search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் - திருப்பதி பஸ் போக்குவரத்து 6 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது
    X

    வேலூர் - திருப்பதி பஸ் போக்குவரத்து 6 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது

    • சந்திரபாபு நாயுடு கைதால் போராட்டம்
    • 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன

    வேலூர்:

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.

    மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.

    மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    ஆந்திராவில் முழு கடையடைப்பு காரணமாக ஆந்திர, மாநில எல்லையான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் இன்று காலை வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டன.

    தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி, காளஹஸ்தி, உள்பட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    ஆந்திராவில் மதியம் 12 மணிக்குமேல் இயல்பு நிலை திரும்பியது. இதனையடுத்து வேலூர் - திருப்பதி பஸ் போக்குவரத்து 6 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது.

    இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ஆந்திர பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

    திருப்பதியில் இருந்து தமிழத்துக்கு 12 மணிக்கு பிறகு பஸ்கள் ஓட தொடங்கின. இதனால் தவித்த பக்தர்கள் நிம்மதி பெருமூச்சுடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    Next Story
    ×