என் மலர்
நீங்கள் தேடியது "நைவேத்தியத்தை படையலிட்டு நோம்பு இருந்தனர்"
- ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை
- பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற்றனர்
வேலூர்:
தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், செல்வ வளம் பெருகவும், சகல ஐஸ்வரியங்களையும் பெறவும் வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பவுளர்ணமி தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது .
திருமணமான பெண்களும், திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தைக் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதன்படி இன்று காலை நல்ல நேரமாக குறிப்பிடப்பட்ட 9 மணி முதல் 10.30 மணிக்குள் பெண்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பெண்கள் கலசம் செய்து அதனுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு உள்ளிட்டவர்களை வைத்து சர்க்கரைப் பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை உள்ளிட்ட நைவேத்தியத்தை படையலிட்டு நோம்பு இருந்தனர்.
மேலும் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், நோன்புக்கயிறு, வளையல்கள், வெற்றிலை பாக்கு, ரவிக்கை துணி உள்ளிட்டவர்களை கொடுத்து ஆசி பெற்றனர்.






