என் மலர்tooltip icon

    வேலூர்

    • பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடு பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதனால் மாணவி இன்று பள்ளிக்கு வரவில்லை.

    மேலும் இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்து புகார் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பள்ளிக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர் போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.

    இதனால் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி தடை
    • மின் அதிகாரி தகவல்

    வேலூர்:

    சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சத்துவாச்சாரி பேஸ் - 1, 2, 3, 4, 5 மற்றும் அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாபேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதபட்டரை, இ.பி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    • ரூ.71.15 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டது
    • நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது

    வேலூர்:

    வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் நவீன வசதிகளுடன் விமான நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக விமான ஓடுதளம், தகவல் மற்றும் தொலை தொடர்பு கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், தங்கும் விடுதி, கார் பார்க்கிங், ஹோட்டல், பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வே விரிவுப்படுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்-தார்சாலை வருவதால் அந்த சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதற்கு மாற்றாக விமான நிலையத்தின் அருகே ரூ.71.15 கோடியில் புதிய சாலை அமைக்கப்பட்டது. தற்போது, விமான நிலையத்திற்கு தடுப்பு வேலி, உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், விமான நிலையத்திற்கு செல்லும் சாலை, இரு வழி சாலையாக உள்ளது.

    விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்லும் என்பதால், 2 வழி சாலையை, 4 வழி சாலையாக மாற்ற மாநில நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

    இதையடுத்து, 4 வழி சாலையாக மாற்ற ரூ.71.80 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    • அதிகாரிகள் தகவல்
    • சிறுதானியங்களையும் விற்பனை செய்தனர்

    வேலூர்:

    வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற் பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத் திற்கு வேலூர், அணைக் கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம் பட்டு, பென்னாத்தூர் உள்ளிட்ட இடங்கள் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவ யிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மற்றும் உணவு தானியங்களை கொண்டு வந்து விற் பனை செய்கின்றனர்.

    நேற்று ஏடிடி, கோ 51, ஹெச்எம்டி, ஆர்.என் ஆர், மகேந்திரா, நர்மதா, அமோகா, ஸ்ரீ, அம்மன், சுவேதா ஆகிய நெல்ரக மூட்டைகள் விற்ப னைக்கு கொண்டு வரப் பட்டது.

    அதேபோல், சிறுதானியங்களான மணிலா, கொள்ளு, கேழ் வரகு, கம்பு, உளுந்து, மணி பூவங்காய், தேங் காய் ஆகியவற்றை விவ சாயிகள் விற்பனை செய்தனர்.

    இதற்கிடையில், இன்று காலை முதல் வேலூர், அணைக்கட்டு, சோழவ ரம், ஊசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசா யிகள் நெல் மூட்டைகள் விற்பனை செய்ய வேலூர் ஒழுங்கு முறை விற்பனைகூடத்திற்கு அதிகளவில் கொண்டு வந்தனர்.

    தற்போது நெல் ரகங்களுக்கு அதிக விலை கிடைப்ப தால், விவசாயிகள் விற்ப னைக்கு கொண்டு வருவ தாக விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வியாபாரிகள் குவிந்தனர்
    • கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்தது

    வேலூர்:

    வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை என்றும் மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட் டது. இதனால் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்.

    உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப் பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றனர்.

    வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவ சாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலை யில் கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்து ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாடு கள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடு கள், ஜெர்சி கலப்பின பசுக் கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்ப னைக்கு வந்தது.

    இதனால் இன்று மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மனைவி போலீசில் புகார்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி அருகே உள்ள உண்ணாமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 44), கூலித் தொழிலாளி.

    இவர், 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலம் வழியாக நடந்து சென்றார்.

    அப்போது, நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விருத்தம் பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் தண்டபாணி உடலை மீட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவ மைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரமாரியாக அடித்ததால் மயங்கி விழுந்தான்
    • போலீசார் ரோந்து சென்றாலும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறையவில்லை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு கிராமத்தில் 2000-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.

    இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதி மக்கள் தூக்கமின்றி அச்சத்தில் தவித்தனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் செய்தும் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக இருந்தது.

    இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்றாலும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறையவில்லை.

    இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் கிராமங்களில் உள்ள தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் புதுத் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் மர்ம நபர் கையில் இரும்பு கம்பியுடன் நடமாடுவது கேமராவில் பதிவானது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு ஆங்காங்கே பொதுமக்கள் மறைந்திருந்து மர்ம நபர்களை கண்காணித்தனர்.

    அப்போது நள்ளிரவு 1.45 .மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டில் மாடியில் ஏறி சென்றதை கண்டனர்.

    உடனே சத்தம் போட்டபடி திரண்ட பொதுமக்கள். மர்ம நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    இதனால் அந்த நபர் மயங்கி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வேலூர் தாலுகா போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விசாரணையில் அந்த நபர் காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (வயது 52) என்பதும்,

    இவருடன் மேலும் 3 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    கடந்த ஒன்றரை மாதமாக பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் சவாலாக இருந்த திருடன் பிடிபட்டதால் கிராம மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    • அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரியில் விழா நடந்தது
    • குழந்தை கடத்தல் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை

    வேலூர்:

    அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூர் வந்தார்.

    அவருக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அணைக்கட்டு தாலுகா பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விதமாக கல்வெட்டினை திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவில் வைட்டல் பே தனிப்பிரிவு தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களையும் பொருத்தினார்.

    பின்னர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் பலத்த பாதுகாப்பு இருக்கும் நிலையில் அறிமுகம் இல்லாத நபர் எப்படி உள்ளே நுழைந்து குழந்தையை கடத்தி சென்றார் என்பது குறித்து குழு அமைத்து டாக்டர்கள், பணியாளர்கள், உள்ளிட்ேடார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலபடுத்தப்படும் என்றார்.

    • வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அவலம்
    • கழிவறைகளை இலவசமாக பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை

    வேலூர்:

    வேலூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்9.25 எக்டேர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இது ரூ.53.13 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.

    இங்கு 84 பஸ் பிளாட்பாரங்கள் , 83 கடைகள், 3 உணவு விடுதிகள், 11 காத்திருப்பு அறைகள் மற்றும் 2 லிப்ட்கள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஓய்வு அறைகள் மற்றும் சாய்வுதளங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் அருகே பல அடுக்கு வாகன நிறுத்துமிடமும் உள்ளது.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் 560-க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் பெங்களூரு, கோயம்புத்தூர், சென்னை, சேலம், திருப்பதி, புதுச்சேரி மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே இயங்கும் தனியார் பஸ்கள் நிறுத்தும் இடமாக இந்தப் புதிய பஸ் நிலையம் உள்ளது

    சராசரியாக, தினமும் 75,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இங்கு 1,200-க்கும் மேற்பட்ட பஸ் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சுகாதாரமற்ற குடிநீர் , கட்டண கழிப்பறைகள் , இரவு நேரங்களில் தங்குவதற்கு ஓய்வு அறைகள் இல்லாதது போன்றவைகளால் போக்குவரத்து ஊழியர்கள், குறிப்பாக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பாதிக்கப்படு கின்றனர்.

    மேலும் அங்குள்ள கழிவறைகள் தனியார் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்படுகிறது. இதனால் பணியாளர்கள் இலவசமாக பயன்படுத்து வதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்தநிலையில் பஸ் பணியாளர்களுக்கு கழிப்பறைகளை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவு றுத்தினார். இருப்பினும் இலவசமாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 பேர் உயிர் தப்பினர்
    • சாலை எங்கும் கொய்யாக்காய் சிதறி ஓடியது

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே கொய்யாக்காய் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி சாலையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.

    பள்ளிகொண்டா பார்த்தசாரதி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 50) இவர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தள்ளு வண்டியில் கொய்யா வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் வெயில் காரணமாக மாற்று இடத்திற்காக கொய்யாகாய் விற்பனை செய்ய தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை தள்ளி சென்றார்.

    வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த சொகுசு கார் கொய்யாக்காய் தள்ளு வண்டி மீது வேகமாக மோதியது. இதில் தள்ளுவண்டி உருக்குலைந்த நிலையில் சாலை எங்கும் கொய்யாக்காய் சிதறி ஓடியது.

    விபத்தில் காரில் இருந்த தொழிலதிபர் பிரகாஷ் (50) மற்றும் கொய்யாக்காய் வியாபாரியான பழனி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • 50 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருவதாக வேதனை
    • தரைமட்ட மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்படி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சுகொண்டா புரம் ஊராட்சி, மேதலபாடி கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்களில் யாரேனும் இறந்தால் அவர்களை புதைப்பதற்காக மேதலப்பாடி வழியாக செல்லும் கமண்டல நாகநதி ஆற்றின் வழியாக சென்று ஆற்றின் மறுகறையில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது.

    மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயத்தில் இறந்தவர்களின் உடலை தண்ணீரில் சிரமத்துடன் தூக்கி சென்று அடக்கம் செய்கின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    நாகநதி ஆற்றை கடந்து செல்ல தரைமட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மேதலபாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ரேவதி பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

    ஆற்றில் தற்போது தண்ணீர் செல்வதால் உடலை தோள் மீது சுமந்தபடி ஆற்று தண்ணீரில் இறங்கி, சிரமத்துடன் கடந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

    • பல மாதங்களாக பயனற்று கிடக்கிறது
    • பொதுமக்கள் குற்றச்சாட்டு

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    கருத்தடை செய்து கொள்வதற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த பத்மா என்பவர், சூரியகலாவின் ஆண் குழந்தையை கடத்திச் சென்றார்.

    இதனையடுத்து போலீசார் 8 மணி நேரத்தில் குழந்தையை காஞ்சிபுரத்தில் மீட்டு, பத்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தற்போது 2 கட்டிடங்களில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் சித்தூர் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தினமும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

    இங்கு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரே பதிவில் கொண்ட டேக் பொருத்தப்படும்.

    இந்த டேக் மகப்பேறு கட்டிடத்தில் முக்கிய வாயிலில் நிறுவப்பட்டுள்ள ஆர்.எப்.டி. சென்சார் கருவி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஆர்.எப்.டி. (ரேடியோ ஃப்ரீகுவன்சி டெக்னாலஜி மற்றும் ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடென்டிபை) டேக் பொறுத்தப்பட்ட குழந்தை அல்லது தாய் கட்டிடத்தை விட்டு வெளியேரினால் தானியங்கி மூலம் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். அதன் மூலம் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லவோ? அல்லது குழந்தையை கடத்தி செல்லவோ முடியாது.

    இந்நிலையில் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஆர்.எப்.டி. என்ற தொழில் நுட்ப கருவி முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பழைய மகப்பேறு கட்டிடத்தில் மட்டுமே இந்த ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் இன்னும் பொருத்தப்படவில்லை. மேலும் பழைய கட்டிடத்தில் உள்ள ஸ்கேனர் கருவியும் பல மாதங்களாக பழுதாகி பயனற்று கிடக்கிறது.

    இதனால்தான் குழந்தை கடத்தப்பட்ட போது, அதனை தடுக்க முடியவில்லை. எனவே உடனடியாக ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவியை பழுது பார்ப்பதோடு, புதிய கட்டிடத்திலும் ஆர்.எப்.டி. கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×