search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus transportation"

    • சந்திரபாபு நாயுடு கைதால் போராட்டம்
    • 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன

    வேலூர்:

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.

    மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.

    மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    ஆந்திராவில் முழு கடையடைப்பு காரணமாக ஆந்திர, மாநில எல்லையான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் இன்று காலை வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டன.

    தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி, காளஹஸ்தி, உள்பட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    ஆந்திராவில் மதியம் 12 மணிக்குமேல் இயல்பு நிலை திரும்பியது. இதனையடுத்து வேலூர் - திருப்பதி பஸ் போக்குவரத்து 6 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது.

    இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ஆந்திர பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

    திருப்பதியில் இருந்து தமிழத்துக்கு 12 மணிக்கு பிறகு பஸ்கள் ஓட தொடங்கின. இதனால் தவித்த பக்தர்கள் நிம்மதி பெருமூச்சுடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    • பஸ் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டதால் ஆத்திரம்
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

    வேலூ:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நஞ்சுகொண்டாபுரம் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

    பாகாயம், கணியம்பாடி, பெரிய பாலம்பாக்கம், ஏ.டி.காலனி, அருந்ததியர் காலனி, கிருஷ்ணாவரம் வழியாக செல்லும் இந்த அரசு பஸ் வழித்தடம் கடந்த சில நாட்களாக மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நஞ்சுண்டாபுரம் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினர்.

    ஆனால் பஸ் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யும் வளர நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #keralafloods
    செங்கோட்டை:

    தமிழக, கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக தினமும் 24 மணி நேரமும் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்று வருகின்றன. இந்த பாதையில் கோட்டைவாசல் தாண்டி ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடி முதல் தென்மலை வரை மலைப்பாதையாகும். மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகள் இதில் உள்ளன.

    தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்று வருவதால் இந்த வழியில் அடிக்கடி சாலை பழுதாகும். அதை அடுத்து இந்தச் சாலைகளை கேரள மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்துக்கும் அதிகமான அளவு இந்தப் பகுதிகளில் பெய்து வருவதால் கல்லடா தென்மலை 13 கண் பாலம் அருகே சாலையில் விரிசல் உருவாகி அருகிலுள்ள கல்லடா ஆற்றில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதனைக் கருத்தில் கொண்டு கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட நிர்வாகம் இந்த சாலையில் கனரக வாகனங்கள் 10 டன்னுக்கு அதிகமான அளவு கொண்ட பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை பாதை சரி செய்யும் வரை தடை செய்ய உத்தரவிட்ட‌து. இந்த விரிசல் அதிகமானதால் சிறிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் கன மழையினால் பலத்த சேதம் உண்டானது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. லட்சக்கணக்கானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டன. மழை வெள்ளம் காரணமாகவும் அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மழை வெள்ளம் குறைந்ததையடுத்து மீண்டும் கேரளாவுக்கு இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியது. எனினும் சாலையில் விரிசல் ஏற்பட்ட பகுதிவழியே பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து செங்கோட்டை பகுதியில் இருந்து செல்லும் பஸ்கள் எம்சன் பகுதிக்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடவும், அங்கிருந்து 200 மீட்டர் தூரம் பயணிகள் நடந்து சென்று மறுபுறம் பஸ் ஏறி செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. #keralafloods
    ×