இனி எந்த ஒரு புகாரும் வரக்கூடாது. மீண்டும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரு தரப்பினரிடமும் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டார்.
இதையடுத்து இருதரப்பினரையும் கைகுலுக்கி சேர்த்து வைத்தார். இதனையடுத்து அனைவரும் மகிழ்ச்சியாக சொந்த ஊர் திரும்பினர்.






